ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் சம்பவங்களை,விபரீதங்களை
,பிரச்சினைகளைப் பார்க்கும் போது பாதிக்கப்பட்டவர் அதற்கு தீர்வு கிடைக்காமல் சிரமப்படுவதும்,அநீதி இழைத்தவர் ஜாமீனிலோ
அல்லது தண்டனை கொடுக்காமல் சிறையில் வைத்து விசாரிக்கிறேன்
என தாமதப்படுத்துவதும் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது உள்ள
நம்பிக்கையை முற்றிலும் இழக்க வைக்கிறது.
கர்நாடகாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவனை
மக்களே கொலை செய்து தண்டனை கொடுப்பது இப்போது பரவலாகி வருகிறது.
அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒன்று
கூடி தேயிலை தோட்ட உரிமையாளரையும்,அவரது மனைவியையும்
தீ வைத்துக்கொளுத்துவதை எல்லாம் பார்க்கும்போது மக்கள் அரசை நம்பவில்லை என்பதே தெரிகிறது.
அது அல்லாமல் வினோதினி என்ற அப்பாவி பெண்னின் முகத்தில் ஆசிட் வீசிய சுரேஷுக்கு இன்னும் கடும்தண்டனை கொடுக்காமல் இருப்பது டெல்லி பெண் வழக்கில் தவறு செய்தவர்களுக்கு30 வருடம் சிறை தண்டனையை அதுவும் நம் வரிக்காசில் உட்கார வைத்து சோறு போடும் சட்டம் போடலாம் என ஏசி ரூமில் என சிலர் பேசிக்கொள்வதும் அரசின் மீது இன்னும் நம்பிக்கையினைமையை அதிகப்படுத்ததான் செய்கிறது....
சென்னை பொறியாளர் ஜெயகாந்தனின் கழுத்தில் மாஞ்சா கயிறு சிக்கி துடிதுடித்து இறந்ததை நேரில் கண்ட அவர் மனைவி சம்பந்தபட்டவர்களுக்கு கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளாராம்....
ஆம்....சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாராலும்
அவ்வாறு பேச முடியாது...டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையையும்,வினோதினியின் தந்தையையும்,பொறியாளரின் மனைவியையும் கேட்டுப்பாருங்கள்...உயிரின் மதிப்பு எவ்வளவு என்று???
ஏசி ரூமிலும்,காரிலும் செல்லும் அரசியல்வாதிகளுக்கும்,அமைச்சர்களும் எங்கே தெரியும் இவர்களின் வேதனை....????
நாங்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது குற்றவாளிகளை
உட்காரவைத்து சோறு போடும் சட்டங்களை அல்ல...
இதே தவறு இனியும் நடக்காமல் இருக்க சட்டங்கள்
கடுமையாகவில்லை என்றால் மக்கள் அரசாங்கத்தை நம்பமாட்டார்கள்....
தன் கையிலே சட்டத்தை எடுத்துக்கொள்வார்கள்...

Tweet | ||||||
சலாம் சகோ ஆஷா பர்வீன்,
ReplyDeleteஅருயமையாக சொன்னீர்கள். மன்னிக்க முடியாத நஷ்ட ஈடில்லா பெரிய குற்றங்களை செய்த குற்றவாளிகள் எனது வரிக்காசில் மூணு வேளை வயிறு முட்ட சாப்பிடுவதை நான் ஒருபோதும் ஏற்கவே மாட்டேன்.
இது இந்தியா இந்த மக்களின் பழக்க வழக்கங்கள் , அதிகாரிகளின் ஜாதி மத விரோதங்கள் வேண்டாதவர்களை உள்ளே தள்ளும் காவல்துறை நீதி நியாயமற்ற அதிகார வர்க்கம்
Deleteஇவர்கள் யாரை குற்றவாளிகள் என்று கை நீட்டுகின்றார்களோ அவர்களை அரபு நாட்டு ஸ்டைலில் தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் சிறுபான்மை மக்களுக்கும் ,தலித்துகளுக்கும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்படும்.
உதாரணம் நீதி நியாயம் பேசிய பழனி பாபாவுக்கு பல வருட சிறை தண்டனை . போகுமிடங்களெல்லாம்முஸ்லிம் வெறுப்புபேச்சுக்களால் கலவரம் ஏற்படுத்திய ராமகொபலனுக்கு ?
எவனாவது ஒரு குற்றத்தை செய்து விட்டு உண்மையான குற்றவாளி கிடைக்க வில்லையென்றால் அந்த வழக்கில் உங்களை கூட இந்த போலிசு முதல் குற்றவாளியாக சேர்த்துவிடும்.
இப்போது சொல்லுகள் உங்களுக்கு வயிறு முட்ட சாப்பாடு வேண்டுமா வேண்டாமா?
முடிந்தால் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளுக்கு கொஞ்சம் சென்று பார்த்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.
உங்கள் பார்வை இறைவனுக்கு கட்டுப்பட்டு நீதி, நியாயாமான போலிசு உள்ள நாட்டில் ஒ.கே.
மலேகான் குண்டுவெடிப்பை நடத்திய சுவாமி அசிமாநந்தா வேறொரு வழக்கில் உள்ளே
குண்டுவெடிப்பை நடத்தாத முஸ்லிம் கலீல் பாயு குண்டு வெடிப்பு நடத்தியதாக அதே ஜெயிலில் உள்ளே
பல வருடங்கள் கழித்து தானே உண்மை தெரிய வந்தது
நீங்கள் இருப்பது இந்தியாவில்
basic கிலிருந்து எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளகூடியதே.
குற்றங்கள் செய்தவனை பாதிக்கப்பட்டவன்
ReplyDeleteதண்டித்தால் நன்றாக இருக்கும்
தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் இல்லாமல் போகும் இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteடும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
ReplyDeleteடும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
, வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
நன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
9444305581
Posted by Bala subramanian at 1:43 am