Sunday, August 18, 2013

நுகர்வோர் வெறி.....

சில பல வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு மாதா மாதம் தேவையான பொருட்களை ஒரு பேப்பரில் எழுதி கடைக்கு சென்று நமக்கு தேவையான
பொருட்களை மட்டும் வாங்கும் பழக்கம் நம்மிடம் இருந்தது.....

நம்முடைய அம்மாக்களிடம் இருந்த சிக்கனம்,
அவசியம் இருந்தால் மட்டுமே வாங்கும்  நல்ல பழக்கங்களை எல்லாம்
நம்மிடம் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது....

நம் வீடுகளில் பல வருடங்களுக்கு முன் 2 சேர் இருக்கும்....
ஒரு பீரோ இருக்கும்....கட்டில் இருக்கும்....
வீட்டுக்கு தேவையான பொருள் மட்டுமே நம் வருமானத்திற்கு
தக்கபடிவாங்கும் பழக்கமும் நம் பெற்றோரிடம் இருந்தது.....

கடந்த 10 ஆண்டுகளில் டிவிக்களில் விளம்பரங்கள் மூலம் எதையெல்லாம்
பார்க்கிறோமோ அதை கண்டிப்பாக வாங்கியே ஆகவேண்டும் என்ற வெறி
நமக்கு தூண்டப்படுகிறது...

சாதாரணமான வெறி எல்லாம் அல்ல அது.....
திட்டமிட்டு பரப்பட்ட மூளைச்சலவை அது....

பக்கத்து வீட்டில் புதிதாய் சேலையில் இருந்து பர்னிச்சர் வரை எது வாங்கினாலும் அதை வாங்கியே ஆக வேண்டும் என குடும்ப பெண்களின் எண்ண ஓட்டம்....

உடன் படிக்கும் மாணவன் விலை உயர்ந்த செல்போனோ அல்லது புதிதாக வந்த ஐபாட்,ஐபேட் என லொட்டு லொசுக்கு சாமான் எதுவாக இருந்தாலும் அது தனக்கு தேவைப்படவில்லையென்றாலும் தனக்கு அந்த அளவுக்கு பொருளாதார வசதி இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது அதுவும் இல்லையென்றால் திருடியாவது அப்பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் இளம்வயதினரிடையே அதிகரித்துள்ளது....

சிலருக்கு எந்த பொருளைப்பார்த்தாலும்
அது தனக்கு தேவையோ இல்லையோ வாங்கியே ஆகவேண்டும்...
அதைப்போன்ற ஒரு பொருள் வீட்டில் இருந்தாலும் வீடு முழுதும்
நிரப்பி வைக்கும் பழக்கம் இருக்கும்...
சில வீடுகளில் எங்கு பார்த்தாலும் பர்னிச்சர் அயிட்டங்களாக வைத்து இருப்பர்....இதுவும் ஒருவகை என மனநோய் உளவியல் அறிஞர்கள்கூறுகின்றனர்......

விழாக்கள்,பண்டிகைகள் என்ற பெயரில்
விழாக்கால சலுகை,10%முதல் 50%வரை தள்ளுபடி....

ஒரு வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்ற காலம் எல்லாம்
மலையேறி இரண்டு பொருள்,மூன்று பொருள் இலவசம் கொடுக்கும்
காலத்தில் இருக்கிறோம்....

எதையெடுத்தாலும் 30 ருபாய் என்று எங்கெங்கு காணினும்
தேவையற்றபொருளை விற்க வியாபார தந்திரங்கள்.
பெருகி உள்ள சாப்பிங் மால்கள் நம்மை தேவைக்கு அதிகமானதை,
ஆடம்பரமான,தேவையற்ற பொருளை வாங்க தூண்டுகின்றன.

ஒரு விசயத்தை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் அது தவறாக
இருந்தாலும் மனித மூளை ஏற்றுக்கொள்ளகூடிய நிலை ஏற்படுகிறது.
அதுபோலவே நாம் காணும் விளம்பரங்கள் இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என்று கூவி கூவி அழைத்து கடன் வாங்கியாவது அல்லது தவணை
முறையிலாவது வாங்கியாக வேண்டிய வெறியை ஏற்படுத்துகிறது...

இலவசமாக பொருளைக் கொடுப்பவரோ அப்பொருளை சும்மா ஒன்றும் கொடுப்பதில்லை...அதன் விலையையும் நம் தலையில் சேர்த்து வைத்தே மிளகாய் அரைக்கிறார்......

இந்த இலவச வெறி....
வியாபாரம் செய்வோரிடம் இருந்து அப்படியே
நாட்டை ஆள்வோரிடம் வந்ததுதான் வினையே.....
வியாபாரியாவது மக்கள் கூட்டம் அலைமோததான் அப்படி பண்ணினார் என்றால் இந்த அரசியல் பண்ணுறவங்க எதுக்கு இலவசம் கொடுக்கிறாங்கனு நம்ம மக்கள் யோசிச்சாங்களா??இல்லை....

கண்டிப்பாக இலவசமாக கொடுக்கப்படும் பொருள் தரமாக இருக்காது,
நீடித்து உழைக்காது என்று தெரிந்தும் வாங்குபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
                               
சில பெண்களுக்கு கடைகளில் ஏதாவது பிளாஸ்டிக் பொருட்களைப் பார்த்தால் ஆசை வந்துவிடும்....உடனே வாங்கி வீடெல்லாம் நிரப்பிவிடுவர்...
இது பர்ஸுக்கு ஆபத்து....மனதுக்கும் ஆபத்து என்று உணர்ந்து இப்பழக்கத்தை விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

5 comments:

  1. உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

    நன்றி...

    ReplyDelete
  3. அனைவருக்குமான அவசியமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இது பர்ஸுக்கு ஆபத்து....மனதுக்கும் ஆபத்து என்று உணர்ந்து இப்பழக்கத்தை விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.//

    இந்த லிஸ்ட்ல தங்கம் மேலருக்கற மோகத்தையும் சொல்லியிருக்கணும். மத்த எல்லா பொருட்களையும் விட தங்கம் நம்மள் மட்டுமில்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சரித்துவிடக் கூடிய மோகம் தங்க மோகம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது