Monday, December 17, 2012

சமூகப்போராளிகள்.....


வரதட்சணைக்கு எதிரான போரில்
கலந்து கொண்ட சமூகப்போராளிகள் நாங்கள்....
கத்தியின்றி,இரத்தமின்றி,சப்தமின்றி
எங்கள் உயிரை பணயம் வைத்து அல்ல....
எங்கள் ஆன்மாக்களை,உணர்ச்சிகளை பணயம் வைத்து .....
எங்கள் ஆசைகளை பூட்டி வைத்து.....யுத்தம் செய்கிறோம்....
எங்களுடைய நோக்கம்தான் என்ன....????!!!
ஸ்டவ் வெடித்த உயிரை நீத்த எங்கள் முந்தைய
தலைமுறைப்பெண்களுக்கும்,
இப்போரில் கலந்துகொண்டு பாதியில்
வெளியேறிய எம் சகோதரிகளுக்கும்,தோழிகளுக்கும் ஏற்பட்ட நிலை.....
மகளுக்கு திருமணம் செய்ய கடன் வாங்கி,லோன்
போட்டு பதினைந்து வருடத்திற்கு மேல் கடனாளியாக
இருக்கும் எங்களின் அத்தா,அம்மாவின் நிலை


இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கும்
வரக்கூடாது என்பதற்காக வயது முப்பதை நோக்கி சென்றாலும்
எம் உள்ளம் அழும் அழுகையை வரட்டு சிரிப்பால் மறைத்து
அல்லாஹ்விடம் மட்டும் சொல்லி கதறி அழும் அமைதிப்போராளிகள்...
வரதட்சணைக்கு எதிரான போரில் கலந்துகொண்ட ஜிஹாதிகள்
...
இப்போரின் எதிராளியின் தாக்குதலுக்கு பதிலடி
கொடுக்காமல்சென்ற பாதியில் புற முதுகு காட்டிச்சென்ற
எம்தோழிகளின் பிள்ளைகள் பருவமடைந்துவிட்டார்கள்...

ஆம்....நாங்கள் இன்னும் கன்னிப்பெண்கள்...
பணத்திற்காக ஆசைப்படும் பேடியின் இச்சைக்கு
அடிபணிய பிறந்தவர்கள் அல்ல நாங்கள்.....
எங்களின் போர் திட்டமிடப்பட்டது அல்ல....
எங்களுக்கென்று தனிக்குழுவோ,அமைப்போ இல்லை....
எங்களுக்கென்று தனிக்கொடியோ,தலைவியோ இல்லை....


அல்லாஹ்வின் வார்த்தைகளை மெய்பிக்க
வரதட்சணையின் கோரமுகத்தை கிழித்து எறிய...
எம் உணர்ச்சிகளை சீதனம் என்னும்
முள் பாதையில் போட்டு....
தக்வா என்னும் ஆடை உடுத்தி,
தவக்கல் என்னும் வாளை ஏந்தி போரிடும்.....
நவீன சஃபியாக்கள் நாங்கள்....

(நபி ஸல் அவர்களின் மாமி சஃபியா ரலி அன்ஹூ அவர்கள்
ஹந்தக் போரில் வேவு பார்க்க வந்த யூத ஒற்றனின் தலையை
கொய்து அவர்களின் கூடாரத்தில் சென்று எறிந்த வீரப்பெண்மணி
)
குமரு காரியத்திற்காக ஜும் ஆ அன்று வசூல் செய்ய வரும்
எங்கள்அத்தாமார்களுக்கு உதவி பிச்சை காசு போடசொல்லும்...
ஜமாத்தார்களே....முத்தவல்லிகளே...ஆலிம்களே... 

உங்கள் ஜமாத்திலும் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளிலும்...
இந்த வரதட்சணை புற்றுநோயை நுனி முதல் அடி வரை  
விரட்டி...மஹர் கொடுத்துதான் திருமணம் செய்ய வேண்டும் என 
ஜும் ஆ மேடைகளில் கட்டளை போடலாமே......
குர் ஆன்,ஹதீஸ் செயல்பாட்டிற்காக
ஊர் விலக்கம் செய்யும் ஜமாத்தார்கள்....
வரதட்சணையை கேட்கும் குடும்பத்தாரை ஊர் விலக்கம் செய்யலாமே....
அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்கும் நீங்கள் கண்டும்,காணாமலும்
கல்யாணத்திற்கு மட்டும் தப்தர் கொடுத்து எனக்கு தெரியாது
என விலகிக் கொள்ள முடியாது....
அல்லாஹ்வின் சாபத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்...
மறுமையில் உங்களை எல்லாம் முஃப்லீஸ்
ஆக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்......
“உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை
எந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டது என
வினவப்படும்போது’’
அல்குர் ஆன் 81:8
இந்த பெண் குழந்தைகளை விசாரிக்கும்போது
அல்லாஹ் எங்களையும் விசாரிப்பான்...
ஆம்...அந்தக்குழந்தைகள் கொல்லப்பட்டதின் காரணம்
இதே வரதட்சணையால்தான்....
நாங்களும் சாட்சி சொல்லுவோம்...
உங்கள் அனைவரின் முகத்திரையை கிழிப்போம்....

கீழக்கரையிலும்,காயல்பட்டினம்,காரைக்கால்,நாகூரில்
பெண்ணோடு வீடும் கேட்கும் பேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை....
லெப்பைகுடிகாட்டில் பெண் வீட்டாரிடம் வாங்கித்தின்றே
அழிக்கும் கேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை...


மார்க்கம் தெரிந்த பின்னரும் இன்னும் மாமியார் கொடுத்த வீட்டில் இருக்கும்
ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல ஆள் இல்லையா...?
மாமனாரின் வீட்டில் இருக்கும் உங்கள் கல்மனசு உறுத்தவில்லையோ...??
மற்ற ஊர்களில் இப்பொழுதெல்லாம் நேரடியாக அல்லாமல்
மறைமுகமாக தட்சணை பிச்சை கேட்கும்
விலைமகனைப் பெற்றெடுத்த பணவெறி கொண்ட
தாய்மார்களுக்கு எங்களின் எச்சரிக்கை....

வரதட்சணை திருமணம் என்று தெரிந்தும் சாப்பிட செல்லும்
திருடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு
சக மனிதருக்கும் எச்சரிக்கை...
(நீங்க திருடுங்க...ஆனால்,பார்த்துக்கொண்டிருப்பேன்
என நினைப்பவர்கள்)

ஒவ்வொருவரும் உங்களின் எதிர்ப்பை எப்படித்தான்
பதிவு செய்யப்போகிறீர்கள்...
பிரியாணி சாப்பிட்டுவிட்டு...
வரதட்சணை வாங்காதீங்க...
பாவம் என்று சொல்லப்போகிறீர்களோ...???

எத்தனை காலம் தான் காத்துக்கொண்டிருப்பது....
வரதட்சணை கொடுத்தாவது கல்யாணம் பண்ணு...
நீ நினைக்கிற மாப்பிள்ளையை செய்யத்தான் சொல்லணும் என்று
அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லும் அட்வைஸ் அம்மணிகளுக்கும்,
அப்புகளுக்கும் எங்களின் கடுமையான எச்சரிக்கை....

அல்லாஹ்விற்காக ஹராமை தடுத்துக்கொண்டால்
ஏற்படும் ஈமானின் ருசியை நீங்கள் சுவைத்துள்ளீர்களா...??
அறிந்திருந்தால் இந்த அட்வைஸ் உங்கள் வாயில் வந்திருக்காது....!!!

நம் வாழ்நாளில் ஒரு சமூகத்தீமையை
எதிர்க்கக்கூடதிராணி இல்லையென்றால்
வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றது....

பைக்,கார்,நாத்தனார் மோதிரம்,இடியாப்ப மாவு,பேங்கில்
பணம் டெபாசிட் போட சொல்லும் நவீன மோடிகளுக்கு ஒரு எச்சரிக்கை....
ஆம்...பெண் வீட்டில் வாங்கித்தின்னும் சாக்கில் எம் குலப்
பெண்களை கண்ணீர் சிந்த வைத்து,சொத்துகளை சூறையாடும்
கருவறுக்கும் ஒவ்வொரு ஆணும் மோடியே....
குஜராத்தில் கருவறுத்த மோடிக்கு அல்லாஹ் என்றால் யாரென்று தெரியாது...
ஆனால்,படைத்தவனை நம்பும் முஸ்லிம்கள் ஹராம்
என்று தெரிந்து கொண்டு கைக்கூலி வாங்கினால் அவனும் மோடியே...!!!
மாமியார் வீட்டில் வாங்கித்தின்றது
உறுத்தாமல் இருக்கும்
ஒவ்வொரு ஆணும் பேடி...
அவனே மிகவும் மோசமான மோடி....

இத்தீமையைக்கண்டு உங்களின் உள்ளம்
எல்லாம் உறுத்தவில்லையா....?
எங்களின் ஆன்மாக்கள்,உணர்ச்சிகள் கருகும் வாடை
உங்கள் மூக்கை துழைக்கவில்லையா...???

எல்லாப்பெண்களைப்போல் எங்களுக்கு ஆசைகள் உண்டு...
ஆனால்,எங்களின் மலரினும் மெல்லிய உணர்ச்சிகளை
கசக்கி எறிந்துவிட்டுதான் இப்போரில் கலந்து கொண்டுள்ளோம்...
உங்களுக்கு..உடன் பிறந்த ஒரு முதிர்கன்னி தங்கையோ,
இல்லை அக்காவோ....உங்களுக்கு இருந்தால்...
தெரியும் எங்களின் அருமை,நிலைமை....
மாப்பிள்ளை தேடி அலையும்
ஒவ்வொரு அண்ணன்மார்களையும்,அக்காமார்களையும்
அத்தாக்களையும்,அம்மாக்களையும் கேளுங்கள்..
இவ்வரதட்சணை சந்தை எவ்வளவு கொடூரமானது என்று....

எங்களை பலியாடுகளாக்கி இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும்
ஓநாய்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்...
எங்கள் தெரு பெண்கள் எல்லாம் வரதட்சணை சந்தையில்
விலை போகிக்கொண்டிருக்க நாங்கள் மட்டும் வழி மேல் விழி
வைத்து அமைதியாக உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம்.
...
இப்படிப்பட்ட சமுதாயத்தில் தனக்கும் திருமணம் நடக்குமா
என்று ஏங்கிய கன்னிப்பெண்களின் உள்ளக்குமுறல்கள் தான்
உங்களுக்கு தெரியுமா...??
எத்தனை பாத்திமாக்கள்,
எத்தனை சுமையாக்கள்,
எத்தனை தாஹிராக்கள்,
எத்தனை பெனாசிர்கள்,
எத்தனை ரிஹானாக்கள்.....
குர் ஆன்,ஹதீஸை மட்டும் பின்பற்றும்
மாப்பிள்ளைக்கு காத்திருக்கிறார்கள் தெரியுமா.....????
இதற்கு தீர்வு காண ஒவ்வொரு
ஜமாத்தும் முயற்சி செய்யவில்லையெனில்,
மறுமையில் இதற்கு காரணமான அனைவரையும்
முஃப்லீஸ் ஆக்குவதற்கு எங்கள் பாத்திமாக்களும்,
தாஹிராக்களும்,சுமையாக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்....

சிலருடைய குற்றங்களின் காரணமாக,குற்றம் செய்யாதவர்களை அல்லாஹ் வேதனை செய்வதில்லை.ஆயினும்,அவனுக்கு வழிப்பட்டு நடப்போர்,குற்றம் புரிவோரை தடுப்பதற்கு சக்தி இருந்தும் தடுக்கவில்லையென்றால்,நல்லோர்,தீயோர் அனைவரையும்
வேதனை செய்வான்''.
தப்ரானீ-528
இந்த சமுதாயத்தீமையை வேரோடும்,வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிய அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக...
ஆமின்....

கொடுக்க மாட்டோம்...கொடுக்க மாட்டோம்...
வரதட்சணை கொடுக்க மாட்டோம்...

கேட்காதே....கேட்காதே....
பிச்சை காசு கேட்காதே....

27 comments:

  1. Aakaporvamana pathivi. Ippa enga oril oru silar kooda pennuku kodutha veethai veethu vithu vaadaiku thaniyaga irukaga.. Ellarum sikkaram maruvaganu neenaikere. Allah vi uthaviyal

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் ....
      சிலர் மட்டும் அப்படி இருக்கலாம்...
      ஆனால்,குர் ஆன்,ஹதீஸை ஃபாலோவ் பண்ணும் பலர் இன்னும் அவ்வாறுதான் உள்ளார்கள் சகோ...கீழக்கரையிலும்,காயல்பட்டினத்தில் இன்னும் எனக்கு தோழிகள் உள்ளார்கள்...விசாரித்துவிட்டு தான் எழுதுகிறேன்...
      காரைக்காலிலும்,நாகூரிலும் கொந்தளித்து போய் கண்ணீர் வடித்த என் தோழியைப் போல எத்தனை பேர் கொந்தளிக்கிறார்களோ....???/

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாஷா அல்லாஹ். மிக அற்புதம். இந்த சமூக போராளிகளுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம்...
      தங்களின் கருத்துக்கும்,ஆதரவுக்கும் ஜசாக்கல்லாஹு கைர் சகோ:)

      Delete
  3. சகோ ஆஷா பர்வீன்,

    //எத்தனை காலம் தான் காத்துக்கொண்டிருப்பது....
    வர்ர மாப்பிள்ளையை கழுத்தை நீட்டி அடுத்த வேலையை பாருங்க...//

    இதில் தாலி என்ற மூடப்பழக்கம் முஸ்லிம்களிலும் உள்ளது என்பது போன்ற தவறான அபிப்பிராயம் வர வாய்ப்புள்ளது. மேலும் இஸ்லாமிய திருமணங்களில் அது எந்த அளவு மூட நம்பிக்கைகள் கொண்ட முஸ்லிம்கள் நடத்தக்கூடிய திருமணமாக இருந்தாலும், மணப்பெண் கழுத்தி நீட்டி மணமகனிடம் தாலியை காட்டிக்கொள்வதில்லை. ஆகையால் இதனை (முடிந்தால்) மாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    தாலி போன்ற நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இஸ்லாமை பொருத்தவரை திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு ஒப்பந்தம் மட்டுமே. இதில் எந்த பாலினத்திற்கும் திருமணம் தொடர்பாக சின்னங்கள் கிடையாது.

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நான் குறிப்பிட்டது சொல் வழக்கே...
      திருத்தம் செய்துவிட்டேன் சகோ...
      சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி

      Delete
  4. அப்பப்பா... ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி... நெத்தியடி..கல்லடி...ன்னு சொல்லிக்கொண்டே போகலாம்,ஆஷா.ஆரம்பம் முதல் முடிவு வரை கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்கும் வார்த்தைகளின் நெருப்பு வாசிப்பவர்களையும் தொற்றுகிறது. வாசிக்கும் மோடிகளும் கேடிகளும் உண்மையான மனிதர்களாய் இருந்தால் தயவு செய்து திருந்துங்கள்.

    /பெண்ணோடு வீடும் கேட்கும் பேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை....
    லெப்பைகுடிகாட்டில் பெண் வீட்டாரிடம் வாங்கித்தின்றே/ அடப்பாவிகளா... மானம்,ரோஷம்னு எதுவுமே கிடையாதா இவங்களுக்கு... இனிமேல் நானும் வரதட்சணை வாங்கும் திருமணங்களைத் தவிர்ர்க்கப்போகிறேன், சாப்பிட வர மறுக்கும் என்னைப் பற்றி (வரதட்சணை வாங்காத) என் மாமியார் என்ன நினைத்தாலும் சரி.

    ReplyDelete
    Replies
    1. கீழக்கரையில் இன்னும் வீடு கேட்கும் பேடிகள் உள்ளனர்...
      அதையெல்லாம் பார்த்த என் கொந்தளிப்பே இப்பதிவு சகோதரி...
      இப்பதிவின் மூலம் தாங்கள் வரதட்சணை திருமணங்களை தவிர்ப்பதாக உறுதி எடுத்தது மிக்க சந்தோஷம் சகோதரி...
      பெண் கருப்பாக இருப்பதால் 100 பவன் நகை கேட்ட நாய்களுக்கும்
      இந்த சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்

      Delete
  5. சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் !

    //மாமியார் வீட்டில் வாங்கித்தின்றது
    உறுத்தாமல் இருக்கும்
    ஒவ்வொரு ஆணும் பேடி...
    அவனே மிகவும் மோசமான மோடி....//

    நச்ச்ச்ச்ச்ச்ச்.....!!!


    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம்...
      கருத்துக்கு நன்றி சகோ:)

      Delete
  6. அப்பப்பா... ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி... நெத்தியடி..கல்லடி...ன்னு சொல்லிக்கொண்டே போகலாம்,ஆஷா.ஆரம்பம் முதல் முடிவு வரை கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்கும் வார்த்தைகளின் நெருப்பு வாசிப்பவர்களையும் தொற்றுகிறது. வாசிக்கும் மோடிகளும் கேடிகளும் உண்மையான மனிதர்களாய் இருந்தால் தயவு செய்து திருந்துங்கள்.

    /பெண்ணோடு வீடும் கேட்கும் பேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை....
    லெப்பைகுடிகாட்டில் பெண் வீட்டாரிடம் வாங்கித்தின்றே/ அடப்பாவிகளா... மானம்,ரோஷம்னு எதுவுமே கிடையாதா இவங்களுக்கு... இனிமேல் நானும் வரதட்சணை வாங்கும் திருமணங்களைத் தவிர்ர்க்கப்போகிறேன்,இன்ஷா அல்லாஹ். சாப்பிட வர மறுக்கும் என்னைப் பற்றி (வரதட்சணை வாங்காத) என் மாமியார் என்ன நினைத்தாலும் சரி.

    ReplyDelete
  7. லிஸ்டில் எங்க ஊரையும் சேர்த்துக்கங்க :)

    சமூகக்கொல்லிக்கு எதிரான நல்லதொரு கவிதை !

    துண்டு பிரசுரமாக அடித்து நீங்கள் குறிப்பிட்ட ஊர்களில் வெளியிடலாம்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் எதுன்னு சொல்லுங்க சகோ...
      சேர்த்துடலாம்...
      இந்த பதிவை கீழக்கரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்
      பிரசுரமாக அடித்து கொடுக்க கேட்டுள்ளார்கள்...
      கருத்திட்டதற்கு நன்றி சகோ

      Delete
  8. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

    மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம் சகோ ஆஷா. வரதட்சணை என்ற பெயரில் பிச்சை எடுக்கும் கயவர்களை எழுத்துக்கள் என்னும் சாட்டையால் சும்மா சாட்டை அடி அடித்துள்ளீர்கள் சகோ.தொடரட்டும் உங்கல் சாட்டை அடி.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம்...
      கருத்துக்களுக்கு நன்றி...
      இன்னும் ஒவ்வொரு ஊரையும் குறிப்பிட்டு
      சாட்டையடி அடிக்கவேண்டும் என தோன்றுகிறது

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்)

    என் தகப்பனார், இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர், மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவ‌ர்க‌ள்

    பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது

    1960 களிலிருந்தே தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.

    தன் பெண்களுக்கு சீதனம் கேட்டவர்களிடம்

    ' என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்" பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்"

    என முகத்திலடித்தாற்போல் கூறியவர்.

    அத்துடன் சீதனம் கொடுக்கப்படும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊராரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்.

    எனது இரு மகன்களுக்கும் வெளியூர் குடும்பங்களுடன் திருமணம் நிச்சயிக்கப்படும் நிலையில் சீதனமோ, நகைகளோ, மாப்பிள்ளைக்கு உடைகள் கூட பெண்வீட்டாரிடமிருந்து வேண்டாம் என நான் கூறும்பொழுது அறியாமையின் காரணத்தால் குறைபாடு, தவறான நடத்தை உள்ள மாப்பிள்ளையோ என ஐயப்பாடுகள் உருவானது.

    எனது தக‌ப்ப‌னாரின் கொள்கைப்ப‌டி நானும் எனது இரு ம‌க‌ன்க‌ளுக்கும் சீதனமாக‌ பெண் வீட்டாரிட‌மிருந்து எந்த‌ ரூப‌த்திலும் எதையும் பெறாம‌லும் திருமண பதிவு நடக்கும் பொழுதே மஹர் தொகை பெண்ணுக்கு கொடுத்து திரும‌ண‌ம் நிறைவேற்றினேன்.

    அல்ஹ‌ம்துலில்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம்...வாஞ்சூர் அப்பா...
      எங்க ஊர் பரமக்குடிக்கு பக்கத்தில் இளையான்குடில
      இவ்ளோ விஷயம் எல்லாம் நடந்திருக்கா...
      மாஷா அல்லாஹ்...
      அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் தந்தைக்கும் அருள் புரிவானாக...
      இதைப்பற்றிய விழிப்புணர்வு மகனை பெற்ற தாய்மார்களுக்கு
      அதிகம் ஏற்படுத்த வேண்டும்...
      அல்லாஹ் நம் காரியங்களுக்கு உதவி செய்வானாக...
      ஆமின்

      Delete
  10. திருமணத்தில் அநீதி...! அநாச்சாரம்...! வீண் விரயம்...!

    விறுவிறுப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி

    இங்கே சொடுக்கி >>> திருமணத்தில் அநீதி...! அநாச்சாரம்...! வீண் விரயம்...! <<<< காண்கவும்.

    தோன்றும் திரையின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்
    .

    ReplyDelete
  11. assalamu alaikum

    arumaiyan pathivu ungal pani sirakka iraivanidam prarthipom insha allah naamum varadachanai illa thiruman mudipom

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ...
      வரதட்சணை திருமணத்தை புறக்கணிப்போம்...
      வரதட்சணையின் ஒவ்வொரு வடிவத்தையும் கடுமையாக எதிர்ப்போம்...

      Delete
  12. பள்ளியில் தொழ வருபவனைத்தான் இந்த ஜமாத்துகளும் ஹஜ்ரத்மார்களும் விரட்டி அடிப்பார்கள்.மாறாக வரதட்சணை வாங்கும் பேடிகளையும் வட்டி மூசாக்களையும் இரு கரம் நீட்டி வரவேற்ப்பார்கள்.இந்த சாட்டையடி பதிவை எங்கள் பகுதியிலும் (தஞ்சை மாவட்டம்) பிரசுரிக்க எண்ணுகிறேன் தங்கள் அனுமதியுடன்.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...
      கண்டிப்பாக பிரசுரித்து கொள்ளுங்கள் சகோ...
      எங்க ஊரிலும் சில பெண்கள் மக்கள் மத்தியில் பிரசுரிக்க மிக ஆவலாக உள்ளார்கள்....

      Delete
  13. மிக அற்புதம். இந்த சமூக போராளிகளுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
  14. மிக அருமையான தேவையான பதிவு!

    வரதட்சனை என்பது சமூக கொடுமைதான்..!

    இங்கே ஆண்களை மட்டுமே சாடுவதாக நினைக்கிறேன்.. வரதட்சனை வாங்காமல் திருமணம் முடிப்பேன் என மனமகன் மற்றும் நினைத்தால் போதாது. என் மகனுக்கோ அல்லது சகோதரருக்கோ வரதட்சனை கேட்கவே கூடாது என ஒவ்வொரு தாயும் சகோதரியும் நினைக்க வேண்டும். நம் சமூகத்தில் இது நடக்கிறதா? என்னைக்கேட்டால் வரதட்சனை விடயத்தில் மனமகனின் தந்தையை விட தாய்தான் முன்னிற்பார்.

    ReplyDelete
  15. fathima yusra from srilanka

    மாஷh அள்ளாஹ்..........
    அள்ஹம்துலிள்ளாஹ்..........
    நான் எனது உள்ளத்தில் பூட்டிவைத்திருந்த வேட்கைகளை படம் பிடித்தது போல் என் ககோதர சமூகப்போராளிகளின் ஆதங்க கருத்துக்கள் அமைகின்றன.....
    மிகவும் பெரமையாக உள்ளது....
    இவ்வளவ வீரமுள்ள பெண் சமுதாயம் எம் ஆசிய சமுகத்தில் உள்ளதே என்பதை பெருமையுடன் நினைக்கையில்.....
    உங்கள் வெப் சைட்டை நான் தொடர்ந்து பார்க்கனும் போல இருக்கு........

    ReplyDelete
  16. நன்றி சகோதரி யுஸ்ரா...:)

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது