Wednesday, May 8, 2013

தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் அது தோல்வியாகிவிடுமா???

பள்ளிகளில் +2  தேர்வு முடிவு வந்துள்ள சூழ்நிலையில் மாநில அளவில் மதிப்பெண் பெறும் மாணவர்களை இன்னும் சில நாட்களுக்கு
அனைத்து ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்....

ஆனால்.......அதற்கு மறுநாளில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் என நாளிதழில் வரும்போது மிக மிக
வேதனையாக இருக்கும்........



தொலை தொடர்பு மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் 10,+2 மாணவர்களுக்கு
வாழ்ந்து காட்டுவோம்,ஜெயித்துக்காட்டுவோம் என பயிற்சி அரங்குகள் அடிக்கடி நடத்தும்போது குறைவான மதிப்பெண் எடுக்கும் நிலையில் உள்ள  மாணவர்களுக்கும்  ஊக்கப்படுத்தும் விதமாக பேசலாம்...

கணிதப்பாடத்தில் தோல்வி.....
10 ம் வகுப்பு மாணவி தற்கொலை....

தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 10 ம் வகுப்பு மாணவர்
தற்கொலை முயற்சி...

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி....
மாணவி வீட்டை விட்டு ஓட்டம்.....

+2 தேர்வில் தோல்வி......
விரக்தியில் மாணவன் தற்கொலை....

பி.எட் படித்த மாணவர் தேர்வில் தோல்வியால் தற்கொலை....

10 ம் வகுப்பு  மாணவர் தேர்வில் தோல்வி.......
விஷமருந்தி மாணவன் தற்கொலை........

தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு
முயன்ற 3 மருத்துவ மாணவர்கள் .......

10ம் வகுப்பு தோல்வி சென்னை மாணவிகள் 2 பேர் தற்கொலை....

தற்கொலை செய்வதில் 10 வகுப்பு மாணவரில் இருந்து மருத்துவம்,பி.எட் படிக்கும் மாணவர்கள் வரை விதி விலக்கே இல்லை........

படிப்பு மட்டுமே உலகம் என நினைத்து கொண்டு படிக்கும்
மாணவர்களை அதிக அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்  ..........
மாணவர்களை மார்க் எடுக்கும் மிஷின்களாக தயவு செய்து கருதாதீர்கள்.......

அதில் மதிப்பெண்கள் மட்டுமே வெற்றி....!!!குறைவாக எடுக்கும் நிலையை அடைந்தால அதை தயவு செய்து தோல்வி என கூறாதீர்கள்.......

பள்ளிகளும்,கல்லூரிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அறிவாளி.அதிக மதிப்பெண்கள் மட்டுமே  வாழ்வில் முன்னேற முடியும் என மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மனப்பாடம் செய்யும் மாணவ சமுதாயத்தையே உருவாக்குகின்றனர்.....

இது மட்டுமல்லாமல்,தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுபவர்
மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் அடைவார் எனவும்......

மதிப்பெண் குறைவாக எடுத்தவரை அறிவுக்குறைவற்றவர்களாகவும்,
வாழத்தகுதியற்றவர்களாகவும் ஒரு போலியான மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சமூகத்தில் மாணவர்களிடம் அவர்கள் பெற்றோரும்,ஆசிரியர்களும் மதிப்பெண்ணை மட்டும் எதிர்பார்த்து அவர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் போவதாலே இத்தகைய செயல்கள் நடைபெறுகிறது........

குறிப்பாக ஆசிரியர்கள் நன்றாக மனனம் செய்யும் மாணவர்களிடம் மட்டும் அக்கறையாக பேசுவதும்,மனன குறைபாடு உள்ளவர்களிடம் நீ எதற்கும் லாயக்கற்றவன் என்ற ரீதியில்  பேசுவது மிக தவறு என உணர வேண்டும்.....

இன்னும் பெற்றோர்கள் கல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே....அதுவே வாழ்க்கை அல்ல என புரிந்து கொள்ள வேண்டும்....


உங்கள் பிள்ளைகள் தேர்வில் குறைவான மதிப்பெண்களோடு தேர்வு பெற்றிருந்தாலும் அதை மற்றவர்கள் முன் மட்டம் தட்டி பேசாதீர்.......

தனிமையிலும் தயவு செய்து எரிந்து விழாதீர்கள்.....

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள் மறு தேர்வின் மூலம் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என உற்சாகமூட்டி சுற்று வட்டாரத்தில் தேர்வில் தோல்வியடைந்த எத்தனை பேர் வாழ்வில் வெற்றிக்கனி பறித்தார்கள் என உதாரணம் கூறலாம்........

எழுத்தாளர் சுஜாதா.....ஒரு கட்டுரையில் கூறியிருந்தார்........

பல வருடங்களுக்கு பிறகு தன்னுடன் படித்த மாணவர்களை பார்க்கும்போது..............

கிளாஸ் ஃபர்ஸ்டாக வந்த மாணவர்  உள்ளூரில் கவர்மெண்ட் ஆஃபிஸில் குமாஸ்தாவாக வேலை பார்த்தாராம்

சுஜாதா சுமாராக படிக்கும் மாணவராம்.....அவர் பெல்லில் மிக உயரிய பணியில் இருந்தாராம்.....

ஆனால்,அடிக்கடி தோல்வி அடைந்து மிக மோசமாக படிக்கும் மாணவன் ஒருவன் ஐ.நா சபையில் வேலை பார்க்கிறாராம்....

இன்னும் ஏன்....உலக பணக்காரர் பில்கேட்ஸ்
கல்லூரிக்கல்வியை நிறைவு செய்யவில்லை ...........
ஆனால்,அவர் வாழ்வில் அடைந்த இலக்கோ மிக பெரியது.........

சோர்வடையாமல் மீண்டும் முயற்சியுங்கள்....
சோர்வடையாதவன் கண்டிப்பாக வெற்றியடைவான்.... 

6 comments:

  1. பெற்றோர்கள் உணர வேண்டிய பல கருத்துக்கள்... சொல்லப்பட்ட உதாரணங்கள் அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :)

      Delete
  2. இன்னும் பெற்றோர்கள் கல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே....அதுவே வாழ்க்கை அல்ல என புரிந்து கொள்ள வேண்டும்...// மாஷாஅல்லாஹ் /உண்மை .சூப்பர் வரிகள் இது ..(y)

    ReplyDelete
  3. உங்கள் பிள்ளைகள் தேர்வில் குறைவான மதிப்பெண்களோடு தேர்வு பெற்றிருந்தாலும் அதை மற்றவர்கள் முன் மட்டம் தட்டி பேசாதீர்....//உதாரணங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ.ஜப்பார்

      Delete
  4. காலத்துக்கு ஏற்ற பதிவு சகோ

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது