Tuesday, November 26, 2013

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளுடைய பெற்றோரா நீங்கள்???

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளுடைய பெற்றோரா நீங்கள்??? இஸ்லாம் சொல்லக்கூடிய முறைப்படி உங்கள் பிள்ளைகளை நல்ல குணத்துடன் இறையச்சத்துடன் வளர்க்க விரும்புகிறிர்களா?

இதோ உங்கள் கவனத்திற்கு.........

பிள்ளைகள் இறைவன் உங்களுக்கு கொடுத்த அமானிதச் சொத்து.
அவர்களை நன்முறையில் ஒழுக்கத்துடன் வளர்ப்பது உங்கள் மீது கடமை.

ஆண் பெண் பிள்ளைகளுக்கு தொழுவதையும் குர்ஆன் ஓதுவதையும் மார்க்க கல்வி கற்றுக் கொடுப்பதையும் தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தினமும் பள்ளிவாசலுக்கு காலை,மாலை குர் ஆன் கிளாசிற்கும்,ஜும்ஆ தொழுகைக்கும் மார்க்க உபதேசம் பெறவும்  வாரம் ஒருமுறையாவது உங்கள் பிள்ளைகளை ஈமானிய உணர்வுகளை புதுப்பித்து கொள்ள பள்ளிவாசல் அல்லது மதரசா வுக்கு அனுப்பவும்.

உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே 
ஏகத்துவத்தை பற்றியும்,
தொழுகையின் அவசியம்,
பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
முதியோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
இரத்த பந்த உறவினர்களுக்குரிய கடமைகள்,
நல்ல நண்பணின் தகுதி எவை?எவை?
மரணம்,மறுமை,சொர்க்கம்,நரகம்
என எல்லாவற்றையும் தாயும்,தகப்பனும் சொல்லிக்கொடுக்கும்போதுதான் அதன்படி பெற்றோர்கள் நடந்து காட்டும்போதுதான் நல்ல ஒழுக்கத்தின் விதை அங்கே விதைக்கப்படும்.

நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் புத்தகங்கள்,குர் ஆன்,ஹதிஸ்,கிதாபுகளை உங்கள் பிள்ளைகளுக்கு பரிசாக கொடுங்கள்.
நம் இல்லம் முழுவதும் இஸ்லாம் சொல்லக்கூடிய முறையில் இருந்தால் கண்டிப்பாக நம்மால் இஸ்லாம் கூறும் நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியும்.

உங்கள் ஆண் பெண் பிள்ளைகளை கோ எஜுகேஷனல் கலந்து படிப்பதை தவிர்க்கவும்.ஆணும் பெண்ணும் கலந்து படிக்கும் பள்ளி கல்லூரிகளே வழிகேட்டின் பிறப்பிடம் ஆகும்.

பெண் பிள்ளைகளை பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி கல்லூரிகளிலும்,
ஆண் பிள்ளைகளை ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி கல்லூரிகளிலும் படிக்க அனுப்பவும்.

நல்ல நண்பர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள மட்டும் அனுமதியுங்கள்.
பிள்ளைகளை வழிகெடுவதற்கு கெட்டநட்புகளும் முக்கிய காரணம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆரோக்கியமான முறையில் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்.எதற்கெடுத்தாலும் படி படி என மிரட்டாமல் பிள்ளைகளை மார்க் வாங்கும் மிசின் போல நடத்தாமல் மென்மையான முறையில் நடத்த வேண்டும்

பிள்ளைகளின் அறிவுத்திறமை உட்பட எல்லாமே விதியின் 
படியே நடைபெறும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...
ஒவ்வொரு காரியமும்,விதியில் எழுதப்பட்டுவிட்டது.
மனிதனின் விளக்கமற்ற தன்மையும்,இயலாத்தன்மையும்,
புத்திசாலித்தனமும்,திறமை பெற்றிருப்பது உள்பட எல்லாம் விதிப்படியே நடைபெறுகின்றன.
முஸ்லிம்

டியூசன் அனுப்புவதாக இருந்தாலும் பெண் பிள்ளைகளை 
ஆசிரியையிடமே அனுப்புங்கள்.

படிக்கும் பிள்ளைகளுக்கு தேவையில்லாத செல்போன்,இன்டர்நெட்,
சினிமா சிடிக்கள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

செல்போனில் சினிமா பாட்டுகளை பொழுதன்றும் கேட்பது மரண சிந்தனையும்,மறுமை சிந்தனையையும் மழுங்கடித்து கனவு 
வாழ்க்கையிலே மிதக்க வைத்து தவறான ஒழுக்கத்தை தானே
வரவழைக்கும்

பிள்ளைகளிடம் தேவையின்றி கையில் பணம் காசு கொடுக்காதீர்கள்.
அதிகமாக பணம் புழங்குவது தவறான வழியில் செலவளிக்க சொல்லும்.

பருவ வயதை அடைந்த பெண் பிள்ளைகளுக்கு ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்குங்கள்.ஹிஜாபை சரியானமுறையில் அணிய பழக்கப்படுத்துங்கள்.ஹிஜாப் மற்றும் ஜூம் ஆ தொழுகைக்கு அனுமதிக்காத பள்ளிக்கூடங்களில் உங்களின் உரிமையை தட்டி கேளுங்கள்.அப்படியும் அனுமதிக்காத பட்சத்தில் அப்படிப்பட்ட கல்விநிலையத்தை விட அனுமதிக்கும் கல்வி நிலையத்திலேயே படிக்க வையுங்கள்.

மார்க்க கல்வி பெற்ற பிள்ளைதான் தாய் தந்தையரை சரியான முறையில் மதித்து நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக சமுதாயத்தில் மிளிரமுடியும்.

இல்லையெனில் உலகக் கல்வி மட்டும் பெறும் பிள்ளைகள் நிறைய சம்பாதிக்க மட்டும் செய்து பெற்றோரை சுற்றத்தாரை மதிக்காத வறட்டு மனிதர்களாகத்தான் உருவாக முடியும்.

மார்க்கக் கல்வி மட்டும் தான் இவ்வுலகிலும்,மறு உலகிலும் வெற்றியடைய வைக்கும்.நம் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்து முன் மாதிரி முஸ்லிமாக ஜொலிக்க வைக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.

5 comments:

  1. ஒவ்வொரு நல்ல யோசனைகளையும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Masha allah ithu mutrilum kadaipidippathu nanmai

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது