Sunday, February 10, 2013

பிப்ரவரி 14க்கு 14

காதலின்(காமத்தின்)ஆரம்பம்  பார்வை,முடிவு 14.

1.ஏமாற்றப்பட்டுவிடுதல்
 2.கற்பை  இழந்துவிடுதல் 
3.தற்கொலை 
4.திருமணம் 
5.ஊரை விட்டு ஒடி விடுதல் 
6.பெற்றோரை விட்டு பிரிந்து விடுதல் 
7.காதலிப்பது பெற்றோருக்கு தெரிந்து விட்டால் மற்றவருக்கு திருமணம் செய்து வைப்பது 
8.கொலை செய்யப்படுதல் 
9.பெற்றோர் அவமானப்படுதல் 
10.வீட்டில் சிறை வைக்கப்படுதல்
11.தண்டிக்கப்படுதல் 
12.பெற்றோர்கள் காதலித்தவருடன் ஊரை விட்டு காலி செய்து விடுதல் 
13.காதலித்தவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளுதல் 
14.ஒருவரை காதலித்து கைவிட்டு விட்டு  வேறொருவரை  காதலித்தல் 


*ஆண்,பெண் காதலிப்பது(friendship) காமத்தின் வெளிப்பாடு .எனவே,
காதலிக்கும் காதலர்களே!!!நீங்கள் எந்த பட்டியலில் இருக்கிறீர்களோ தெரியவில்லை.இந்த காதல் தேவையா???எனவே பிடித்தமானவரை காதலித்துத்  திருமணம் செய்யாதீர்கள் பிடித்தமானவரை திருமணம் செய்துவிட்டு காதலியுங்கள்.


காதலர்கள் சிந்தனைக்கு ....
 .
#காதல்(காமம்)என்ற பெயரில் கண்ட கண்ட  இடங்களில் 
சுற்றித் திரியும் கா(ம)தல்ஜோடிகளே !!!திருமணம் செய்து விட்டு சுற்றுங்கள் ,நீங்கள் திருமணம் செய்யாமல் சுற்றினால் மற்ற ஜீவராசிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ???

#காதலுக்காக (காமத்திற்காக)பாசமூட்டி  வளர்த்த பெற்றோரை பரிதவிக்க விட்டுவிட்டு பிரியமானவர்களுடன் பறந்து செல்லும் காதலர்களே !!!நாளை உங்களுக்கும் பிள்ளை பிறந்து அந்த பிள்ளை காதலுக்காக (காமத்திற்கு)உங்களை விட்டு விட்டு  ஓடி விட்டால் உங்கள் நிலை என்னவாகும்,உங்கள் தலைகுனிவு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை???

#ஆடைகளை அழகாக வைத்துவிட்டு அந்தரங்கத்தை அசிங்கமாக வைத்து கொள்ளாதீர்கள்.ஆடைகளையும்,அந்தரங்கத்தையும் அழகாக வைத்து கொள்ளுங்கள் .

#காதல் (காமம்)என்ற பெயரில் கற்பை இழந்து விட்டு கண்ணீர் வடிக்காதீர்கள்.திருமணம் செய்து கொண்டு திருப்திகரமாக வாழுங்கள்.

வாழ்த்துக்கள் 
அமீர்

4 comments:

  1. நல்லாவே சொன்னீங்க... உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
  2. பிடித்தமானவரை திருமணம் செய்து பின் காதலியுங்கள்...என்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது.அறிவுக்குப் புறம்பான ஆலோசனை.ஒருவருடன் நன்கு நட்புடன் பழகிய பின் தன் அவரைப் புரிய முடியும்.புரிந்த பின் தான் ரசனைகளும், விருப்பங் களும் இணையும்பட்சத்தில் காதலிக்க முடியும்.பழகாமல் புரியாமல் காதல்கொள்ளாமல் ஒருவரை எப்படி பிடிக்கிறது என்று முடிவு செய்வது..மணம் முடிக்க சம்மதிப்பது..எல்லாம் பைத்தியக்காரத்தனமான உளறல்.

    ReplyDelete
    Replies
    1. நான்கு பேருடன் பேசி மூன்று பேருடன் பழகி இருவரைக்காதலித்து ஒருவரை திருமணம் செய்வதா........???

      Delete
  3. migavum sariyaaga sollirukeergal......

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது