- நான் சிறிய குழந்தை.என் கைகளும் விரல்களும் ரொம்ப சிறியது.வலுவானவையும் அல்ல.எதனையும் உங்களைப்போல் அழகாக நன்றாகச் செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்!!
- என் கால்கள் சின்னவை மட்டும் அல்ல,வலிமையானவையும் அல்ல.என்னை உங்களுடன் அழைத்துச்செல்லும்போது மெதுவாக நடந்து செல்லுங்கள்.உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்கமுடியாது.
- என் கண்கள் மிகச்சிறியவை.உங்கள் கண்ணுக்கு எட்டுவது எல்லாம் என் கண்ணுக்கும் எட்ட வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
- என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பேசி என் மனதில் வெறுப்பு உணர்ச்சியை வளர்க்காதீர்கள்.நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.என்னை கேவலமாக பேசாதீர்கள்.ஏனென்றால் என் மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.
- நான் ஏதாவது கேள்வி கேட்டால் கோபித்துக்கொள்ளாதீர்கள்.நான் நிறைய தெரிந்து கொள்ளவிரும்புகிறேன்.தயவு செய்து பொறுமையாக,எளிதாக எனக்கு பதில் கூறுங்கள்.
- நான் தவறு செய்தால்,குறை கூறி தண்டிக்காதீர்கள்.தவறை எடுத்துக்கூறி என்னை திருத்துங்கள்.அப்போதுதான் எது தவறு,எது சரி என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.
- விடுமுறை நாட்களில் என்னை உறவினர் வீட்டில் விட்டு விட்டுச்செல்லாதீர்கள்.நான் உங்களுடன் தான் பொழுதைக்கழிக்க விரும்புகிறேன்.எனக்கு உங்கள் அன்பும்,அரவனைப்பும் நிறையத்தேவை.
- நீங்கள் எனக்கு நல்ல முன் உதாரணமாக இருங்கள்!உங்களைப்பின்பற்றித்தான் நான் வளர விரும்புகிறேன்.
- இறைவன் உங்களுக்கு கொடுத்த பரிசாக என்னை நினைத்து,நன்றாகப் பாதுகாத்து,நான் வளர விரும்புகிறேன்.
- எனக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷமாக உங்களை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
இப்படிக்கு
உங்கள் செல்லக்குழந்தை
நபி ஸல் அவர்கள் பெற்றோரைப்பார்த்து கூறுகிறார்கள்:
அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்.
(நூல்:புகாரி-5997)
சமீபத்தில் சகோதரி ஒருவரின் உறவினர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த வீட்டில் ஐந்து வயதில் ஒரு குட்டி பையன் இருந்தான்...அமைதியாக இருந்தான்...எங்களிடம் பேசவில்லை.
வெளியே மழை பெய்தது...அவனுடைய தாத்தா வெளியே செல்லும்போது தானும் வருகிறேன் என அடம்பிடித்தான்....அவர் மழை பெய்கிறது நீ வர வேணாம் என விட்டு விட்டு சென்றுவிட்டார்...
அரைமணிநேரம் விடாது அழுகை...
நான் அவனுடைய அம்மாவிடம் அவனைப்பற்றிக்கேட்டேன்...
அவனுக்கு ஸ்கூல் ஒரு வாரம் லீவு...வீட்டுல வச்சு சமாளிக்கமுடியலைனு ரொம்ப வருத்தப்பட்டாங்க.
அவனுக்கு விளையாட துணைக்கு ஆள் இல்லையா என்று?என்நாத்தனார்பையனோடவிளையாடுவான்.ஆனால்,கொஞ்ச நேரத்துல ரெண்டுபேரும் சண்டை போடுறாங்க....அதான் அங்க நான் விடுறதில்லைனு சொன்னாங்க.அவனுக்கு நீங்க துணைக்கு தம்பி பாப்பா பெற்றுக்கொடுத்தா என்னனு கேட்டேன்....சிரிச்சாங்க...
அவனை எங்கேயாவது பக்கத்தில் பார்க்,பீச்,உறவினர் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்களேன்னு சொன்னேன்.அதுக்கெல்லாம் எங்க டைம் இருக்கு..வீட்டு வேலையே சரியா இருக்கு என்று சொன்னார்கள்.
அவனுக்கு பெயிண்டிங் பண்ண பிடிக்குமா?பிடிக்கும்னு சொன்னாங்க.அதையாவது செய்ய சொல்லலாமேனு சொன்னேன்.
க்ளே வச்சு ஏதாவது பொம்மை செய்ய சொல்லுங்களேன்....அவனுக்கு ஏதாவது பொழுதுபோக்கு வேணும்ல..கேட்டதற்கு,
அது எல்லாம் ஸ்கூல்லயே சொல்லி கொடுப்பாங்க....னு
அவனுடைய அம்மா பதில் சொன்னாங்க....
அதிகமான வீடுகளில் இதுதான் நிலைமையாக உள்ளது...
விளையாடும் பருவத்தில் வீட்டிற்குள் அடைத்துவைப்பது பிள்ளைகளுக்கு மனரீதியாக அழுத்தத்தை தரும்...
வீட்டில் கண்டிப்பாக பிளாக் போர்ட்,சாக் பீஸ் கொடுத்து
எழுத சொல்லுங்களேன்..பிள்ளைகளுக்கு ஆளுமைத் திறமை வளரும்....
நீங்க ஆசையா வாங்கி கொடுத்த காரை பையன் உடைச்சிட்டானா
கவலைப்படாதீங்க....வேற வாங்கி கொடுங்க...
பொம்மையை தண்ணிக்குள்ள போட்டுட்டானா....!!!
வேற வழியே இல்லை...
புதுசு வாங்கிதான் கொடுக்கணும்...
அது அப்படியே இருக்கணும்னா அப்ப அந்த பொம்மை கடையிலதான் இருக்கணும்...விலை கொடுத்து வாங்க கூடாது...
களிமண்ணில் பொம்மை செய்வது,கிளே பொம்மை செய்வது,கிராப்ட் வொர்க்,பெயிண்டிங் போன்றவை குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருபவை....
நமக்கு எப்படி மனதில் உள்ளதை எழுத்தின் மூலம் பதிவாக எழுதும்போது மனதில் உள்ளதை இறக்கி வைத்த சந்தோசம் ஏற்படுகிறதோ
குழந்தைகளுக்கு அவையெல்லாம் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும்...
அந்த காலத்தில் வீட்டுக்கு அரை டஜன் பிள்ளைகளாவது இருப்பார்கள்...
அடிச்சு விளையாடிக்கொண்டாலும் ஒன்றாய் சேர்ந்தும் கொள்வர்...
என்ன திண்பண்டமாக இருந்தாலும் பகிர்ந்து உண்ணும் பழக்கமும் இருந்தது...அண்ணன் சட்டையை தம்பி போடுவதும்,அக்காவின் பாவாடையை தங்கை உடுத்துவதும் குடும்பத்து கஷ்டத்தை உணர்ந்து
விட்டுக்கொடுக்கும் பழக்கம் நம் தலைமுறையிடம் இருந்தது...
இப்ப உள்ள வீடுகளில் விளையாட ஆள் இல்லாமல் ஒரு ஆண் பிள்ளை,ஒரு பெண் பிள்ளை உள்ள வீடுகளில் பிடிவாதம் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் புலம்புகின்றனர்...
பிள்ளைகளுக்கு விளையாட சரியான ஆள் கிடைத்துவிட்டால் போதும்..
எங்கு சுவரைக்கண்டாலும் ஏறிக் குதிக்கும் சில வாண்டுகளை
பார்க்கிற்கு கண்டிப்பாக அழைத்துச்சென்று கம்பி வளையங்களில் தொங்க விட்டால் போதும்...குஷியாகி விடுவர்....
சில வீடுகளில் 3 அல்லது 4 ஆண்களுடன் பிறந்த 1 பெண்ணை செல்லமாக
வளர்ப்பதால் மற்ற பெண்களின் உணர்வு அந்த பெண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.....
3அல்லது 4 பெண்களுடன் பிறந்த 1 ஆணுக்கு இன்னொரு ஆணின் உணர்வுகள் தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது...
ஒரு ஆண்,ஒரு பெண் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கின்றனர்....
அக்காலத்தில் ஒரு மேரி கோல்ட் பிஸ்கட் வாங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆளுக்கு 2 கொடுப்பார்கள்....
ஆனால்,இப்பொழுதோ கண்ணில் கண்டதெல்லாம்
வாங்கி கொடுப்பதால் அதன் அருமை பிள்ளைகளுக்கு தெரிவதில்லை....
அதிக செல்லம் கொடுக்கப்படும் பிள்ளைகள் கஷ்டத்தை உணராததால்
பிடிவாத குணம் உடையவர்களாகவும்,பின்னாளில் இப்பிரச்சினை
வாழ்க்கைத்துணையிடமும் எதிரொலித்து திருமணவாழ்க்கை உடைய காரணமாக உள்ளது....
பி்ள்ளைகளுக்கு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கண்டிப்பாக பழக்குங்கள்..
எதற்கெடுத்தாலும் படிப்பு,ஹோம் ஒர்க் என மிரட்டாமல் கொஞ்சி பேசுங்கள்....பிள்ளைகள் நம்மிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்...
பாவம் குழந்தைகள்...விளையாட அனுமதியுங்கள்....
Tweet | ||||||
குழந்தைகளின் வேண்டுகோள்களாகளாகச்
ReplyDeleteசொல்லிச் சென்றவை அருமையிலும் அருமை
பெற்றோர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் அடங்கிய அருமையான பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
Deleteகுழந்தைகள் பச்ச மன்னு என்று
ReplyDeleteசொல்வார்கள் நாம் எப்படி அதை பிசைஞ்சாலும் நம் விருப்பபடி வரும் அதே போண்று குழந்தைகளும்
குழந்தைக்கு அன்பை காட்டி அரவனைக்க வேண்டும்
உண்மைதான்....
Deleteஎதை நாம் விதைக்கிறோமோ அதையே பெற்றுக்கொள்வோம்...
அன்பு,தொடுதல்,பாசத்தையும் தொடர்ந்து கொடுப்போம்
இதில் பல விடயங்கள் எனக்கு நடந்துள்ளன நான் அப்போது இவற்றை அம்மாவிடம் கூற முனைந்துள்ளேன் முடியாது போனது...
ReplyDeleteஉண்மைதான் சகோதரரே...
Deleteஒவ்வொரு தாயிடமிருந்தும் சரியான அளவில் அன்பும்,பாசமும் கிடைத்துவிட்டால் குழந்தை மிகுந்த தன்னம்பிக்கை உடையதாக இருக்கும்.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தான்.
ReplyDeleteஅருமையான பதிவு.
நன்றி.
கருத்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி:-)
DeleteGood one !!!
ReplyDeletethanks sako:-)
Deleteஆஹா! எப்படிங்க இப்படி? ஒரு குழந்தையாகவே மாறி எழுதியிருபிங்களா????
ReplyDeleteஅருமையான பதிவு மிகவும் ரசித்தேன்.
நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வரவும்.
fathima yusra from srilanka
ReplyDeleteமாஷh அள்ளாஹ்......
அருமையான பதிவு.......
வார்த்தைகள் இல்லை புகழ்வதற்கு..............
தாயின் கருத்தாக என் அருமைக் குழந்தையே என்ற பதிவை வாசித்துவிட்டு இதனை வாசித்தேன்....
தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் ஆவண்டும் உரிமை உண்டு என்பது ஆபால் இருந்தது.....
உண்மையில் ஒவ்வொரு தாயும் தனது குழந்தையின் உளவியல் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கையிலே....அது நல்லவராவதும தீயவராவதும் அண்னை வளர்ப்பினிலே