Thursday, December 6, 2012

விளம்பர வெறி

விளம்பரங்கள் தொழில் போட்டிக்கு மட்டும்தான் பயன்படுத்திய காலம்மலையேறி போய் இப்பொழுது மருத்துவ வியாபாரத்திற்கும்,பருப்பு விற்பதற்கும்,முகத்தின் நிறத்தை (அதிகப்படுத்துவதாக சொல்லப்படும்)பூச்சு விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.



சில விளம்பரங்களில் சிலர் டாக்டராக வந்து இந்த பருப்பை வாங்குங்கள் என்றும்,இன்னும் சில டாக்டர்கள்  எங்க ஹாஸ்பிடலில் கண் வைத்தியம் பாருங்கள் என சொல்வார்கள்.உண்மையிலேயே இவங்க டாக்டரோ என நினைத்தால் அடுத்த விளம்பரத்தில் அரைகுறை ஆடையில் குளியல் சோப்புக்கும்,சேலை விளம்பரத்திற்கும் 
வந்து ஆடிப் போவார்கள்.
இந்த போலி டாக்டரையெல்லாம் யாரும் கைது 
பண்ண மாட்டாங்களா..??


சமீபத்தில் ஒரு பெண்கள் மாதமிருமுறை வரும் இதழ் ஒன்றை பார்த்து அதிர்ச்சி அடைந்துதான் போனேன்.அதில் ஒரு பக்கம் விட்டு ஒரு பக்கத்தில் முழு புத்தகமும் பெண்கள் சம்பந்தப்பட்ட முகப்பூச்சு,உள்ளாடை,சாம்பார் பொடி விளம்பரம்தான்...

பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தொடர் என ஒரு பக்கம் கதை சொல்லிவிட்டு அடுத்த பக்கம் பெண்களின் சதையை வியாபார பொருளாக சித்தரிக்கும் உள்ளாடை விளம்பரம்...

ஒரு பக்கம் பெண்களின் முகத்தில் ஆசிட் ஊற்றுபவர்களை வன்மையாக கண்டித்துவிட்டு அடுத்த பக்கம் ஆண்களை பின் தொடர வைக்கும் பேரழகிற்க்கு என்று ஒரு பிரபல முகப்பூச்சு கம்பெனியின் விளம்பரம்.

அந்த விளம்பரத்தில் ஒரு அரைகுறை ஆடை அணிந்த 
பெண் பின்னால் ஆறு இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். 
இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் அதிபரோ அல்லது விளம்பரத்தை எடுத்த டைரக்டரோ அல்லது இந்த பத்திரிக்கை ஆசிரியரொ இப்படி தன் மகள் பின்னாடியோ,அல்லது சகோதரி பின்னாடியோ இத்தனை ஆண்கள் பின் தொடர்கிறார்கள் என சொல்லப்படுவதை விரும்புவார்களா...????

விளம்பரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் வக்கிரமனம் படைத்தவர்கள் எப்படி பெண்கள் முன்னேற்றதிற்காக பத்திரிக்கை நடத்துகிறோம் என வாய் கூசாமல் சொல்லுகிறார்களோ தெரியவில்லை....???

சில விளம்பரங்களில் குழந்தைகளை குறி வைத்து சாக்லேட்,பிஸ்கட்,ஐஸ்கிரீம் என வியாபாரம் செய்யும் சுயநல 
கும்பல்.பாலில் கலந்து கொடுக்கப்படும் அந்த மாவு விற்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இலவச பொருள்.
நம் மக்களும் வாயை ஆ வென பிளந்து கொண்டு அதை வாங்கி கொடுப்பார்கள்.

இதுல முட்டை வடிவத்தில் உள்ள பிளாஸ்டிக் உருளையில் மிகச்சிறியதாக  ஒரு வகை திண்பண்டம் இருக்கும்...அது விலை மட்டும் 35 ருபாய் இருக்கும்.எனக்கு தெரிந்த எத்தனை பிள்ளைகள் அதை கேட்டு தன் தாய்மார்களிடம் அழுது பிரண்டிருப்பார்கள் தெரியுமா...?
நடுத்தர வர்க்க தாய்மார்களோ அதுக்கு ஒரு கிலோ அரிசி வாங்கிடலாம்னு சொல்வாங்க....விளம்பரத்தில் பார்ப்பதை எல்லாம் தாய் வாங்கித்தரவில்லையென்றால் பிள்ளைகள் விரோதிகளாக பார்க்கின்றனர்.

பத்திரிக்கை தர்மம் என ஒன்று சொல்வார்கள்...
அது என்னனு தெரியலை.பெண்களையும்,குழந்தைகளையும் 
வியாபார பொருளாக சித்தரிக்கும் இவர்களுக்கு என்னுடைய 
 மிகக் கடுமையான கண்டங்கள்.

7 comments:

  1. இந்த போலி டாக்டரையெல்லாம் யாரும் கைது
    பண்ண மாட்டாங்களா..??

    நானும் இதைப்பற்றி சிந்தித்தது உண்டு, ஆனால் எங்கே சொல்வது யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை, சபாஷ்! நீங்களாவது சொல்லிட்டீங்களே!

    ReplyDelete
  2. Replies
    1. சகோ.உண்மைகள் நீங்கள் சுட்டிக்காட்டிய லிங்க்கில் உண்மையே இருந்தது

      Delete
  3. தொலைக்காட்சியில் இளம் வாலிபர்களை நல்லது சொல்லர தாத்தாபோல் வந்து திட்டிதீர்த்து ஆண்மைக்குறைவு உள்ளதாக பயமுறுத்தி கோடிக்கணக்கில் பணம் பார்த்த கயவனை மறந்துவிட்டீர்களே.

    ReplyDelete
  4. உங்கள் கட்டுரைகளில் உள்ள சமூக அக்கறை சிறப்பானது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. fathima yusra from Srilanka

    உங்கள் சமூக அக்கறை தொடர்பான கருத்துக்களுக்கு நன்றி..
    தொடரட்டும் உமது எழுத்துப்பணி

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது