Tuesday, December 11, 2012

என் அருமைக் குழந்தையே....

என் உயிரின் மறு உருவமாக உன்னைக் கருதுகிறேன்.
ஒரு மனிதன் இறக்கும்போது அவன் படும் வேதனை 60 டால் என அளவீடுகள் கொண்டு விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.
ஆனால்,ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும்போது
படும் வேதனையின் அளவு 70 டால் ஆகும்.

என்னுடைய முழு உலகமாக உன்னை நினைக்கிறேன்.
உன்னுடைய குறும்புகளையும்,சேட்டைகளையும் நான் ரசிக்கிறேன்.
நீ என்னை “அம்மா’’ என்று மழலையில் அழைக்கும்போது என் வாழ்க்கையே பூரணம் அடைந்ததை காண்கிறேன்.

நீ பள்ளிக்கு சென்று முதல் மாணவனாக வருவது மட்டுமல்ல 
என் நோக்கம்.நல்ல மகனாக,நல்ல சகோதரனாக,நல்ல மாணவனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.உன் சகோதரர்களுக்கும்,சக மாணவ,மாணவியருக்கும்,வயது முதிந்தவர்களுக்கும் உன்னால் 
முடிந்த உதவிகளைச் செய்.

படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற முயற்சி செய்.
படைத்த இறைவனை வணங்குவதில் முழு ஈடுபாட்டோடு இரு.
உன் தந்தை உனக்கு கற்பிக்கும் நல்லொழுக்கங்களை பின்பற்று.
ஏனெனில்,தந்தைக்கு கட்டுபட்டவன் படைத்த இறைவனுக்கு கட்டுபட்டவனாவான்.

உன்னுடைய பதின் பருவத்தில் நல்ல நண்பர்களுடன் 
தொடர்பு வைத்துக்கொள்.கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் சீரழிவு,சீர்கேடுகளின் அருகே கூட நெருங்காதே!

பள்ளிப்பருவம் முடிந்த பிறகு பயனுள்ள கல்வியை கற்றுக்கொள்.
தொலைத்தொடர்பு சாதனங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்து.
அவற்றைக்கொண்டு நன்மையை ஏவி,தீமையைத்தடு.அப்போது உனக்கு ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்.அதுவே வீரமிக்க காரியமாகும்.

இளமைப்பருவத்தில் உன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும்போது இறைவனின் கட்டளையைப்பின்பற்று.உன் தாய்,தந்தையான எங்களுக்கு இறைவனின் அருளை வேண்டி தினமும் பிரார்த்தனை செய்.

இறைக்கட்டளைக்கு ஒரு போதும் மாறு செய்யாதே...
இதைப்படித்த பின் இனி வரும் காலங்களில் உன் 
பிள்ளைகளுக்கு இவ்விஷயங்களை எடுத்துச் சொல்.

எங்களிடம் கண்ணியமாகவும்,அன்புடனும் நடந்து கொள்.வயதான காலத்தில் எங்களின் இயலாமையால் உனக்கு சிரமம் தரும்போது பொறுத்துக்கொள்.எங்கள் இறைவா!என் பெற்றோரின் பாவங்களை மன்னிப்பாயாக....என்று தினமும் பிரார்த்தனை செய்வாயாக.



                                                                                          என்றும் அன்புடன்....                                                                                   
                                                                                        உன் செல்ல அம்மா.     

11 comments:

  1. மாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள பதிவு அனைவருக்கும் அவசியமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோ....

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.

    இவ்வளவு சிறிய பதிவில் இவ்வளவு விசயங்களை சொல்ல முடியுமா.....!

    முதலில் தாயின் அருமையை அழகாக உணர்த்தி பின்பு ஒரு தாய் தான்
    மகனுக்கு அறிவுரை கூறுவது போல் கொன்று சென்ற விதம் அருமை.

    நான் பதிவை படிக்கும் பொது என் தாய் எனக்கு அறிவுரை கூறுவது போல்
    எண்ணி என்னை ஒப்பிட்டு பார்த்தேன்.இன்ஷா அல்லாஹ் நான் நிறைய
    மாற வேண்டி உள்ளது.

    உங்கள் பதிவுகளில் ''நீங்கள் ரமழான் முஸ்லிமா? '' என்ற பதிவுக்கு
    பிறகு பிறகு நான் மிகவும் ரசித்த பதிவு.

    இன்ஷா அல்லாஹ் இது போன்று தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. என் முதல் பதிவை நினைவுட்டியதற்கும்,
      மிக விரிவாக கருத்திட்டதற்கு நன்றி சகோ....:)

      Delete
  3. ஹீ ஹீ ஹீ !!! சூப்பர் பதிவு ரசித்தேன்.

    ReplyDelete
  4. மாஷா அல்லா.. அருமை சகோ .. இப்படி ஒரு தாய் இருந்தால் நன்மையை ஏவி தீமை தடுக்க ஒவ்வொரு குழந்தையாலும் முடியும் .. சுவர்க்கம் நிரம்பி வழியும் ... இன்ஷா அல்லா

    ReplyDelete
  5. fathima yusra.....from Sri lanka

    மாஷh அள்ளாஹ்......
    அருமையான கவிதை...........
    சொந்தத் தாயின் அறிவுரை கேட்டது போல் இருந்தது.
    பெண்மைக்கு பெருமையாக உள்ளது.....

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது