Wednesday, May 29, 2013

கின்னஸ் வேதனை

கின்னஸ் சாதனை என்ற பெயரில் உடலை  வருத்திக்  கொள்ளும் ,
உயிரை  போக்கும் மனிதர்கள் தான் இவர்கள் ..............

இறைவன் கொடுத்த உயிர் எவ்வளவு உன்னதமானது ............உயர்வானது........
அவன் நமக்கு கொடுத்த இந்த உடலோ மிக அழகானது ........அற்புதமானது........
இறைவன் நமக்கு கொடுத்த அறிவோ அபாரமானது....
ஆனால்,பேருக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு  அறிவை அடகு வைக்கும் 
இத்தகைய செயலால் என்ன லாபம் ??

கின்னஸ்  சான்றிதழ்  உயிரோடு இருக்கும்வரை பத்திரமாக பாதுகாத்து வைப்பர் .....இறப்பிற்கு பின் அதனால்  என்ன பிரயோஜனம் ............

உயிரை வருத்தி சாதனை செய்கிறேன் என்ற பெயரில் 
மிக நீளமாக நகம் வளர்ப்பது .........
உடம்பில் ஊசியால் துளையிடுவது ..........
வாய்க்குள் நூற்றுக்கணக்கான ஸ்ட்ராக்களை திணிப்பது ...
முடியால் லாரியை இழுப்பது .........
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .......... 
அப்படிப்பட்ட ஒரு அறிவு வாளிதான் இவர் .........

உலக கின்னஸ் சாதனைக்காக தலைமுடியில் தொங்கியபடி ஆற்றின் குறுக்கே கயிறு மூலமாக கடக்க முயன்றவர் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைலேந்திர ராய்(45) என்பவர் வித்தியாசமாக எதையாவது செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். சிறந்த சுற்றுலா தலமான டார்ஜிலிங்கில் உள்ள மலைப்பாதை ரயிலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமுடியால் இழுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
மேலும் நேற்று சிலிகுரி அருகே தீஸ்தா ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதில் தலைமுடியில் தொங்கியபடி ஆற்றை கடக்க முயன்றார். இவரது சாதனை முயற்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் கயிறு கட்டப்பட்டது.
கயிற்றின் மீது கிணறுகளில் நீர் எடுக்க பயன்படும் சகடை சக்கரத்தை கட்டி அதில் தனது முடியை கட்டிக் கொண்டார். சக்கரத்தை தனது உடல் அசைவால் நகர்த்தி ஆற்றை கடக்க முயன்றார். பாதி தூரம் சென்றதும் ராட்டினம் கயிற்றில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் அது நகரவில்லை.
ராய் எவ்வளவு முயற்சித்தும் சிக்கலில் இருந்து விடுபடவில்லை. கரையில் இருந்த மக்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. யாராலும் உதவ முடியவில்லை.
சிறிது நேரம் சென்றதும் ராயின் கை கால் அசைவுகள் திடீரென நின்றது. விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த மக்கள் கயிறை பிடித்து கரைக்கு இழுத்தனர். ராய் மூர்ச்சையற்று கிடந்தார். அவரை சோதித்த டொக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வேடிக்கை பார்க்க வந்த மக்கள், ரசிகர்கள், கின்னஸ் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் சாதனையாளர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                        

ஒரு மரம் வைத்தாலாவது  வாழும் போதும்,
மரணத்திற்கு பின்னும் மக்கள் பயனடைவர்....


ஆனால்,நீண்ட நகம் 
வளர்ப்பதால் குடும்பத்திற்கு சிரமம் ......
முகத்தையோ,உடம்பையோ வருத்தி செய்யும் இவை சாதனை அல்ல.
அதை வைத்து ஒரு பயனும் இல்லை .........


சாதனை என்பது தம் சுற்றத்தார் பயனடையும் படி வாழ்ந்து தம் சமூகத்தை முன்னேற்றும் செயலே ஆகும் ........... 

2 comments:

  1. //சாதனை என்பது தம் சுற்றத்தார் பயனடையும் படி வாழ்ந்து தம் சமூகத்தை முன்னேற்றும் செயலே ஆகும் //....
    உன்னதமான உண்மையான வரிகள்.வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  2. அதிக (பேராசை)ஆசை - அதிக ஆபத்து...

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது