Saturday, October 6, 2012

குறை சொல்ல வேண்டாமே!!!



மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இறைவன்
வாழ்வதற்காக உறுப்புகளை அன்பளிப்பாக
கொடுத்துள்ளான்.அவற்றில் மிக சிறந்தது நாவு என்னும்
சிறியதொரு சதைத்துண்டுதான்.....

அதனுடைய பயன்கள் தான் எத்தனை??எத்தனை??
உண்மையை கூறி மக்களை நல்வழிப்படுத்துவதும் நாக்குதான்....
பொய் கூறி வழிகெடுப்பதும் அதே நாக்குதான்.....
கை வலித்தாலும்,தலை வலித்தாலும்,மனசு வலித்தாலும்
அதை வெளிப்படுத்துவதும் நாக்குதான்......
மனிதனின் வெளி உறுப்புகளில் மிக கொடியதும் இந்த நாக்குதான்.....
மற்ற உறுப்புகளை போல் இது அடிக்கடி சோர்வடைவதுமில்லை.
மற்றவர்களின் குறைகளையெல்லாம் சொல்லி காண்பித்து
இன்பம் காணுவதில் அதற்கு நிகர் யாருமில்லை....
நாக்கு இருக்கேன்னு தேவையில்லாமல் பேசாதீங்க....
உப்பு போட்டாற்போல் கொஞ்சமாக பேசுங்கள்...
அளவுக்கு அதிகமாக உப்புப் போட்டால் அந்த சாப்பாட்டை
யாரும் தொடமாட்டாங்க....
அதுபோல வழவழவென்று பேசுபவர்களுக்கு
மதிப்பும் ,மரியாதையும் துளியும் இருக்காது......
இன்னும் நம்மில் பெரும்பாலான மக்களுக்கு
எப்ப பார்த்தாலும் பிறரை குறை சொல்லும் பழக்கம் இருக்கும்....
சாப்பாட்டை குறை சொல்லும் பழக்கம் சிலருக்கு ரொம்ப பிடிக்கும் போல....
சொந்தம்,பந்த வீட்டுக்கு போனாலும்,கல்யாண வீட்டிலயும்
மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு குறை சொல்லுவார்கள்.
உப்பு சரியில்ல,மட்டன் வேகலை,ஒழுங்கா கவனிக்கலனு ஆயிரத்தெட்டு
குறை சொன்னாதான் திண்ட சோறு ஜீரணமாகும்.
இன்னும் சிலர் அடுத்தவரின் உடை ரசனையை விமர்சிப்பார்கள்......
அது அழகாவே இருந்தாலும் பாராட்ட மனசு வராது.....
அவங்களாகவே இது நல்லா இருக்கானு கேட்டால்
அய்யய்யோ.....அந்த கடையில ஏன் வாங்குன...???
துணி நல்லாவே இருக்காதே.....
இதெல்லாம் ஒரு கலரா??
உனக்கு ஏன் கழுதை கலர் டிரஸ்ஸா கிடைக்குதே????னு
குறை சொல்வாங்க....
இன்னும் சிலர் அடுத்தவரின் உடல்குறையை சொல்லி காட்டுவார்கள்...
சொட்டை,வழுக்கை,குட்டை,கருப்பு என்று.....
அது அவர்களுக்கு எவ்வளவு மனவேதனையை ஏற்படுத்தும்
என அறியாமல்.....
இன்னும்,அடுத்தவரின் அறியாமையை குறை சொல்லும் விதமாக
உன் தலையில களிமண்ணா இருக்கு???
நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குனு.....
மட்டம் தட்டுவார்கள்........
இவ்வாறு பேசுவது அவர்களின் மனதை குத்தி கிழித்திறுக்கும் தெரியுமா....??
நாங்க உள்ளதைதானே சொல்றோம் என தங்களின் செயலுக்கு
சரி காண்கிறார்களே.....அது மிகப் பெரும் தவறு....
நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் காற்றில்
கரைந்துவிடுகிறது என நினைக்கிறோம்....
இல்லை...இல்லை....அது மற்றவர்களின் மனதில் பதியப்படுகிறது
என்பதை சுத்தமாக மறந்துவிடுகிறோம்....
இவ்வாறு பேசுபவர்கள் யாரோ,எவரோ அல்ல....
நம்முடைய வாழ்க்கையில் நானும்,நீங்களும்
இதே தவறை செய்திருப்போம்.....
நாம் அனைவரும் இனிமையாக பேச கற்றுக் கொள்வோம்....
கடினமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்....
ஒவ்வொரு வார்த்தையும் அன்பில் தோய்த்தெடுங்கள்.....
அன்பு இவ்வுலகையே அடக்கியாளும் சக்தி படைத்தது....
அன்புக்கு அடிமையாகாதவர்கள் இவ்வுலகில் மிகக் குறைவு....
ஒரு சிறிய இனிமையான வார்த்தையின் மூலமாக
அடுத்தவரின் மனதை குளிரவைக்கும் கலையை கற்றுக்கொள்வோம்...
நம் வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதை
திரும்ப முடியாத பயணத்தைக் கொண்டது.....
அதில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் முக மலர்ச்சியோடு 
நடந்து கொண்டால்ஆயிரமாயிரம் இதயங்களை கொள்ளை அடிக்கலாம்.....
உதாரணமாக.....,
சாப்பாட்டில் குறை இருந்தால் சாப்பாடு சூப்பர்....
உப்பு மட்டும் கம்மியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு சொல்லலாம்.
அடுத்தவங்க டிரஸ் ரசனை உங்களுக்கு பிடிக்கலைனாலும்
வாவ்.....சூப்பர்னு சொல்லுங்க....
அவங்க முகத்தில ஆயிரம் வாட்ஸ் லைட் ஜொலிக்கும்.....
கருப்பா இருந்தாலும் உன் முகம் களையா அழகா இருக்குனு சொல்லுங்க...
கண்டிப்பா சந்தோசப்படுவாங்க...

புரிந்துகொள்ளும் திறமை எல்லோருக்கும் ஒரே போல இருப்பதில்லை....
அதற்காக மட்டம் தட்டுவதை விட ,இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணலாம்
உன்னால முடியும்னு தன்னம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளை சொல்லிப்
பாருங்களேன்....கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.....

எத்தனையோ குடும்பங்கள் பிரிந்ததும் இதே நாவினால்தான்.....
எத்தனையோ உறவுகள் சிதைந்தும் இதே நாவினால்தான்....
எத்தனையோ நட்புகள் பிரிந்ததும் இதே நாவினால்தான்....
பிரச்சினைகள் வரும்போது நமக்குள் சமாதானம்
செய்து வைப்பது இதே நாவுதான்.....

அறிஞர் ஒருவரின் கூற்று இது.....
‘நாவு என்பது பேசுவதற்காகப் படைக்கப் பட்ட ஒன்று...
பேச்சு என்பது ஒரு செல்வம்.....
தன் கருத்தை தெளிவாக வெளியிடத் தெரிந்த மனிதனுக்கு
சமுதாயத்தில் நல்ல மதிப்புண்டு.....அவன் நாவு நேரிய வழியில் சென்றால்-
அவன் உள்ளம் புனிதமான சிந்தனையை வளர்த்தால் அவன் பேச்சு
சீர்குலைந்த சமுதாயத்தையே திருத்தி அமைத்துவிடும்....
நாமும் முயற்சிப்போமா????













14 comments:

  1. குறை ஒன்றும் இல்லை.....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      Delete
  2. எத்தனையோ குடும்பங்கள் பிரிந்ததும் இதே நாவினால்தான்.....

    எத்தனையோ உறவுகள் சிதைந்தும் இதே நாவினால்தான்....

    எத்தனையோ நட்புகள் பிரிந்ததும் இதே நாவினால்தான்....

    பிரச்சினைகள் வரும்போது நமக்குள் சமாதானம்

    செய்து வைப்பது இதே நாவுதான்.....





    இந்த வரிகள் எனக்கு பிடிச்சுருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி


      Delete
  3. ஸலாம்

    //அடுத்தவங்க டிரஸ் ரசனை உங்களுக்கு பிடிக்கலைனாலும்

    வாவ்.....சூப்பர்னு சொல்லுங்க....

    அவங்க முகத்தில ஆயிரம் வாட்ஸ் லைட் ஜொலிக்கும்.....//

    உள்ளத்துல ஒன்ன வச்சுக்கிட்டு வெளிய ஒன்னு பேசுறது தப்பா தெரியலா ... இதுக்கு பேர் தான் நயவஞ்சகம் ... ம்ம்ம் பரவா இல்லை நு சொல்லலாம் ..

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ......

      இதுக்கு பேரு நயவஞ்சகம் கிடையாது.....

      அவங்களுடைய மனம் நோகக் கூடாதுனு சொல்கிறோம்....

      நயவஞ்சகத்தின் அடையாளம் மூன்று...

      பேசினால் பொய் பேசுவான்.

      வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான்.

      நம்பினால் மோசடி செய்வான்.

      மேலும்,இப்படி பாராட்டுவதால் மார்க்கத்தில் ஒன்றும்

      குறைவு ஏற்படபோவதில்லை....

      தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி....:-)))

      Delete
  4. குறை சொல்ல மனம் இல்லை ..பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
    நாவினால விளையும் தீமைகளை மிக அழகாக அதே சமயத்தில் மனதில் நிற்குபடி எளிமையாக உரைக்கும்படி சுட்டி காட்டியிருக்கிறீர்கள் மிக அருமையான பதிவு வாழ்த்துகள் தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோதரா....

      தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      Delete
  6. மிக அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ :))))

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது