ஆதி மனிதன் முதல் கடைசி
மனிதன் வரை அனைவருக்கும்
தேவைப்படுவது அன்புதான்...
பணக்காரனாக இருந்தாலும்,
ஏழைத் தொழிலாளியாக
இருந்தாலும்
உழைத்துக் களைத்து விட்டு
வரும்போது அன்பைச் சொரியும்
உள்ளங்களைததான்
தேடுவார்கள்....
எவ்வளவு பணம் சம்பாரித்தாலும்
எங்கே ஊர் சுற்றினாலும்
“நமக்குனு ஒரு வீடு.....
நமக்காக காத்திருக்கும்,நம்மை காணோம் என
பதை பதைத்து தேடும் அம்மாவோ,மனைவியோ வாய்த்துவிட்டால் ”.......
அதை சொல்ல வார்த்தைகள் இருக்கா என்ன??
சில வீடுகளில் தாயும்,பிள்ளையும் அல்லது கணவனும்,மனைவியும்
எலியும்,பூனையுமாக இருப்பார்கள்.
ஆனால்,நமக்கு உடம்பு சரி இல்லையென்றால் அவர்கள் நம்மிடம் காட்டும்
அக்கரை,பிரியம் எல்லாம் அதிகமாகும்....சே....இவங்களா போயா இப்படி நினைச்சோம்னு நினைக்க வைப்பாங்க...
இன்னும் சில பேர் இருப்பாங்க....
தன் குடும்பத்தினர் மீது அன்பு,பாசம் எல்லாம் டன் கணக்குல வச்சிருப்பாங்க....
ஆனா,எப்படி வெளிக்காட்டணும்னு தெரியாது...
எப்ப பார்த்தாலும் இஞ்சி திண்ட குரங்கு போல உர் ருன்னு இருப்பாங்க....
வாயைத் திறந்தால் மனசைக் கிழிக்கும்
வார்த்தைகளைத் தான் கொட்டுவாங்க...
அப்டி இருக்கிறது நமக்கும் நல்லது இல்ல...
நம்மை சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லது இல்லை...
அன்புகிறது மல்லிகைப்பூ மாதிரி...
அதை மூடி வச்சா வாசம் வெளியே போகுமா??
சோ,அன்பை வெளிக்காட்டகூடிய செயல்களை நாம செய்யணும்...
நம்ம பையன் ரொம்ப சேட்டை பண்றானா.....?
அவண்ட எப்டி அன்பை வெளிக் காட்டுறது?
அன்பாக தலையை கோதிவிடலாம்.
ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கும்போது கன்னத்தில்
முத்தமிட்டு அனுப்பி வைக்கலாம்.
செல்லம்,தங்கம்,அறிவு,ராஜானு என்ன வார்த்தைகள்
தெரியுதோ அதை வச்சு கொஞ்சலாம்...
பசங்க வீட்டில் நமக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்ணினாலும்
கண்டிப்பா பாராட்ட மறந்துடாதிங்க...
சர்பிரைஸா கிஃப்ட் கொடுக்கலாம்.....
நாம் எவ்ளோ அன்பை வெளிப்படுத்தறோமோ அதே அன்பு
நமக்கும் கண்டிப்பா கிடைக்கும்....
இன்னும் நிறைய இருக்கு....
இது போல வாழ்க்கைதுணையிடமும் அன்பை வெளிக்காட்டுனோம்
என்றால் லைஃப் கண்டிப்பா ஜொலிக்கும்....
மீண்டும் வருவோம்ல........
Tweet | ||||||
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅருமையான ஆக்கம் சகோதரி
நான் அடைந்த ,உணர்ந்துகொண்டிருக்கும் இன்பங்களை
உங்களின் கட்டுரை அப்படியே பிரதிபலித்திருக்கின்றது.
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
ரஹ்மான் சாதிக் .மு
வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ.....
Deleteதங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமுதல் பதிவே அன்பை பற்றி சொல்லி அன்புடன் ஆரம்பித்து இருக்கிறிர்கள் தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்
அன்புடன்
ரிப்னாஸ்
வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ.....
Deleteதங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ.....
Deleteதங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி....
தங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி
Assalamu alaikum.. romba nalla iruku. Arumaiyana varihal.
ReplyDeleteவ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ.....
Deleteதங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
ஜசாகல்லாஹூ கைர்
ஆரம்பமே அன்ப்பாக இருக்கிறது ..ம்ம்ம் கலக்குங்க சகோஸ் .....எதாவது சந்தேகம்னா என்ன கேக்காதிங்க சகோ இப்படிக்கு >>>>ரினாஸ் <<<<
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி சகோ
Deleteஅன்புடையார் அகிலம் உடையவர் அதுபோல
ReplyDeleteஅன்பிலார் அணுவும் இல்லார்
அன்புடன் ஆரம்பித்த உங்களின் ஆக்கம்
அகிலம் வரை செல்லட்டும்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
http://www.engenaan.blogspot.in/2010/11/blog-post_5688.html
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
ReplyDeleteவாழ்த்துக்களோடு, அன்புடன் கூடிய பிராத்தனைகள் ஆஷா..:)
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்.............
ReplyDeleteஅன்பான தொடக்கம்.......... அழகான வரிகள்........ ஆழமான சிந்தனை........
தொடருங்கள்............
அன்புடன்.........
முபி ஜன்னத்............
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ ஆஷா அக்கா...
ReplyDeleteஇபெ-ல உங்க ''நீங்க ரமலான் முஸ்லிமா?'' பதிவு உங்கள் எழுத்தாற்றாலுக்கு
நல்லா சாட்சி.மாஷா அல்லாஹ்.
உங்கள் வலைப்பூ டிசைன் & இந்த பதிவு இரண்டும் அருமை.
இன்ஷா அல்லாஹ் மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற வாழ்துக்கள் சகோ.
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅஸ்ஸலாமு அழைக்கும் ஆஷா..!
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான முதல் பதிவு..! பதிவுலகில் வெற்றிக்கொடி நாட்ட என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..!! :))
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்...
ReplyDeleteஆஷா.. ஆரம்பமே அசத்தல்... சூப்பர்.
நல்ல எழுத்துநடை!
பதிவுலகில் வெற்றிக்கொடி நாட்ட என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..!! :))
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆமி....
Deleteஜசாகல்லாஹு கைர்
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஇறைவன் கொடுத்த அறிவாற்றலை மற்றவருக்கு கொடுக்க நினைக்கும்போது உள்ளத்தில் ஒதுங்கியிருக்கும் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் . பாராட்டுகள் பலவிதம் அது நமக்கல்ல.ஆற்றலைக் கொடுத்த இறைவனுக்கே உரியவை உங்களுக்கு மன மகிழ்வு கிடைக்கும் போது தொடருங்கள் .அதுதான் உங்கள் சேவை அதனால் உங்களுக்கு நன்மை வந்து சேரும் .
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete