Sunday, November 24, 2013

பல்லில் இரத்தக்கசிவா....???

அந்தக்காலத்தில் 30,40 வயதைத் தாண்டியவர்கள் தான் ஊருக்கு ஒன்று இருக்கும் பல் கிளினிக்கிற்கு பல் சொத்தை என சொல்வார்கள்...
ஆனால்,இப்பொழுது ஐந்து வயது பிள்ளைகளுக்கு ஆறு பல் சொத்தை  என வொயிட் சிமெண்டால் அடைக்கிறார்கள்

பல் சொத்தை,பல் வலி,பல் கூச்சம்,பல்லில் இரத்தம் வடிதல் போன்றவை நூற்றுக்கு 80% பேருக்கு இருக்கும் பிரச்சினைகள் ஆகும்.

வீதிக்கு வீதி முளைத்துவிட்ட டெண்டல் கிளினிக்கில் கூட்டம் தான் அலைமோதுகிறது...

திடீர் திடீர் என புது புது பிராண்டுகளில் பற்பசைகள் அறிமுகமாகியும் பற்சொத்தைக்கும்,பல்லில் இரத்தல் வடிதலுக்கும் சரியான தீர்வு கிடைத்த பாடில்லை...

விதவித மான டிசைன்களில் வரும் பிரஷ்களும் எந்நோயையும் தீர்த்தபாடில்லை.

மக்களின் நாக்கு ருசியை அறிந்து கொண்ட வியாபாரிகள் இனிப்பு வகைகளில் பலவித கெமிக்கலை கொட்டி அதற்கு அடிமையாக்கிவிட்டனர்...
                                                   
வீதியெங்கும் ஐஸ்கிரீம் கடைகள்,எல்லாக்கடைகளிலும் உயர் ரக சாக்லேட்டுகள்,கண்ணைப்பறிக்கும் நாவில் நீர் ஊற வைக்கும் ஸ்வீட்,கேக் வகைகள்,கிரீம் பிஸ்கட்டுகள் என என கண்ணில் படும் இடமெல்லாம் ஆக்கிரமித்துள்ளது...

பிள்ளைகள் அடம்பிடிக்கும் என வாங்க்கிக்கொடுக்கும் நாம் நம் வாயில் ரெண்டை எடுத்துப்போட்டுக்கொள்வோம்...

சரியான மருத்துவம் என்பது வரும் முன் காப்பது ஆகும்...அதாவது எந்த ஒரு பொருளை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஆனால்,நம்மில் அதிகமானோர் அவ்வாறு செய்யாமல் பொடுபோக்காக இருந்துவிட்டு பின்னர் ஆங்கில மருத்துவமனையில் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு பல் பிடுங்க வரிசையில் காத்திருப்போம்....

வாயில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்கி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது..

இதற்கு அழகிய வழிகாட்டுகிறார்கள் அண்ணலார் நபிகள் நாயகம் ஸல்


இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, 'இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது' என்று கூறினார்கள்.
புகாரி 5609

சுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக்காகப்) புறப்பட்டேன். அவர்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் - இதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதே - இருந்தபோது அஸர் தொழுகையைத் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு மாவு மட்டுமே) கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பிறகு (அனைவரும் சேர்ந்து) தொழுதோம். 
புகாரி.2981

இன்னும் பல்லில் இரத்தம் வடிதலுக்கு இயற்கையான மருத்துவமுறை ஒன்று உள்ளது...அதனால் இயற்கை முறையிலேயே எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் பல் சுத்தம் செய்யப்படும்...

அதுதான் ஆயில் புல்லிங்...

வெறும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மூலம் வாய் கொப்பளிப்பதினால் வாய் சுத்தம்,பல்லில் இரத்தம் வடிதல்,ஜலதோசம்,மலச்சிக்கல்,தூக்கமின்மை போன்ற வியாதிகள் குணமடைகிறது என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது....

விருதுநகர்: ஆயில் புல்லிங் என்ற முறையின் மூலம் பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவத்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ஷரத் அசோகனுக்கு 'குழந்தைகள் பல்மருத்துவ ஆராய்ச்சி விருது' மற்றும் 'ஆரோக்கிய மேன்மை விருது'கள் வழங்கப்பட்டன.
இந்த லிங்க்கில் படிக்கலாம்
http://tamil.oneindia.in/news/2012/06/06/business-dr-sharat-asokan-honoured-155168.html
கெமிக்கல் கொட்டப்பட்ட பற்பசையை விட பழமையான முறையில் தயாரிக்கப்படும் பல்பொடிகளும்,பற்பசைகளும் மிகச்சிறந்தது.

பற்பொடி..

அந்த காலத்தில் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி, உப்பு, சாம்பல் போன்ற பக்க விளைவு இல்லாத இயற்கையான பொருட்களை உபோயோகித்து பல் தேய்த்து வந்தார்கள்.... இதனால் பல் சொத்தை, வலி, சிறிய வயதிலே பற்களை இழத்தல், வாய்துர்நாற்றம், போன்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இயற்கையான பற்களுடன்....

ஆனால் இப்போது நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்களில் நிகோடின் அதிக அளவில் உள்ளது என்று வெளிட்டு நம்மை பீதியடைய வைத்தார்கள்....

இதிலிருந்து விடுபட ரொம்பவும் எளிமையான வழி ஒன்று உள்ளது ...முயற்சி செய்து பாருங்கள்...
வேப்பிலை – நாலு பிடி
கல் உப்பு - ஒரு பிடி

இரண்டையும் மண்சட்டியில் இட்டு வறுத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால்..... வேப்பிலையும், கல் உப்பும் பல்லுக்கு வரும் பல நோய்களைத் தடுக்கும்....இருக்கும் வியாதிகளையும் போக்கும் .....

2 comments:

  1. எளிமையான வழி மிகவும் பயன் தரும் வழி... நன்றி...

    ReplyDelete
  2. தொடர்ந்து கருத்துக்கள் இட்டு ஆர்வமூட்டியதற்கு நன்றி சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது