Tuesday, October 9, 2012

தொலைந்து போன மழலைப் பருவம்

தற்போது பேஸ்புக் பக்கங்களிலும்,சமூக வலைதளங்களிலும்
காமெடி,ஜாலி,ஃபன் என்ற பெயரில் ஏதாவது சில புகைப்படங்களைப்
பதிந்து  அதில் உள்ளவர்கள் பேசுவது போலவே இவர்களாக வசனங்கள்

எழுதி லைக்,கமெண்ட்,ஷேர்  செய்து கொள்வார்கள்.
ஏதோ அரசியல்வாதிகளையும்,மத வியாபாரிகளையும் தான்
செய்கிறார்கள் என்று பார்த்தால் பிஞ்சு குழந்தைகளையும்
விட்டு வைப்பதில்லை....பிஞ்சிலேயே பழுக்க வைப்பது போல்
பெரியமனுசத்தனமான வசனங்கள்.

மழலைகள் சிகரெட் பிடிப்பது போன்ற போட்டோசாப் செய்யப்பட்ட
புகைப்படங்கள்......

குழந்தைகளை அவர்களுடைய இயல்பை விட்டும் திசை திருப்பும்
இத்தகைய போட்டோகளுக்கும் நாமும்,லைக்,ஷேர் பண்ணுகிறோம்...

என்ன கொடுமை?????
இப்ப உள்ள மழலைகளும் நெஞ்சில் நஞ்சை ஊட்டும் சினிமா பாட்டுகளை
கேட்டு வளர்வதாலும்,காமெடி என்ற பெயரில் பெற்றோரால்
பார்க்க சலுகை அளித்து அனுமதிக்கப்படும்  இரட்டை அர்த்த வசனங்கள்
கொண்ட  காட்சிகளைப் பார்ப்பதால் வயதுக்கு மீறிய பேச்சுகளை
எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது....



இதன் விளைவு.....
இப்படிப்பட்ட பின் விளைவுகளும் நம் பிள்ளைகள் சந்திக்க நேர்கிறது....
ஓடி ஆடி வியர்வை சிந்திய நம்முடைய பிள்ளைப் பருவம் எங்கே???

மழையில் நனைந்த நம் மழலைப்பருவம் எங்கே???
இப்ப உள்ள பசங்களை மழையில் நனைய விடாமல்
கொடுமைப் படுத்துகிறோம்....
காரணம் காய்ச்சல் வருமாம்.....
மழை நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றுவதுதான் காய்ச்சல்
என அறியாமல் குழந்தைகளை மிரட்டி ஒடுக்குவதால் தான்
இப்ப உள்ள பசங்க ஆள் இல்லாத நேரம் பார்த்துத் தண்ணீரில்
ஆட்டம் போடுகிறார்கள்
இன்னும் சில பெற்றோர் வெயிலில் கூட விளையாட அனுமதிப்பதில்லை..........
தனியாக வளரும்,யார் கூடவும் பழகாமல் இருக்கும் பிள்ளைகளை விட
நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் பிள்ளைகள்  வெற்றி,தோல்வியை
ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்கிறார்களாம்....
முன்னொரு காலத்தில் நாமெல்லாம்
பூந்தளிர்,அம்புலி மாமா,வாண்டு மாமா,
சிறுவர் மலர் புத்தகங்களில் நிறைய கதைகள் படித்துள்ளோம்....
அதில் நல்லவர்கள் பொறுமையாக இருப்பதால் அவர்களுக்கு
கிடைக்கும் பரிசுகளையும்,பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு
பிறர் உதவி செய்வார்கள் என்ற கருத்துகளும் நம் மனதில்
பதிந்தன......

ஆனால்,இப்பொழுது உள்ள பிள்ளைகள் இந்த சுகங்களையெல்லாம்
அனுபவிக்காமல் டைம் டேபிள் போடப்பட்ட மிசின்களைப் போல்
வாழ்கிறார்கள்..
நாம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் கொடுப்போமா????





இயற்கையாக சாப்பிட்டு ஓடி ஆடிய
காலமெல்லாம் மலையேறி போய்



பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களை தின்று 
விளையாடுகிறார்கள்.....


பிறரை அடிப்பது,தாக்குவது போன்ற வன்செயல்கள்,வன்முறை
எண்ணங்கள் இளைய சமுதாயத்தினரிடம் அதிகரிப்பது
வேதனைப் பட வேண்டிய விசயம்......




வீடியோ கேம்,செல் போன் கேம்

இதனால் கை விரல்கள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகிறது.....



நம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்க சொல்லி ஆர்வமூட்டலாம்....

இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட
விளையாட அனுமதிக்கலாம்......
பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள
நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து
புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....
நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின்
கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???

31 comments:

  1. Its time to rethink and reflect on how we are bringing up our children

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  2. இந்த காலத்து பசங்களுக்கு விளையாட அனுமதி இல்லை என்பது வருந்த வேண்டிய விஷயம் தான்..

    ஆனா மழையில் ஷாம் விளையாடுவான் :-) வெயிலில் மட்டும் மாட்டேன்... அப்பறம் என் கலருக்கு வந்துடுவான்னு பயந்தேன் ;-)

    ReplyDelete
    Replies
    1. சூரிய ஒளி உடம்புக்கு நல்லது தான்....
      வைட்டமின் டி அதுல இருக்காம்....
      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

      Delete
    2. சகோ.... காலை இளம் வெயில்....அதாவது இந்திய நேரம் 8மணிக்குள் உள்ள வெயிலே வைட்டமின் சத்துடன் உள்ள ஒளி. அதற்குப்பின் நோயைத் தரக்கூடிய ஒளிக்கீற்றுக்கள்தான் அதிகம். எனவே அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியே ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றை நாமும் கூட இருந்து செய்ய வைப்பது நல்லது. அதுவும் வாகனப்போக்குவரத்தால் சுற்றும் முற்றும் புகையும் ரசாயனமும் காற்றில் கலப்பதால் இன்னும் சீக்கிரமே--67க்குள் முடித்துக் கொள்வது நலம்...இன்ஷா அல்லாஹ்.

      Delete
  3. மிக அருமையான பதிவு, ஒரு சில திண்பண்ட புகைப்படங்கள் நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டது.

    இயந்திர வாழ்வை நாம் குழந்தைகளுக்கும் பரிசாக கொடுத்து விடுகிறோம். சிந்திக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. மிக நன்றி சகோ....
      இயற்கையான எளிமையான வாழ்க்கையை
      பிள்ளைகளுக்கு பரிசாக கொடுப்போம்.

      Delete
  4. Replies
    1. தாங்க்ஸ் ....
      ஜசாகல்லாஹூ சகோ

      Delete
  5. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  6. புகைப்படத்துடன் கூறிய செய்தி அருமை சகோ

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி. ஆஷா பர்வீன் உங்கள் பதிவு இப்போ இருக்கிற நிலையை நன்கு படம்பிடித்து காட்டுகிறது, பகிர்வு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ...
      இந்நிலையை நாம் அனைவரும் சேர்ந்து மாற்ற வேண்டும் என்பதே என் ஆசை

      Delete
  8. நல்ல பதிவு. சிறுவர்கள் புகை பிடிப்பது போன்ற படங்களை நாமும் வெளியிட்டு அதனை பிரபலப்படுதத வேண்டாமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.....
      தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்

      Delete
  9. சகோ ஆஷா...

    முற்றிலும் உண்மை.. அளவிற்க்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்... எதுவும் எல்லைக்குள் இருந்தால் நலமே...

    சிறந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. பதிவு ரொம்ப நல்லா இருக்கு தங்கச்சி............ :))

    ReplyDelete
    Replies
    1. நல்லது.ரொம்ப சந்தோசம் அக்கா....:)))

      Delete
  11. நீங்கள் சொல்வது ரொம்பவே உண்மை.எரிச்சல் தான் வரும் பிள்ளைகை வைத்து அசிங்கமாக காமெடி பண்ணிணால்...கூட உக்காந்து கெட்ட கெட்ட படம் பாக்குறோம் அசிங்கமான நடனமும் பாக்குறோம் அதான் அப்படி பேசுது பிள்ளைக இன்றைய இரண்டு வயசு வாண்டுக்கு கூட சினிமா நடிகர் நடிகை பெயர் தெரியுது அதை பெற்றோர் பெருமையா நினைச்சுக்கறாங்க.
    நான் எனக்கு கிடைத்த குழந்தைப்பருவன் என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டியது செய்து கொடுப்பேன்..காலை இளவெயில் சருமத்துக்கு ரொம்பவும் நல்லது உண்மையை சொல்ல போனால் சருமம் ஜொலிக்கும்.
    இன்னும் சொல்லப்போனால் நிறைய பேர் எந்த வீட்டுக்கு போனாலும் என் பிள்ளை சுடுதண்ணி தான் குடிக்கும் இதை தான் சாப்பிடும் ஹார்லிக்ஸ் தான் குடிக்கும் என்று வாலிப வயசு பிள்ளைகளை கூட நோயாளிகளாக்கிவிட்டு தாராளமாக சிப்ஸ் வாங்கி கொடுப்பாங்க...சரியான நேரத்தில் உங்க பதிவு

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளுக்கு சரியான பாதையை அமைத்து கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை......
      பெற்றோர்களோ பிள்ளைகளை பணம் சம்பாதிக்கும் மிசின் ஆக்குவதிலே குறியாக உள்ளனர்....
      நல் ஒழுக்கத்தை கற்று கொடுப்பது பெற்றோரின் கடமை

      Delete
  12. சூப்பர் மேட்டர் சகோ. தொடருங்கள்.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சகோ நல்ல தகவல்

    மேலும் தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் குலாம் சகோ...
      கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  14. Totally agree and valid concerns!

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது