Friday, September 28, 2012

அன்பு






ஆதி மனிதன் முதல் கடைசி 
மனிதன் வரை அனைவருக்கும் 
தேவைப்படுவது அன்புதான்...
பணக்காரனாக இருந்தாலும்,
ஏழைத் தொழிலாளியாக 
இருந்தாலும்
உழைத்துக் களைத்து விட்டு
வரும்போது அன்பைச் சொரியும்
உள்ளங்களைததான்
தேடுவார்கள்....
எவ்வளவு பணம் சம்பாரித்தாலும்
எங்கே ஊர் சுற்றினாலும்
“நமக்குனு ஒரு வீடு.....
நமக்காக காத்திருக்கும்,நம்மை காணோம் என
பதை பதைத்து தேடும் அம்மாவோ,மனைவியோ வாய்த்துவிட்டால் ”.......
அதை சொல்ல வார்த்தைகள் இருக்கா என்ன??
சில வீடுகளில் தாயும்,பிள்ளையும் அல்லது கணவனும்,மனைவியும்
எலியும்,பூனையுமாக இருப்பார்கள்.
ஆனால்,நமக்கு உடம்பு சரி இல்லையென்றால் அவர்கள் நம்மிடம் காட்டும்
அக்கரை,பிரியம் எல்லாம் அதிகமாகும்....சே....இவங்களா போயா இப்படி நினைச்சோம்னு நினைக்க வைப்பாங்க...
இன்னும் சில பேர் இருப்பாங்க....
தன் குடும்பத்தினர் மீது அன்பு,பாசம் எல்லாம் டன் கணக்குல வச்சிருப்பாங்க....
ஆனா,எப்படி வெளிக்காட்டணும்னு தெரியாது...
எப்ப பார்த்தாலும் இஞ்சி திண்ட குரங்கு போல உர் ருன்னு இருப்பாங்க....
வாயைத் திறந்தால் மனசைக் கிழிக்கும்
வார்த்தைகளைத் தான் கொட்டுவாங்க...
அப்டி இருக்கிறது நமக்கும் நல்லது இல்ல...
நம்மை சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லது இல்லை...
அன்புகிறது மல்லிகைப்பூ மாதிரி...
அதை மூடி வச்சா வாசம் வெளியே போகுமா??
சோ,அன்பை வெளிக்காட்டகூடிய செயல்களை நாம செய்யணும்...
நம்ம பையன் ரொம்ப சேட்டை பண்றானா.....?
அவண்ட எப்டி அன்பை வெளிக் காட்டுறது?
அன்பாக தலையை கோதிவிடலாம்.
ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கும்போது கன்னத்தில்
முத்தமிட்டு அனுப்பி வைக்கலாம்.
செல்லம்,தங்கம்,அறிவு,ராஜானு என்ன வார்த்தைகள்
தெரியுதோ அதை வச்சு கொஞ்சலாம்...
பசங்க வீட்டில் நமக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்ணினாலும்
கண்டிப்பா பாராட்ட மறந்துடாதிங்க...
சர்பிரைஸா கிஃப்ட் கொடுக்கலாம்.....
நாம் எவ்ளோ அன்பை வெளிப்படுத்தறோமோ அதே அன்பு
நமக்கும் கண்டிப்பா கிடைக்கும்....
இன்னும் நிறைய இருக்கு....
இது போல வாழ்க்கைதுணையிடமும் அன்பை வெளிக்காட்டுனோம்
என்றால் லைஃப் கண்டிப்பா ஜொலிக்கும்....
மீண்டும் வருவோம்ல........