Saturday, January 5, 2013

பெண்ணுக்கு எதிரான அத்தனை வன்முறைகளும் தடுக்கப்பட .....

பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள்அதிகரித்துக்
கொண்டிருக்கும் சூழ்நிலையில்,பெண் சுதந்திரம் பேசுவோரும்,
அரசாங்கமும் பெண்களின் மீதான பாலியல் வன்முறை சம்பவிக்கும்
அத்தனை வாசல்களையும்,வழிவகைகளையும் அடைக்க கடமைப்பட்டுள்ளது.



ஆண்,பெண் கலக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்,
பெண் தனியே செல்லும் போதுதான் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பெண்கள் தனியே பயணம் செய்ய பெண்களுக்கான 
தனி பஸ்களை அரசாங்கம் அதிகமாக்க வேண்டும.

இன்னும் பள்ளிக்கு சென்ற மாணவியர் ஆசிரியர் போர்வையில் இருக்கும் வெறி நாய்களின் பசிக்கு இரையாகும் செய்திகளை நாளேடுகளில் கண்டாலும் சிறப்பான கோச்சிங் என இன்னும் ஆண் ஆசிரியர்களிடம் டூயூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்...

ஆண்,பெண் கலந்து விடுவதை முற்றிலும் தவிர்த்து பெண்கள் மட்டும் படிக்கும் வகையில் பள்ளிகளை மாற்றி +2 வரை பெண் ஆசிரியைகளை கொண்டே பள்ளி நடைபெற வேண்டும்.பல இடங்களில் ஆசிரியைகளுக்கு சக ஆண் ஆசிரிய வெறி நாய்களின் மூலமாக பாதுகாப்பு இல்லை என்னும் போது மாணவிகளின் படும் பாட்டை சொல்லவா வேண்டும்.

பள்ளி செல்லும் மாணவ,மாணவியர் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டாலும் பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிகளில் சேர்க்கத்தான் செய்கின்றனர்.

ஸ்கூல் வேனில்,ஆட்டோவில் செல்லும் பள்ளிச்சிறுவர்,சிறுமியருக்கு அதன் ஓட்டுநர்களால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும்,அடிக்கடி விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால்தொலை தூரங்களில்
உள்ள பள்ளிகளில் படித்தால்தான் முன்னேறுவார்கள்
என்ற எண்ணத்தை மாற்றி அருகே உள்ள பள்ளிகளில்
அனுப்புவதே சிறந்தது.

பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் சினிமாக்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கடுமையாக சென்சார் செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது....அதை முற்றிலும் தடை செய்ய வேண்டியதை தவிர வேறு வழியில்லை.


இல்லையென்றால் சீரழிவைத்தரும் சின்னத்திரை,பெரிய திரை நிகழ்ச்சிகளை
வீட்டில் பார்க்கும் சூழ்நிலையை தடுக்க கேபிள் இணைப்பை துண்டித்தால் குடி முழுகிப் போய் விடாது.

ஆண்,பெண் உறவு காட்சிகளை மறைவாக பரிந்துரைக்கும் 9000 மேற்பட்ட காட்சிகள் மட்டும் ஓர் ஆண்டில் தொலைக்காட்சியில் மிக முக்கியமான நேரத்தில் காணக்கூடிய வாய்ப்பு ஒரு சராசரி தொலைக்காட்சி பார்வையாளருக்கு கிடைப்பதாக ஒரு கருத்தாய்வு கூறுகின்றது....

இது பத்தாண்டுகளுக்கு முன்னே உள்ள கருத்தாய்வு...
இப்பொழுது சொல்லவா வேண்டும்.....

அதுவும் சிறுவர்கள் கையில் ரிமோட்டை கொடுத்தும்,இன்னும் சில வீடுகளில் பெற்றோரை தொந்தரவு செய்யாமல் இருக்க சிறுவர்கள் மட்டும் பார்க்க குறைவான விலையில் அரசு தொலைக்காட்சி வாங்கி வைத்து  நன்றாக
பார்த்து கெட்டுப்போக துணைபுரிகிறார்கள்...

டிவியில் பெண்ணை மட்டரகமாக சித்தரிக்கும் விளம்பரங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்....ஒரு ஆண் புதிதாய் வந்த ஸ்பிரே அடித்துக்கொள்வதால் பெண்கள் அவன் பின்னே திரிகிறார்களாம் என்பதை விட பெண்ணை மோசமாக சித்தரிக்கும் விசயம் ஏதும் உண்டா....??

இத்தைகய விளம்பரங்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பெண் என்பவள் மட்டமானவள் என்ற எண்ணம் அவர்களின் உள்ளத்தில் நாள்தோறும் சாக்கடை தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது....

அதற்கு வடிகாலாக,பெண் தனிமையில் கிடைக்கும்போது தன் மிருக எண்ணங்களை வெளிப்படுத்த துணிகின்றனர்.

பெண்கள் நடத்தும் பெண்கள் மாத இதழ்களில் பெண்களை விளம்பர பொருளாக சித்தரிக்கும் வக்கிர விளம்பரங்களை தவிர்த்து ஆரோக்கியமான முறையில் விளம்பரம் செய்யலாமே....???

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் ஆண்,பெண் கூத்துகள் அதிகரித்து வரும் நிலையில் அதிலும் 9 வது படிக்கும் டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி சமூக வலைதளம் மூலமாக ஐ.டி.துறையிலும்,ஹெச்.ஆர் துறையிலும்  இருக்கும் இருவரிடம்  பழக்கம் ஏற்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பார்க்கும் போது ஏன் இத்தகைய கொண்டாட்டங்களை தடை செய்யக்கூடாது...????????????

டெல்லி பெண் வழக்கில்,புதுவை பள்ளி மாணவி வழக்கில் தாமதம் செய்த போலீசார்,பணி நீக்கம் செய்வதே இது போன்ற அஜாக்கிரதையாளர்களின்
செயல்கள் திருந்துவதற்கு சரியான வழியாகும்.

ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக வீடு வந்து சேர 
பெண் சுதந்திரம் பேணி பாதுக்காக்கப்பட பெண்ணுக்கு எதிரான அத்தனை 
வன்முறைகளும் தடுக்கப்பட .....

பெண்களுக்கென்று தனி பஸ்கள் அதிகப்படுத்துவதும்,
பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள்,கல்லூரிகள் அதிகப்படுத்தி 
பெண் ஆசிரியர்கள் மட்டும் கற்றுக்கொடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி
பள்ளி,கல்லூரிக்கு வெகு தூரம் செல்லும் பயணங்களை தவிர்த்தும்,
பெண்ணை மட்டரகமாக சித்தரிக்கும் விளம்பரங்களை,சினிமாக்களை
தடை செய்தும்,புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் கருமாந்திரங்களை,போதை பொருள்களை முற்றிலும் தடை செய்து
இது போன்ற சம்பவங்களை வேண்டும் என்றே தாமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும்,இதையும் மீறி பெண்கள் மீது வன்புணர்வு செய்வோருக்கு மரணதண்டனை காலம் தாமதிக்காமல் உடனே கொடுப்பதும் மிக மிக அவசியமாகும்....

சே....பாவம்....அது எப்படி மரண தண்டனை கொடுக்கலாம்,30 வருட சிறை தண்டனை கொடுப்போம்  என வாதிடும் வறட்டு மூளை கொண்டவர்கள்
பொதுமக்களின் வரிகாசில் சோறு போடாமல்  தன் சொந்தக்காசில் 
சோறு போடுங்கள்.

சினிமாவில் என்ன தப்பு இருக்கிறது என கேட்கும் மூளை இல்லாதவர்களுக்கு 
இம்மாதிரியான வன்முறை சம்பவங்களில் எல்லாம் நடக்க 100 காரணங்கள் இருந்தால் அதில் 90காரணங்கள் சினிமா தான் வழிவகுக்கிறது.அவை அத்தனையும் நீங்கள் வெட்கமில்லாமல் வழிமொழிகிறீர்கள் என்று தான் அர்த்தம்....

11 comments:

  1. ஸலாம் சகோ.ஆஷா பர்வீன்,

    பிற பெண்களிடம்/ஆண்களிடம் எப்படி நடக்க வேண்டும்... எப்படி சொல்-செயல்-நடை-உடை-பாவனை இருக்க வேண்டும்... என்று என்னதான் பெற்றோர்கள்/உஸ்தாத்கள்/ஆசிரியர்கள் போன்றோர் வாலிப ஆண்களுக்கு/பெண்களுக்கு அதிக அதிகம் ஒழுக்க பாடம் நடத்தினாலும்...

    அதை எல்லாம் விட அரசு/சட்டம்/நீதி/காவல்/பெண்விடுதலை என்ற பெயரில்... மாதர் சங்கம்/முற்போக்கு எண்ணம்/பின் நவீனத்துவம் போன்றவற்றின் ஆதரவுடன் சமூகம் கட்டற்ற மித மிஞ்சிய காமப்பாடத்தை எந்த இடத்திலும் எந்த ரூபத்திலும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது..!

    இதில், தங்கள் நடை உடை ஒப்பனை பாவனை பேச்சு செயல் இவற்றில் அதுவரை தாங்கள் கற்ற ஒழுக்கம் முற்றிலும் கெட்டு மயங்கி விழுவது இன்றைய இளைஞர்கள். அதன் விளைவே... இப்போது நாம் பரவலாக காணும் குற்றங்கள்.

    குர்ஆன்/ஹதீஸ் மூலம் இறைவன் எனக்கு வாழ்வியல் பாடம் நடத்தினாலும்...

    அது கிடைக்காத மற்ற சமய மாணவர்களுக்கு.. நான் படிக்கும் காலத்தில் திருவள்ளுவர் இப்படி எல்லாம் பாட புத்தகத்தில் சொன்னார்...

    பிறர்மனை நோக்கா பேராண்மை,
    ஒழுக்கம் உயிருனும் ஓம்பப்படும்,
    நோய்நாடி நோய்முதல் நாடி...
    இதெல்லாம் யாரு கேட்கிறா இப்போ..?

    ReplyDelete
  2. காரணங்களை அலசி சிறந்த ஆலோசனைகளையும் தந்துள்ளீர்கள். அருமையான ஆக்கம் சகோ. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.:)

      Delete
  3. அருமையான பதிவு டீச்சர்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ:)

      Delete
  4. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

    அதிரடி கேள்விகள்...அழகிய ஆலோசனைகள்......அருமையான பதிவு.மாஷா அல்லாஹ்....

    ///சே....பாவம்....அது எப்படி மரண தண்டனை கொடுக்கலாம்,30 வருட சிறை தண்டனை கொடுப்போம் என வாதிடும் வறட்டு மூளை கொண்டவர்கள்
    பொதுமக்களின் வரிகாசில் சோறு போடாமல் தன் சொந்தக்காசில்
    சோறு போடுங்கள்.///

    சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும்...
      நன்றி:)

      Delete
  5. //பொதுமக்களின் வரிகாசில் சோறு போடாமல் தன் சொந்தக்காசில்
    சோறு போடுங்கள்.///

    என் போன பதிவுல சொல்ல நினைச்ச விஷயம்..

    நல்ல அலசல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை.

    கணவன் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகும் டெல்லி பெண்கள்!...

    ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

    Posted by: Mayura Akilan Published: Monday, January 7, 2013, 9:14 [IST]


    டெல்லி: கணவன் அல்லது அவனுடைய உறவினர்களால் டெல்லியில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஓர் அதிர்ச்சி புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

    அடித்து துன்புறுத்துதல், பாலியல் ரீதியான துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.

    அங்கு கடந்த 2011ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய புகார்கள் 1500 வரை பதிவாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற பதிவு துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

    கணவனுக்கு அடங்கி நடப்பதும் லட்சுமண ரேகையை தாண்டாமல் இருப்பதும்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் சில தலைவர்கள்.

    ஆனால் அப்படி இருந்தாலும் கூட கணவனாலும், அவனுடைய உறவினர்காளாலும் துன்புறுத்தலுக்கு ஆளாகி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் தலைநகரப் பெண்கள்.

    வீட்டுப் பொருளாதார சூழ்நிலைக்காக வெளியே வேலைக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பெண்கள் ஒருபுறம் இருக்கையில் வீட்டிற்குள்ளே இல்லத்தரசிகளாக வலம் வரும் பெண்கள் அடி, உதை மற்றும் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கும் ஆளாகிவரும் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி பெண்களுக்கு பாதிப்பு அதிகம்

    தேசிய குற்ற பதிவு துறையினர் வெளியிட்ட தகவலில், கடந்த 2011ம் ஆண்டு டெல்லி மாநகரில் குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 1,498 ஆக உள்ளது.

    இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் 2010ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 1,273 பதிவாகியுள்ளது. அதுவே 2009ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,177 ஆகவும் இருந்துள்ளது.

    ஹைதராபாத் 2 ம் இடம்

    இந்தியாவில் வளர்ச்சியடைந்த நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. ஹைதராபாத்தில் ஜனவரி-டிசம்பர் வரையிலான 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,355 வழக்குகள் பதிவாகியுள்ளன.


    மும்பை, சென்னையில் குறைவு

    டெல்லி, ஹைதராபாத் தவிர பிற மெட்ரோ நகரங்களான கொல்கத்தாவில் 557 வழக்குகளும், பெங்களூரில் 458 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் மும்பையிலும்,சென்னையிலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் 229 மட்டுமே பதிவாகியுள்ளன.

    2010ம் ஆண்டில் வழக்குகள்

    பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஹைதராபாத்தில் 1,420 வழக்குகளும், கொல்கத்தாவில் 400 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

    பெங்களூரில் 398 வழக்குகளும், மும்பையில் 312 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

    அதேசமயம் சென்னையில் 125 வழக்குகள் மட்டுமே போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    2009ல் வழக்கு விபரம்

    அதேபோல் கடந்த 2009ம் ஆண்டில் ஹைதராபாத்தில் 1,383 வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன. அதேபோல், மும்பையில் 434 வழக்குகளும் கொல்கத்தாவில் 411 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் பெங்களூரில் 367 வழக்குகளும் சென்னையில் 154 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை

    வீட்டைவிட்டு வெளியே சென்றால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் வீட்டிற்குள்ளேயே அடங்கி ஒடுங்கி இருந்து அடுப்பங்கரையில் வேகும் பெண்களுக்கும் குடும்பத்தினரால் கொடுமை நிகழ்த்தப்படுகிறது.

    பிற மாநிலப் பெண்கள் தைரியமாக கணவர் மற்றும் உறவினர்களுக்கு எதிராக புகார் கொடுக்க முன் வருகின்றனர்.

    ஆனால் தமிழ்நாட்டுப் பெண்கள் அதையும் அனுசரித்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

    அதனால்தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் இதுபோன்ற புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    SOURCE: http://tamil.oneindia.in/news/2013/01/07/india-rise-cases-cruelty-husbands-against-women-in-delhi-167479.html#slidemore-slideshow-1

    ReplyDelete
  7. ஆண்கள் ஆண்கள் மீது நடத்தும் பாலியல் வன்முறைக்கு என்ன தீர்வு, ஆண்களையும் தனித்து விடலாமா, இல்லை ஆண்களுக்கும் முக்காடு போட்டு விடலாமா ?!

    ReplyDelete
  8. சிறையில் ஏன் சும்மா சோறு போட வேண்டும், 15 மணிக்கூறுகள் வேலை வாங்குங்க, ஒரு நொடியில் ஒருவன் இறந்து போனால் வலியும் ஒரு நொடியே.. மரணம் என்பது தண்டனையல்ல விடுதலை. உணர்க மக்காஸ்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது