Tuesday, December 25, 2012

எவரும் செய்யலாம் ஏற்றுமதி


திரைப்படங்களில் காட்டுவதைப்போல ஏற்றுமதி
என்பது மிகப்பெரிய பணக்காரர்களுக்கும்,மெத்தப்படித்த,
ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர்களுக்கும்
மட்டுமே உரிய தொழில் என்கிற தாழ்வு
மனப்பான்மையுடன் இன்றைய இளைஞர்களில்
பலர் இருக்கின்றனர்
.

உண்மை இதற்கு நேர்மாறானது.ஏற்றுமதியை வீட்டில்
வைத்துக்கூட யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.
பெரிய படிப்பெல்லாம் வேண்டாம்.முதலீடு அதிகம்
தேவையில்லை.ஆங்கிலம் தெரியாவிட்டாலும்
வெற்றி பெற முடியும் என்பதுதான் எதார்த்தம்,
உண்மை,நடைமுறை.

இந்த உண்மைகளை தமிழ் இளைஞர்களுக்கு
எடுத்துச்சொல்லி அவர்களின் பயத்தைப் போக்கி
யார் வேண்டுமானாலும் ஏற்றுமதித் தொழிலில்
வெற்றி பெற முடியும் என்பதை
சகோதரர்.வீ.அரிதாசன்B.E,M.B.A அவர்கள்
ஆலோசனை அளித்து வருகிறார்....

திரை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செல்வம் சேர் என
முன்னோர்கள்கூறியுள்ளனர்.ஆனால்,வெளிநாடுகளுக்கு
வேலைக்கு செல்வதற்குமட்டும் ஆர்வம் காட்டும் தமிழ்
இளைஞர்கள்ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட ஆர்வமுடன்
இன்றுவரைமுன்வரவில்லை என்பதே உண்மை.

121கோடி மக்கள் தொகை உள்ள நம் இந்திய தேசத்திலே
சுமார் 2 லட்சம் பேர்கள்மட்டுமே ஏற்றுமதியாளர்களாக
பதிவு செய்திருப்பவர்கள்.தமிழகத்தில் இந்த எண்ணிக்கை
வெறும் 3,000 என்கிற அளவில்தான் உள்ளது.

இதற்கு காரணம் என்ன?ஏற்றுமதித் தொழில் பற்றிய
போதிய விழிப்புணர்வு நம் இளைஞர்களிடத்தில்
இல்லை என்பதே...பொறியியல் மற்றும் நிர்வாகவியல்
முதுநிலை மற்றும் வேளாண்மை சார்ந்த
பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவர்,
ஏற்றுமதியையும்வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்....

புதிய தலைமுறை இதழில் வெளிவந்த இவரது கட்டுரைகளைப்
படித்த பலர்தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இவரைதொடர்பு
கொண்டு வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர்...
வீ.அரிதாசன்.
செல்பேசி:9444146807

அவர்களில் தஞ்சையை சேர்ந்த ஷேக் முஹம்மதும் ஒருவர்.
அவர் தனது வெற்றி வாய்ப்பை பற்றி கூறுகிறார்.

“என் பெயர் ஷேக் முஹமது.தஞ்சை மாவட்டம்.தஞ்சை
 மாவட்டம்அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவன்.
சவுதி அரேபியாவில்சுமார் பத்து ஆண்டுகளுக்கும்
மேலாக பணியாற்றி வந்தேன்.
வெளிநாட்டில் ரொம்ப நாள் இருந்து விட்டோம்.
இனி இந்தியா திரும்பிஏதாவது தொழில் செய்து நாட்டிலேயே
இருந்து விட வேண்டும்எனநினைத்துக்கொண்டிருப்பேன்.

மனைவி,குழந்தைகளோடு சேர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணம் என்னைப்போன்று வெளிநாடுகளுக்கு
வேலை தேடி வரும் பெரும்பாலானோருக்கு உண்டு.

அப்படி நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான்
புதிய தலைமுறை வார இதழில் அரிதாசன் அவர்கள் எழுதிவந்த
ஏற்றுமதி செய்வது பற்றிய தொடர் என் கண்ணில் பட்டது.
ஏற்றுமதி என்றால் யாரோ பெரிய பெரிய பணக்காரர்களுக்கு
உரிய தொழில்,நாமெல்லாம் செய்ய முடியாது என நினைத்துக்
கொண்டிருந்த எனக்கு அந்த தொடரைப் படிக்க படிக்க
அச்சம் நீங்கி,தைரியம் வரத்தொடங்கியது

நாமும் நிச்சயம் ஏற்றுமதி செய்து,மிகப்பெரிய அளவில் வளர வாய்ப்பு
கிட்டும் என்ற நம்பிக்கை என் மனதில் துளிர் விடத்தொடங்கியது.
‘புதிய தலைமுறை’அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவரது தொலை
பேசி எண்களை பெற்று என் முழு விவரங்களையும் எடுத்துச் சொன்னேன்
‘தமிழகம் வரும்போது என்னை நேரில் வந்து பாருங்கள்’எனக்கூறினார்.

எனக்கு ஏற்பட்ட நம்பிக்கை துளிர் மேலும் வளரத்தொடங்கியது.
அவர் கூறியபடியே சென்னை வந்தவுடன் நேரில் அவர் அலுவலகத்திற்கு
புதிய தலைமுறையின் அனைத்து இதழ்களையும் கையில் வைத்துக்கொண்டு
சென்றேன்.ஏற்றுமதி பற்றி அவர் எழுதிய தொடரே என்னை ஊக்கப்படுத்தியது
என்றால் அவரை நேரில் சந்தித்துப் பேசிய போது மேலும் மேலும் நம்பிக்கை
வளர்ந்து கொண்டே போனது.

ஏற்றுமதி பற்றிய அவர் பல்வேறு விவரங்களையும்
கூறிக்கொண்டே வந்தார்.அவரின் அறிவுரைப்படியே செயல்பட ஆரம்பித்தேன்.இந்தியாவின் மிக அருகில் உள்ளஇலங்கையில் உள்ள கொழும்புவுக்கு ஒருமுறை நேரில் சென்று வாருங்கள் என்றார்.

பத்தாயிரம் ருபாயில் சென்று வரமுடியும் என்பதால் சென்று பார்த்தேன்.
அங்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றன எனத்தெரிந்து கொள்ளத்தான்அங்கு நான் போனேன்.ஆனால்,அங்கிருந்த பல்வேறு வடிவ மரச்சாமான்களும்மரப்பொம்மைகளும் குறைந்த விலையில் கிடைப்பதைக் கண்டு அதிசயித்தேன்.  ”

முதலில் சுமார் இருபது ஆயிரம் பெருமான பொம்மைகளை
அங்கிருந்து நம் நாட்டிற்கு சிறிய அளவில் இறக்குமதி செய்து
வணிகம் பார்த்தேன்.நேரடியாக விற்றதால் மூன்று மடங்கு
லாபம் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

படிப்படியாக உய்ர்ந்து இப்போது மாதம் சுமார் ஒரு லட்ச ருபாய்
மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்று வருகிறேன்.
மனமகிழ்வோடு போதிய வருமானம் கிடைப்பதால் என் மனைவியும்
வெளிநாட்டுக்கு போக வேண்டாம் என கூறிவிட்டார்.

குடும்பத்தைப் பிரிந்து எங்கோ வேலை பார்த்து
கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த என்னைப்
போன்ற சாதாரணமானவர்களை கூட வெற்றிகரமான
ஏற்றுமதி,இறக்குமதிவணிகத்தில் ஈடுபடவைத்தது
புதிய தலைமுறையில் வெளிவந்த
அரிதாசன் அவர்களின் தொடர்தான்....

ஷேக் முஹம்மது
அம்மா பேட்டை.
தஞ்சாவூர் மாவட்டம்.
செல்:94424 01583

வீ.அரிதாசன் அவர்கள் எவரும் செய்யலாம் ஏற்றுமதி என்ற
புத்தகத்தில் இதைப்பற்றிய முழு விவரங்களும் குறிப்பிட்டுள்ளார்..
புதிய தலைமுறை பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.

7 comments:

  1. சலாம் சகோதரி,

    மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.என்னைப் போன்ற இலைங்கர்களுக்கு இந்த பதிவு அவசியமானதும் கூட.எனக்கும் ஊரோடு வந்து செட்டில் ஆகி விட வேண்டும் என்ற ஆசை உள்ளது.

    இன்ஷா அல்லாஹ் அதற்குண்டான முயற்சிக்கு இந்த பதிவு எனக்கு பெரிதும் உதவும்
    சகோதரர் v.அரிதாசன் அவர்களின் தொலைபேசி என்னை save செய்து விட்டேன்.இன்ஷா அல்லாஹ் இந்திய வரும்பொழுது அவரை தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ....
      வெளிநாட்டில் வாழும் சகோதரர்களுக்கு இப்பதிவு பயன்படும் நோக்கத்திலேயே இதை பதிந்தேன்..நன்றி:)

      Delete
  2. நன்றி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது