Monday, October 14, 2013

தியாகத்திருநாள்......என்ன படிப்பினை பெற்றோம்....???

குர்பானி கொடுத்து இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு 
கூறும் நன்னாள்...

எத்தனையோ தியாகத்திருநாளை நாம் கடந்தாலும்,தினமும் இப்ராஹீம் நபியின் அருளும்,பரக்கத் வேண்டி பிரார்த்தனை செய்தும் இன்னும் நம்மிடம் அற்ப குணங்களான பிடிவாதமும்,முன் கோபமும் நம்மை பிடித்துக்கொண்டு விடாமலே இருக்கிறது.
                                             

இப்ராஹீம் நபியிடமும்,அவருடைய மனைவியிடமும்,அவருடைய பிள்ளையிடமும் எவ்வளவு அழகிய முன்மாதிரி உள்ளது.....

பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் எப்படி ஒரு முன்மாதிரிக்குடும்பத்தை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்......!!! சுபுஹானல்லாஹ்...

நம்மில் எத்தனை பேர் முன்மாதிரி முஸ்லிம் குடும்பமான இப்ராஹீம் அலை அவர்களின் குடும்பத்தைப்பற்றி நம் இல்லங்களில் பேசியிருப்போம்...விவரித்திருப்போம்...

தந்தையின் தியாகம் எப்படிப்பட்டது....

தாயாரின் தியாகம் எப்படிப்பட்டது...

பிள்ளையின் பொறுமையும்,தியாகமும் எப்படிப்பட்டது......

நம் வீடுகளிலே அதிகம் பேசப்பட வேண்டிய அழகிய முன்மாதிரிகள்...

ஒரு இஸ்லாமியக்குடும்பம் செய்த தியாகம் இந்நன்னாளில் நினைவு கூறப்பட்டு நம்மிடையே அத்தியாகச்செயல் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.....

நம்முடைய தவறுகள்,பிழைகள் களையப்பட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்ள உறுதிமொழி எடுக்க வேண்டும்

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.9:114

ஒவ்வொரு இல்லத்தின் அங்கத்தினரும் பொறுமையையும்,இரக்க குணத்தையும் இந்நன்னாளில் அதிகமாக வளர்த்துக்கொள்வோம்...

திடல் தொழுகையில் குடும்பத்தோடு பங்கேற்று பெருநாள் உரையை கேட்டு 
நம்மிடையே இரக்க குணமும்,பொறுமையும் அதிகமாக இறைவனிடம் துஆ செய்வோம்...

பெண்கள் பெருநாள் அன்று காலை சமையலை எளிமையாக செய்துவிட்டு பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள ஆர்வமாக செல்லுங்கள்...வீட்டிலோ,பெண்கள் சேர்ந்து தொழுவதை தவிர்த்துவிட்டு திடலில் தொழுது நபிவழியை உயிர்ப்பிக்கவும்...

தயவு செய்து அடுப்பங்கரையில் குடி இருக்காமல் பெருநாள் உரையை கேட்டு பயனடையவும்....
________________________________________________________________________________
திடல் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்...

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும்

 “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

1 comment:

  1. your website is very good. keep it up...if you need code for your website. please visit this link

    (என் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.)
    http://ungalblog.blogspot.com/p/codes.html

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது