Friday, October 25, 2013

சீட்லெஸ் பழங்கள் ???

                                                ஹை பிரிட் சப்போட்டோ


                                                   சீட்லெஸ் திராட்சை


                                 
   
                                                   சீட்லெஸ் நாவல்பழம்


                                                   
                                               
                                                    சீட்லெஸ் மாதுளை
                                                   
                                               
                                                     

                                                     சீட்லெஸ் பப்பாளி

                                                       

மிகக்குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் காண துடிக்கும் பேராசை விவசாயிகளின்  ஊனமுற்ற குறைமாத குழந்தைகள்
போன்றவை தான் இவை ...

ஹைபிரிட் தக்காளீ,ஹைபிரிட் வெங்காயம்,ஹைபிரிட் எலுமிச்சை என எங்கெங்கு காணினும் ஹைபிரிட்டும்,சீட்லெஸ்ஸும் தான் ...

                                                     
விதையில்லா பழங்கள் விளைவிக்கும் முயற்சி பசுமைப்புரட்சிக்கு
பிறகு ஏற்பட்டது...மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

நாவல்பழம்,இலந்தைப்பழம்,ஈச்சம்பழம் எல்லாம் விரும்பி சாப்பிட்ட மக்கள் ஆப்பிள்,ஆரஞ்சு  மட்டுமே உயர்ந்த பழ வகைகள் என தற்போது கருதுகிறார்கள்.

முன்னாடி ஸ்கூல் அருகில் இம்மாதிரியான பழங்கள் விற்கும்.....
இப்ப ஸ்கூல் அருகில் உள்ள கடைகளில் சரம் சரமாக கண்ட கழிய எண்ணெய்களில் இருந்து பொறிக்கப்பட்ட சிப்ஸுகள் தான் கலர் கலரான பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது...

விதைகளையும்,கொட்டைகளையும் நாம் சிறு வயதில் அறியாமல் பழங்களோடு விழுங்கும்போதும்,பறவைகளின் கழிவுகளின் மூலமும் விதை பரவலாக்கம் நடைபெற்றது.

ஆனால்,விதையே இல்லாத பழங்களின் மூலம் விதை பரவலாக்கலை தடுக்கும் திட்டம் திட்டமிட்டு பரப்பபட்டது...இயற்கை மற்றும் நாட்டு வைத்தியம் எல்லாம் மூடத்தனம் என்ற பெயரில் இயற்கையாக நம் ஊரிலேயே கிடைக்கும் பழங்களை,தானியங்களை சாப்பிடுவது பத்தாம்பசலித்தனமாக காட்டப்பட்டு...நமக்கும் சற்றுப்பொருந்தி வராத குளிர்பிரதேச பழங்கள்,தானியங்கள் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என ஆங்கில மருத்துவர்களால் பாடம் கற்பிக்கப்பட்டது.

சீட்லெஸ் பழங்களை உண்ணும் நாம் எதை வைத்து மரத்தை நடுவோம்???
நம் சந்ததிகளுக்கு வெற்று பூமியை விட்டுச்செல்லப்போகிறோமா..???
புறக்கணிப்போம்....சீட்லெஸ் பழங்களை....!!!
ஆதரிப்போம் இயற்கை விவசாயத்தை...!!!

உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;
குர் ஆன் 2:195

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்;

குர் ஆன் 6:95

11 comments:

  1. சீட்லெஸ் பழங்கள் உடல் நலத்திற்கு கேடு தருமா???

    ReplyDelete
    Replies
    1. மறு உற்பத்தி செய்ய முடியாத மலட்டுபழங்களில் என்ன உயிர்ச்சத்தை எதிர்பார்க்கமுடியும்..???

      உயிரணுக்கள் இல்லாத பிள்ளைகள் பெறுவதை நாம் விரும்புவோமா..???

      Delete
    2. அனைத்துமே குப்பைதான்

      Delete
  2. தகவளுக்கு நன்றி

    ReplyDelete
  3. தகவளுக்கு நன்றி

    ReplyDelete
  4. தகவளுக்கு நன்றி

    ReplyDelete
  5. இயற்கைக்கு மாறானது என்றுமே கெடுதி தான்...

    ReplyDelete
  6. நல்லதொரு ஆக்கம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. சீட்லஸ் பழங்கள் சீக்கிரமே மலட்டுத் தன்மையை அதிகரிக்க செய்வதாய் படித்த ஞாபகம்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது