Monday, December 24, 2012

மிஸ்டர்.கமல்ஹாசன் உங்களுக்கு என்னுடைய கேள்வி...???


கொச்சி, டிச. 24-
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பங்கேற்றார். அப்போது அவரிடம், டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டது தொடர்பாகவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக்கோரி நடந்து வரும் போராட்டம் தொடர்பாகவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, பதிலளித்து நடிகர் கமலஹாசன் கூறியதாவது:-

சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன்.

தவறு செய்தவர்களுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், ஒரு குற்றத்தை இன்னொரு குற்றத்தின் வாயிலாக கையாள்வது சரியல்ல. மரண தண்டனை என்பதே, சட்டத்தின் மேற்பார்வையில் நடக்கும் கொலைதான்.

இது நேற்றைய செய்தி....
படித்ததும் ஒவ்வொரு பாமர மனிதனுக்கும் 
இரத்தம் கொதிக்கும் விஷயம் இது....
இவர் என்ன நாட்டை காப்பாற்ற கஷ்டப்பட்ட 
சுதந்திரப்போராட்ட தியாகியா...??இல்லை....
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரா...???
இவரிடம் போய் கருத்து கேட்பதற்கு என்ன உள்ளது...???

அது எப்படியாம்....????மறுபடியும் கேளுங்க....
சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். 
நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். 
பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.
தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். 
இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன். 

மிஸ்டர்.கமல்ஹாசன் உங்களுக்கு என்னுடைய கேள்வி...???
இதே கொடுமை தங்கள் மனைவிக்கோ,மகளுக்கோ 
ஏற்பட்டால் உங்களால் இதே பதிலை கூற முடியுமா...???
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் தனக்கு அந்த  நிலை 
ஏற்பட்டால் என்ன செய்வோமோ அதைத்தான் பிறருக்கும் 
விரும்ப வேண்டும்....

உங்களுடைய இந்த அறிவற்ற கருத்தை கேட்டு
தாங்கள் பிறந்த ஊரான பரமக்குடியில் பிறந்த நான்
வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்...அவமானப்படுகிறேன்....

உண்மையில் உங்களின் கருத்துகள் சிரிப்பை வரவழைக்கிறது.....
என்  பஸ் என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டேன்.
என் சகோதரன்,என் சகோதரி என்று வாய் 
நிறைய சொல்ல ஈஸியாகத்தான் இருக்கும்.
பாதிக்கப்பட்ட பெண் தங்கள் சகோதரி,
தவறு செய்த தங்களின் சகோதரருக்கும்
உங்கள் சொத்தில் பாதி பங்கை எழுதி வைப்பீர்களா...???

தாங்கள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களின் சகோதரர்கள்...அவர்களிடம் இனிமேல் சம்பளம் வாங்காதீர்கள்.
உங்கள் படம் பார்க்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்
உங்கள் சகோதரர்கள்...அவர்களிடம் டிக்கெட்டுக்கு பணம் கேட்காதீர்கள்..
தங்கள் படத்தின் உரிமையை கோடிக்கணக்கில் பணம் வாங்காமல் தொல்லைக்காட்சிகளுக்கு
இலவசமாக கொடுங்கள்...ஏனென்றால் அனைவரும் 
உங்கள் உங்கள் உங்கள் சகோதரர்கள்.... 

ஆகவே,தயவு செய்து நாட்டுக்கு ஏதும் நல்லது 
பண்ணவில்லையென்றாலும் நானும் கருத்து 
சொல்கிறேன் பேர்வழி என்று தயவு செய்து தயவு செய்து
உபத்திரவம் பண்ணாதீர்கள்...

16 comments:

  1. நல்ல சட்டையடி கேள்விகள் சகோதரி


    சகோதரன் கமல்ஹாசன் அவர்களே உங்கள் சகோதரன் உங்கள் படத்தை திருட்டு விசிடி வெளியிட்டாலும் அவர்களுக்காக சந்தோஷப்படுங்கள். :)

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கும் சிறப்பான கட்டுரை .

    ReplyDelete
  3. வர வர கமல்ஹாசனை எனக்கு பிடிக்கவே இல்லை! இவரெல்லாம் இந்தியனா என்று கேட்க தோன்றுகிறது.

    ReplyDelete
  4. சினிமாவில் மட்டுமல்ல.... நிஜ வாழ்விலும் வில்லனாகவே வாழ்கிறார் கமல்.

    ReplyDelete
  5. ஒரு வேளை அவர் மன்னித்துவிடலாம் அடிக்கடி மனைவியை மாற்றும் அவருக்கு இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல... மேலும் அவரது மன்மத லீலை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்... அதனால் இதைப்பற்றி கருத்து சொல்லும் தகுதி அவருக்கு இல்லை.....

    மேலும் அவரது கருதது அறிவற்றதும் கடும் கணடனத்துக்குரியதும் ஆகும்

    ReplyDelete
  6. //நல்ல சட்டையடி கேள்விகள் சகோதரி//
    Ask your share of the properties belong to NIZAM. He says that you are his sister..

    ReplyDelete
  7. தோழி[எதுக்கு வம்பு?],

    மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்,

    சகோ என்று அழைக்கும் மோசடிக்காரர்களை அம்பலப் படுத்தியதற்கு நன்றி!!

    என்னை சகோ என் அழைத்து ஒருவர் கூட சொத்து கொடுக்கவில்லை.
    குறிப்பாக மார்க்க பந்துக்கள் ம்ம்ம்ம்ம்ம்ம் வச்சுக்கறேன்!!
    ***

    உடனே உங்கள் சகோதரன் நிஜாமுக்கு சொத்தில் பாதி எழுதிவையுங்கள்,அல்லது பாதி எழுதி வாங்கவும்.

    இனி மார்க்க பந்துக்கள் யாராவது சகோ என்று சொல்லும் முன்னால் பாதி சொத்து எழுதிக் கொடுத்து பதிந்த பத்திரம் அதன் ஸ்கான் பதிவில் இட வேண்டும்.

    காஃபிர்களே மூமின்களை சகோ என்றால் பாதி சொத்து கேட்பார்கள்
    ஜாக்கிரத்தை!!
    ஹி ஹி.

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. சகோ.சார்வாகன்

      ஒரு நல்ல குடும்பத்தில் ஒரு தறுதலை இருந்தால் அந்த குடும்பத்து தலைவர் என்ன சொல்வார்.."உன்னை எல்லாம் என் புள்ளைன்னு சொல்லவே வெட்கமா இருக்கு " என்பார்...அனால் கமல்காசன் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவனையே சகோதரன் என்கிறாரே அதனால்தான் அவரை வாழ வைக்கும் உங்களை போன்றோருக்கு சொத்தை எழுதி வைப்பாரா ? என்பதுதான் கேள்வி..அந்த கயவனும், உங்களை போன்றோரும் ஒன்று இல்லை தானே..அதனால்தான் வேறுபாட்டுக்கு அவ்வாறு கூறப்பட்டது...மற்றபடி யாரையும் சகோதரராக நினைக்கலாம்..அந்தமாதிரி கேசுகளில் நீங்கள் சிக்கும் வரைகூட நீங்களும் சகோ.தான் (ஹி..ஹி..சும்மா.)அதனால் வருத்தம் வேண்டாம்..

      நன்றி !!!

      Delete
  8. கமல் சொல்வதில் பெரிதும் தவறிருப்பதாய் எனக்குப் படவில்லை. அந்த 6 கயவர்களைக் கொல்வதால் மட்டும் எல்லாப் பெண்களுக்கும் உடனடியாப் பாதுகாப்புக் கிடைத்துவிடுமா?

    இந்த மாதிரி செயல் செய்யும் படி அந்தக் கயவர்கள் உருவானதற்கு இந்த சமூகமும் நம் "கலாச்சாரம்" -மும் காரணம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இந்தக் கோணங்களிலும் கருத்துப் பரிமாணம் நடந்தால்தான் பெண்களுக்கு முழு பாதுக்காப்புக் கிடைப்பதற்கான விடை கிடைக்கும். அதைதான் கமலுடைய பதில் உணர்துவதாய் எனக்குப் படுகிறது.

    "உன்னுடய அக்கா, தங்கச்சி, மனைவி, தாய்" என்று கேட்பதெல்லாம் வெறும் வீதாண்டா வாதத்தில்தான் முடியுமே தவிர எந்த பிரச்சனைக்கும் முடிவு கிடைப்பதற்கு எந்த உதவியும் செய்யாது.

    ReplyDelete
  9. Kamal is not good for his family, not fit for Society
    He is always money minded

    ReplyDelete
  10. சரி சரி சில் அவ்ட் மேடம்:)

    ReplyDelete
  11. நாட்டில் பலர் அவர்கள் கருத்துக்களைச் சொல்லத்தான் செய்வார்கள். அவர் இரசிகர்கள் விரும்புவார்கள். அதை நீங்கள் எப்படி உபத்திரம் பண்ணாதீர்கள் என்றெழுத முடியும்?

    பதிவைப்போட்டு அக்கருத்துகளை பலர் படிக்கும்படி செய்து அக்கருத்துகளை பிரபலமடையச்செய்துவிட்டீர்கள். த‌வ‌றில்லையா? நீங்க‌ள் சொல்லித்தான் என‌க்கு தெரிகிற‌து!

    அவர் கருத்துகளின் பொருள் உங்களுக்குப் பிடிபட்டதாகத் தெரியவில்லை. என் புரிதலின்படி, அவற்றின் பொருள்:

    நாமெல்லாரும் இந்திய‌ர்க‌ள் என்றால், இப்ப‌டிப்ப‌ட்ட‌ குற்ற‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌த‌ற்கும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ குற்ற‌வாளிக‌ள் உருவாவ‌த‌ற்கும் நாமும் ஒருவ‌கையில் கார‌ண‌மே. குற்ற‌ங்க‌ள் செய்ப‌வ‌னும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரும் இந்திய‌ர்க‌ள். பிரித்துப்பார்க்க‌முடியாது. தீவிர‌வாதிக‌ளைப்போல‌: ஒருவ‌ர் பாகிஸ்தானி; இன்னொருவ‌ர் இந்திய‌ர் என்று. என‌வே இது ந‌ம் பிர்ச்சினை. நாம் ஒன்று கூடி இத‌ற்குத் தீர்வு காண்போம்.

    இதுதான் உள்ளுறை பொருள்.

    குற்றங்களை ஆராய்ந்து குற்றவாளிகள் உருவாக்கப்படும் கரணிகளைக்களைந்தால் மட்டுமே நல்ல சமூகம் உருவாகும். உணர்ச்சி வசப்படுபவர்கள் ஆராய மாட்டார்கள். அவர்கள் குற்றங்கள் உருவாகத் துணை அவர்களையறியாமலே போகிறார்கள்.

    உங்க‌ளைப்போன்ற‌ ப‌திவாள‌ர்க‌ள் குற்றங்க‌ள் தொட‌ர‌த் துணை செய்கிறார்க‌ளெல‌னாம‌ தாராள‌மாக‌. அறிவு வாழ‌வைக்கும். உண‌ர்ச்சி வாழ்வை அழிக்கும்.

    செய்தித்தாள்க‌ளின்ப‌டி, சில‌ ச‌மூக‌விய‌லாள‌ர்க‌ள் சொன்னது என்னவென்றால்: குடும்ப‌த்தில் ஆண் - பெண் வ‌ள‌ர்ப்பு முறையில் மாற்ற‌ம் தேவை. ஆணுக்குப் பெண் இளைப்பு என்ற‌ உண‌ர்வு குழ‌ந்தைப்ப‌ருவ‌த்திலே பெற்றொர் விதைக்க‌ அவ‌ன் பெரிய‌வ‌ன் ஆன‌தும், பெண் ஒரு போக‌ப்பொருள்; த‌ன்னிச்சைக்கு வ‌ராவிட்டால் அவ‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ற கொடூரச் சிந்த‌னைக்கு அடிமையாகிறான்.

    வ‌ட‌நாட்டு ஆட‌வ‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் என்கிறார்க‌ள். நீங்க‌ள் தில்லியில் வாழ்ந்திருந்தால் ம‌ட்டுமே உங்க‌ளுக்குப் புரியும் ப‌ர‌ம‌க்குடியும் தில்லியும் வெவ்வேறான‌வை.

    அச்சிந்த‌னையை ஒழிக்க‌ என்ன‌ செய‌லாம் எனச் சொல்லுங்கள். உங்க‌ள் ம‌ன‌சாட்சியைக்கேளுங்க‌ள். ஆண்பிள்ளையானாலும் ஜான் பிள்ளைதான் என்றுதானே உங்க‌ள் பைய‌னை வ‌ள‌ர்ப்பீர்க‌ள். அதாவ‌து பெண் ம‌ட்ட‌மென்றுதானே அவ‌ன் நினைப்பில் ஊரும்?

    ReplyDelete
  12. சலாம் சகோதரி ,

    அதானே ! சகோதரர்களிடம் போய் ஒரு படத்துக்கு ஆயிரம் ரூபாய் கேட்கலாமா..? தவிர படத்துல இவரு பண்ற அசிங்கம் எல்லாம் இவருடைய சகோதரியாக நினைத்து தான் செய்கிறாரோ..? கேட்டால் கலை துறையாம்..கலைத்துறையினர் கேவலமானவர்களா ?என்று கேள்வி வேறு..கலை என்பது பொதுவான சொல்..ஆனால் சினிமா துறையினர் கடைந்தெடுத்த தெளிவான கழிசடைகளே..!!!

    http://onlinepj.com/unarvuweekly/cinima_koothadikalin_unmai_mukam/

    மேற்காணும் சுட்டியில் சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம் பற்றி குறிப்பிட பட்டுள்ளது..அதில் ஸ்ரீனிவாசலு என்பவர் 1990 ஆண்டு குமுதத்தில் இவர்களை பற்றி எழுதிய கட்டுரை குறிப்பிடபடுகிறது.படியுங்கள்.... புல்லரித்து போவீர்கள்..(சீ...விவாதம் செய்ய கூட தகுதி அற்றவர்கள் சினிமாதுறையினர்..)

    இனி ,சினிமாதுறையினர் என்றால் கேவலமானவர்களா..??? அப்டின்னு அடுத்த தலைப்பு போட்டு எழுதுவாங்களா...???

    ReplyDelete
    Replies
    1. நாகூரு மீரானே,

      தமிழகத்தை ஆள்வது சினிமா!!. அவர்களின் சீட்டுப் பிச்சை கேட்பவர்கள் மதவாதிகள்!!. ஆகவே இஸ்லாமிய ஒழுக்க கோட்பாடுகள் மிக உன்னதம் எனக் காட்டாதீர்!!

      அப்புறம் அப்படி இல்லை என் குரானில் இருந்தே காட்டுவோம்!! அல்லாஹ் குரானில் கெஞ்சுகிறான்

      எலே வேற்று மதக் கடவுள்களை கேவலமாக திட்டாதே,திட்டினால் அல்லாவை மிக கேவலமாக திட்டுவார்கள்!!

      //6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.//

      கமலஹாசனைத் திட்டினால் அல்லாஹ் முகமது(சல்) ஐ விமர்சிப்போம்.

      //அதில் ஸ்ரீனிவாசலு என்பவர் 1990 ஆண்டு குமுதத்தில் இவர்களை பற்றி எழுதிய கட்டுரை குறிப்பிடபடுகிறது.படியுங்கள்..//
      நாகூர் மீரான் ஏன் முஸ்லிம் பெண்களை இப்படி விடயங்களை படிக்க தூண்டுகிறீர்? என்ன விடயம்??

      ஒரு நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் எதுவும் தவறு இல்லை!!.குரானின் ஒழுக்க விதிகளை விட திரு கமலஹாசனின் வாழ்வு மோசம் இல்லை!!

      யாகவராயினும் நா காக்க!!!

      நன்றி!!!

      Delete
    2. சார்வகனாரே ! அமைதி !

      //கமலஹாசனைத் திட்டினால் அல்லாஹ் முகமது(சல்) ஐ விமர்சிப்போம். //

      பாருங்கள் ...6:108 வசனத்தில் அல்லாஹ் அறிவில்லாமல் திட்டுவார்கள் என்றே கூறுகிறான்....உங்களுக்கு நீங்களே (அறிவு) சாட்சியாக இருக்கிறீர்.. மேலும் அல்லாஹ் மூமின்களை பார்த்து

      "(5:8) எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;"

      என்கிறான் ...இது மூமின்களுக்கு என்றாலும் பொதுவான நற்குணங்களில் ஒன்றாகும்..இது உங்களிடம் இருக்கிறதா சார்வாகன் அவர்களே.! "முத் ஆ" எனப்படும் இஸ்லாத்தில் இல்லாத ஒரு விபசார முறையை சியாக்கள் வைத்துள்ளனர்..அனால் இது இஸ்லாத்தில் இல்லை என்பது தெரிந்தும் இஸ்லாத்தை விமர்சிக்கிரீரே .. இதைவிட கேவலமான முறையை தான் திரு.கமலகாசன் கொண்டிருக்கிறார்..அதை நண்பர்.கவிதை வீதி சவுந்தர் பதிவிலே ( http://kavithaiveedhi.blogspot.com/2012/12/40.html )சென்று ஆதரித்து வழக்காடுகிறீரே..! ம்ம்ம்..உங்களின் நேர்மை அபாரம் !!!

      //நாகூர் மீரான் ஏன் முஸ்லிம் பெண்களை இப்படி விடயங்களை படிக்க தூண்டுகிறீர்? என்ன விடயம்??//

      அது சகோதரிக்கு குறிப்பாக கொடுத்தது அல்லவே..பொதுவாக, இன்னும் குறிப்பாக சினிமாதுறையினரை கொஞ்சி குலாவும் உங்களை போன்றோருக்குதான்.

      //ஒரு நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் எதுவும் தவறு இல்லை!!.//

      இது மிக மிக தவறு..இந்திய சட்ட திட்டங்களை மட்டும் வைத்து உங்களால் சரி தவறு என்று சொல்ல முடியுமோ.? இந்திய வடக்கு பகுதியில் விபசாரத்திற்கு அனுமதி உண்டு .தமிழகத்தில் கிடையாது..நீங்கள் எந்த சட்டத்தை எடுப்பீர்கள்..அடுத்தவன் குடும்ப வாழ்கையில் விளையாடுவது உங்களின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதா.?

      நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்க முடியும்..( இதை கூறுவதற்கு வெட்கபடுகிறேன் இருந்தாலும் வேறு வழியில்லை )உங்களின் குடும்ப பெண்களுடன் திரு கமலகாசன் போன்றோர் விளையாடினாலும் உங்களின் கருத்து இப்படிதான் இருக்குமோ..?? பார்த்து சகோ...இஸ்லாம் மீதுள்ள வெறுப்பு உங்களை அசிங்கத்தின் பக்கம் இட்டு செல்கிறது...

      இஸ்லாத்தை வெறுத்தாலும் பரவா இல்லை அசிங்கத்தை ஆதரிக்காதீர்கள் சகோ.!

      நன்றி !!!

      Delete
  13. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

    சகோதரி ஆஷா பர்வீன்,அருமையான ஆக்கம்,சாட்டையடி கேள்விகள்.இந்த கமல்ஹாசன் திருமணம் செய்வது தவறு ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லி விபச்சாரத்தை ஊக்குவிப்பவன்.இவனிடமிருந்து இந்த மாதிரி ஒரு பதில் வருவது ஆச்சர்யப் படுவதற்க்கில்லை.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது