Sunday, March 2, 2014

ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் புங்க மரம்

இறைவனின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் கருவிகளாக மரங்களும், செடிகளும் உள்ளன.
                                                            
சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்புவோர்கள் வீட்டில் மரம் நட விரும்புவார்கள்.ஆனால்,என்ன மரம் நடுவது என்பது குறித்து பல்வேறு யோசனைகள் இருக்கும்...!!!ஏன் நம் வீடுகளில் ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் புங்க மரத்தை நடக்கூடாது......???!!!

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளரும் மர வகைகள் இவை இரண்டுமாகும்... 

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.      

                   

ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.

 ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்


ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
                                                           


புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்...
அருகில் உள்ள நர்சரிகளில் இம்மரக்கன்றுகள் கண்டிப்பாக கிடைக்கும்...
விலை 40 ரூபாய்க்கு குறைவாகத்தான் கிடைக்கும்
வீட்டிற்கு ஒரு மூங்கில் மற்றும் புங்க மரம் வளர்ப்போம்!!!
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!!

7 comments:

  1. very good information. if you have time please visit my blogs

    Regards,
    Abu Nadeem,
    http://ungalblog.blogspot.com
    http://niduronline.blogspot.com
    http://tamil-webs.blogspot.com

    ReplyDelete
  2. அறியாத விபரங்கள். பகிர்வுக்கு மிப்ப நன்றி ஆஷா பர்வீன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துகளுக்கு மிக்க நன்றி

      Delete
  3. மிக பயன்மிக்க பதிவு. நம் தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக மரங்கள் வளர்க்க மக்கள் நினைக்க வேண்டும். தட்பவெட்பம் சீராக இருக்கவும், காற்றில் ஈரப்பதம் பெருகி மழை பெய்ய ஏதுவாகவும், மாசு குறைந்து காற்று சுத்தமாகவும் மரம் செடி கொடிகள் பல வளர்க்க வேண்டும். குறைந்த நீரில் வெயில் காலத்திலும் செழித்து வளரும் பல மரங்கள் உள்ளன. புங்கை, மூங்கில் போல வேம்பு, முருங்கை என பல வகைகள் உண்டு. சென்னை கிறித்தவ கல்லூரி மற்றும் கவர்னர் மாளிகையில் பல வகை மரங்கள் உள்ளன. அனைத்தும் வெட்பத்துக்கு ஏற்ப வளரக்கூடிய வகையிலான மரங்களே.

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள தகவல். நான் என் வீட்டு வாசலில் ஒரு புங்க மரம் வைக்கப் போறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி....பாராட்டுக்கள் :)

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது