யார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ,அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்.இது இன்று எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.என்றாலும் இது வணிகத்துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என விடாமுயற்சியோடு போராடுபவர்கள் வெற்றிக்கனியை பறிப்பது மிக எளிது...
அப்படி இளம்வயதில் ஏற்றுமதி உலகில் நுழைந்த கவுதம் தன் வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார்
சந்தித்தோம்...சாதித்தோம்....
என் பெயர் கவுதம்.வயது23.கல்லூரியில் படித்து முடித்தபின் சொந்த ஊரான திருச்சியில் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்ற என்கிற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
பாலைவனத்தில் தண்ணீர் தேடுபவனுக்கு சுனை நீர் கிடைத்தது போல புதிய தலைமுறை பத்திரிக்கையை கடையில் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வாங்கிப்படித்தேன்.
வாரா வாரம் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையில் எவரும் செய்யலாம் ஏற்றுமதி என்கிற தொடர் வெளிவரப்போகின்றது என்ற அறிவிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.
ஏற்றுமதி பற்றி யோசித்துக்கொண்டிருந்த எனக்கு,நீயும் ஏற்றுமதியாளனாக மாற முடியும் எனக்கூறுவது போல் அமைந்திருந்தது அந்த அறிவிப்பு.
தொடர் ஆரம்பித்தது முதல் முடியும்வரை எனக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே வந்தது.அதிலிருந்த வழிகாட்டுதலின்படி வெறும் 250ரூபாய் செலவிலேயே எனது ஏற்றுமதி நிறுவனத்திற்கான அரசின் அனுமதியைப்பெற்றுவிட்டேன்.இந்த அனுமதியைப்பெற்றுத்தர சில ஏற்றுமதி ஆலோசகர்கள் பத்தாயிரம் ருபாய் வரை கேட்கிறார்கள்.
நான் மட்டும் அல்ல.எனது நண்பன் அசோக்கும் இப்போது ஏற்றுமதியாளராக விரும்பி என்னோடு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.இருவரும் நேரில் சென்று அவர்களை சந்தித்தோம்.
அவரது வழிகாட்டுதலின்படி முதல் ஏற்றுமதி ஆர்டர் துபாய் நாட்டிலிருந்து எங்களுக்கு கிடைத்தது.அவர் கொடுத்த குறுந்தகட்டில் இருந்துதான் அந்த இறக்குமதியாளரின் முகவரி எங்களுக்கு கிடைத்தது.இப்போது வாரந்தோறும் திருச்சியில் இருந்து காய்கறிகளை துபாய்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
எங்களது ஆர்வத்தையும்,வேகத்தையும் பார்த்த துபாய் நாட்டுக்காரர் இப்போது ஆர்டரை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகப்படுத்தி நிறைய காய்கறிகளை தொடர்ந்து எங்களிடம் வாங்கி வருகிறார்.
அரிதாசன் அவர்களிடம் அடிக்கடி எங்கெங்கு BYER SELLER BEET நடக்கின்றன போன்ற விவரங்களை அவ்வப்போது கேட்டுத்தெரிந்துகொள்வோம்.சமீபத்தில் சென்னையில் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் நடத்திய வர்த்தக கண்காட்சி நடைபெறுவதாகக் கூறியதைக்கேட்டு அங்கு சென்றோம்.
ரொம்பவும் மகிழ்வாய் இருக்கிறோம்.
அன்புடன்
கவுதம் மற்றும் அசோக்
ரெயின் டிராப் இண்டர்நேசனல்,
திருச்சி.செல்:9688338881
எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 1
http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_25.html
தொடர்புக்கு;
ஏற்றுமதி வழிகாட்டியாளர்
வீ.அரிதாசன்
94441 46807
Tweet | ||||||
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது