Sunday, October 27, 2013

தண்ணீர் சிக்கனம்

சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் அத்தியாவசியச்சொத்து தண்ணீரும்,காற்றுமே...

சாப்பாடு இல்லாமல் 3 நாட்கள் வரை வாழும் மனிதன் காற்று இல்லாமல் 5 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.
சுத்தமான காற்றும்,தண்ணீரும் வேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏரி அல்லது குளம் அல்லது அட்லீஸ்ட் சுயநலத்திற்காகவாவது நம் வீட்டிற்கு மட்டும் சேமிப்போம்.

நமக்கு பிறகு நம் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அமைத்து,தண்ணீரை சிக்கனமாக சேமிக்க பழகிக்கொள்வோம்...

மணிக்கணக்கில் பாத்ரூமிலும்,டாய்லட்டிலும் நேரத்தையும்,தண்ணீரையும் வீணடிக்காமல் சேமிப்போம்

http://www.youtube.com/watch?v=IZNTnxhoU1k
http://www.youtube.com/watch?v=9Odg7Twlq1I
http://www.youtube.com/watch?v=u0ghut49oog

இது பருவ மழை நேரம்...இந்நேரத்தில் புத்திசாலித்தனமாய் ஒரு மரமாவது நட்டு மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் அறிவாளியாக இருக்க முயற்சி செய்வோம்.





இல்லையென்றால் இதே நிலைதான் நமக்கும்

Friday, October 25, 2013

சீட்லெஸ் பழங்கள் ???

                                                ஹை பிரிட் சப்போட்டோ


                                                   சீட்லெஸ் திராட்சை


                                 
   
                                                   சீட்லெஸ் நாவல்பழம்


                                                   
                                               
                                                    சீட்லெஸ் மாதுளை
                                                   
                                               
                                                     

                                                     சீட்லெஸ் பப்பாளி

                                                       

மிகக்குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் காண துடிக்கும் பேராசை விவசாயிகளின்  ஊனமுற்ற குறைமாத குழந்தைகள்
போன்றவை தான் இவை ...

ஹைபிரிட் தக்காளீ,ஹைபிரிட் வெங்காயம்,ஹைபிரிட் எலுமிச்சை என எங்கெங்கு காணினும் ஹைபிரிட்டும்,சீட்லெஸ்ஸும் தான் ...

                                                     
விதையில்லா பழங்கள் விளைவிக்கும் முயற்சி பசுமைப்புரட்சிக்கு
பிறகு ஏற்பட்டது...மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

நாவல்பழம்,இலந்தைப்பழம்,ஈச்சம்பழம் எல்லாம் விரும்பி சாப்பிட்ட மக்கள் ஆப்பிள்,ஆரஞ்சு  மட்டுமே உயர்ந்த பழ வகைகள் என தற்போது கருதுகிறார்கள்.

முன்னாடி ஸ்கூல் அருகில் இம்மாதிரியான பழங்கள் விற்கும்.....
இப்ப ஸ்கூல் அருகில் உள்ள கடைகளில் சரம் சரமாக கண்ட கழிய எண்ணெய்களில் இருந்து பொறிக்கப்பட்ட சிப்ஸுகள் தான் கலர் கலரான பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது...

விதைகளையும்,கொட்டைகளையும் நாம் சிறு வயதில் அறியாமல் பழங்களோடு விழுங்கும்போதும்,பறவைகளின் கழிவுகளின் மூலமும் விதை பரவலாக்கம் நடைபெற்றது.

ஆனால்,விதையே இல்லாத பழங்களின் மூலம் விதை பரவலாக்கலை தடுக்கும் திட்டம் திட்டமிட்டு பரப்பபட்டது...இயற்கை மற்றும் நாட்டு வைத்தியம் எல்லாம் மூடத்தனம் என்ற பெயரில் இயற்கையாக நம் ஊரிலேயே கிடைக்கும் பழங்களை,தானியங்களை சாப்பிடுவது பத்தாம்பசலித்தனமாக காட்டப்பட்டு...நமக்கும் சற்றுப்பொருந்தி வராத குளிர்பிரதேச பழங்கள்,தானியங்கள் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என ஆங்கில மருத்துவர்களால் பாடம் கற்பிக்கப்பட்டது.

சீட்லெஸ் பழங்களை உண்ணும் நாம் எதை வைத்து மரத்தை நடுவோம்???
நம் சந்ததிகளுக்கு வெற்று பூமியை விட்டுச்செல்லப்போகிறோமா..???
புறக்கணிப்போம்....சீட்லெஸ் பழங்களை....!!!
ஆதரிப்போம் இயற்கை விவசாயத்தை...!!!

உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;
குர் ஆன் 2:195

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்;

குர் ஆன் 6:95

Monday, October 14, 2013

தியாகத்திருநாள்......என்ன படிப்பினை பெற்றோம்....???

குர்பானி கொடுத்து இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு 
கூறும் நன்னாள்...

எத்தனையோ தியாகத்திருநாளை நாம் கடந்தாலும்,தினமும் இப்ராஹீம் நபியின் அருளும்,பரக்கத் வேண்டி பிரார்த்தனை செய்தும் இன்னும் நம்மிடம் அற்ப குணங்களான பிடிவாதமும்,முன் கோபமும் நம்மை பிடித்துக்கொண்டு விடாமலே இருக்கிறது.
                                             

இப்ராஹீம் நபியிடமும்,அவருடைய மனைவியிடமும்,அவருடைய பிள்ளையிடமும் எவ்வளவு அழகிய முன்மாதிரி உள்ளது.....

பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் எப்படி ஒரு முன்மாதிரிக்குடும்பத்தை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்......!!! சுபுஹானல்லாஹ்...

நம்மில் எத்தனை பேர் முன்மாதிரி முஸ்லிம் குடும்பமான இப்ராஹீம் அலை அவர்களின் குடும்பத்தைப்பற்றி நம் இல்லங்களில் பேசியிருப்போம்...விவரித்திருப்போம்...

தந்தையின் தியாகம் எப்படிப்பட்டது....

தாயாரின் தியாகம் எப்படிப்பட்டது...

பிள்ளையின் பொறுமையும்,தியாகமும் எப்படிப்பட்டது......

நம் வீடுகளிலே அதிகம் பேசப்பட வேண்டிய அழகிய முன்மாதிரிகள்...

ஒரு இஸ்லாமியக்குடும்பம் செய்த தியாகம் இந்நன்னாளில் நினைவு கூறப்பட்டு நம்மிடையே அத்தியாகச்செயல் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.....

நம்முடைய தவறுகள்,பிழைகள் களையப்பட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்ள உறுதிமொழி எடுக்க வேண்டும்

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.9:114

ஒவ்வொரு இல்லத்தின் அங்கத்தினரும் பொறுமையையும்,இரக்க குணத்தையும் இந்நன்னாளில் அதிகமாக வளர்த்துக்கொள்வோம்...

திடல் தொழுகையில் குடும்பத்தோடு பங்கேற்று பெருநாள் உரையை கேட்டு 
நம்மிடையே இரக்க குணமும்,பொறுமையும் அதிகமாக இறைவனிடம் துஆ செய்வோம்...

பெண்கள் பெருநாள் அன்று காலை சமையலை எளிமையாக செய்துவிட்டு பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள ஆர்வமாக செல்லுங்கள்...வீட்டிலோ,பெண்கள் சேர்ந்து தொழுவதை தவிர்த்துவிட்டு திடலில் தொழுது நபிவழியை உயிர்ப்பிக்கவும்...

தயவு செய்து அடுப்பங்கரையில் குடி இருக்காமல் பெருநாள் உரையை கேட்டு பயனடையவும்....
________________________________________________________________________________
திடல் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்...

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும்

 “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

Saturday, October 12, 2013

சிந்திப்போரின் சிந்தனைக்கு....!!!

நீ மனிதனை இகழ்ந்து வாழாதே...!!!
    இறைவனைப் புகழ்ந்து வாழ்...!!!

நீ வல்லவனாக வாழ்வதை விட...
    நல்லவனாக வாழ்...!!!

நீ குடித்து வாழாதே...!!!
    குடும்பத்தை மகிழ்வித்து வாழ்..!!!

நீ திருடுபவனாக வாழாதே..!!!
    திருத்துபவனாக வாழ்...!!!

நீ பிறர் பொருளை எடுத்து வாழாதே...!!!
    பிறருக்கு பொருளை கொடுத்து வாழ்...!!!

நீ பிறர் உன்னிடம் திருடுவதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரிடம் திருடாதே...!!!

நீ பிறர் உன்னை அடிப்பதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை அடிக்காதே...!!!

நீ பிறரை கொல்லாதே...!!!
    பிறரால் கொல்லப்படுவாய்...!!!

நீ பிறர் உன்னை கொலை செய்வதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை கொலை செய்யாதே...!!!

நீ உன் மனைவி,மகள்,சகோதரி கற்பை இழந்துவிடுவதைவிரும்ப மாட்டாய்..!!!
     பிறர் மனைவி,மகள்,சகோதரியின் கற்பை இழக்கச் செய்து விடாதே...!!!


                                      

இறைவன் கூறுகின்றான்....

நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக்கொலை செய்கிறாரோ,அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் அவர் கொலை செய்தவர் போன்றவராவார்.மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
குர் ஆன் 5;32

எவனொருவன் , ஒரு நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். இறைவன் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும்  தயாரித்திருக்கிறான்.குர் ஆன் 4:93

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.குர் ஆன் 3:185

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா??? குர் ஆன் 47:24

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...


நீங்கள் மண்ணில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள்.
விண்ணில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
நூல்:அபூதாவூத்

தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவர் அவருக்கு வாழ்வு அளித்தவர் போலாவார்.
நூல்:இப்னுமாஜா

ஒருவர் தமக்கு எது கிடைக்க வேண்டும் என விரும்புவாரோ அதையே அவர் மக்களுக்கு விரும்பட்டும்.
நூல்:முஸ்லிம்.

தொகுப்பு:A.அமீர்

Sunday, September 29, 2013

முஸ்லிம் பெண்ணே...!!! ஒரு நிமிடம்...!!!

முஸ்லிம் பெண்ணே...!!! 
உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!!
பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே...!!!

அசிங்கமான,அருவருப்பான பேச்சுகள்,கேலி,கிண்டல்,புறம்,அவதூறு 
ஆகியவற்றில் இருந்து உனது நாவைப்பாதுகாத்துக்கொள்....!!!

குறைவாக பேசு....!!!
வெட்கமும்,குறைவாக பேசுவது ஈமானின் அம்சமாகும்.
கெட்ட வார்த்தையும்,அதிகமாக பேசுவதும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
(ஆதாரம்-திர்மிதி-1950)

அந்நிய ஆண்களிடம் பேசும்போது குழைந்து குழைந்து பேசாதே...!!!
எவனது உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் கெட்ட எண்ணம் கொள்வான்.

கல்வியை தேடுவதில் ஆர்வமாக இரு.
மதரசா,பள்ளிவாசல் போன்ற இடங்களில் 
அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு 
நல்ல விசயங்களின் மூலம் ஈமானைப்பலப்படுத்து...!!!

       

நீ அறியாமைக்காலத்துப் பெண் போல 
தேவையின்றி வெளியில் செல்லாதே...!!

உன் தலைமுந்தானையை தாழ்த்திக்கொள்....
வெளியில் செல்லும்போது அலங்காரத்தை
மறைக்க பர்தா அணிந்து கொள்..!!!
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாக்களை அணியாதே...!!!
வெளியில் செல்லும்போது வாசனைத்திரவியங்களை பூசாதே...!!!

கணவனுக்காக மட்டுமே அலங்கரித்துக்கொள்...!!!
கணவனுக்கு முழுமையான முறையில் கட்டுப்படு...!!!
சிறந்த மனைவி கணவன் தன்னை பார்க்கும்போது மகிழ்வூட்டுவாள்...!!!

கணவனுடைய சொத்துக்களையும் உடைமைகளையும்,
குடும்பத்தாரையும் பேணிப்பாதுகாத்துக்கொள்...!!!

கணவனுடைய விருப்பமில்லாமல் 
எந்த ஆணையும் வீட்டிற்குள் அனுமதிக்காதே...!!!

இரத்தபந்த உறவுகளை இணைத்துக்கொள்.
அவர்கள் வெறுத்த போதிலும் சரியே...!!!

அண்டை வீட்டினரிடம் நல்ல முறையில் நடந்துகொள்.!!!

கணவருடைய தாய்,தந்தையரிடம் மரியாதையாகவும்,
பணிவாகவும் நடந்துகொள்....!!!
                             

உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடு.
அதுவே மிகச்சிறந்த செல்வமாகும்.

உன் குடும்பத்தாரை ஒவ்வொரு நாளும் தொழ ஏவு....!!!
நரக நெருப்பை விட்டு காப்பாற்று....!!!

தினமும் குர் ஆனை தமிழாக்கத்துடன் படி..!!!

உன்னுடைய ஒவ்வொரு மணித்துளிகளை,
நேரங்களை சரியான முறையில் பயன்படுத்து...!!!
வீணும்,வெட்டியுமாக நேரத்தை கழிக்காதே...!!!

நீ படித்த இந்த உபதேசங்களை செயல்படுத்து...!!!
பிறருக்கும் சொல்...!!!

Thursday, September 12, 2013

மகிழ்ச்சியாய் வாழ....

1,இன்றைய நாளுக்காகவே வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீ வாழ்க்கையை மேற்கொள்.
இல்லையெனில்,உனது எண்ணங்கள் சிதறும்;குழப்பம் ஏற்படும்;கவலையும் துக்கமும் அதிகரிக்கும்.
அதாவது,நீ காலைப்பொழுதை அடைந்தால் மாலைப்பொழுதை எதிர்பார்க்காதேமாலைப்பொழுதை அடைந்தால் காலைப்பொழுதை எதிர்பார்க்காதே!
2,நேற்றை முற்றிலும் மறந்துவிடு.முடிந்து போனதைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பது ஒரு வகைப்பைத்தியக்காரத்தனம்
3,வருங்காலத்தைப்பற்றிய கவலையில் மூழ்காதே;வருங்காலம் என்பது மறைவானது.அது வரும் வரைஅதைப்பற்றி சிந்திக்காதே
4,எதிரிகளின்,பொறாமைக்காரர்களின் விமர்சனங்களைக்கண்டு தளர்ந்து விடாதே;தைரியமாக இரு.விமர்சனங்கள் உனது மதிப்பை மேலும் உயர்த்தும்.
5,இறைநம்பிக்கையும்,நற்செயலும் உனது வாழ்வில் உண்மையான,சிறந்த மகிழ்ச்சியை உருவாக்கும்.
6,நிம்மதி,மன அமைதி,ஆறுதல் இவை உன் வாழ்க்கையில் மலர வேண்டுமென்றால் இறைவனைத்துதி.
7,அனைத்தும் இறைவனது முடிவின்படியே நடக்கின்றது என்பதை அடியார்கள் உணர வேண்டும்.
8,எவரிடமும் நன்றியை எதிர்பார்க்காதே.
9,கடுமையான இன்னல்களைத்தாங்கிக்கொள்ள உன்னை நீ தயார்படுத்து
10,நடந்தவையெல்லாம் உனது நன்மைக்கே என நம்பு
11,நன்மையானதையே இறைவன் இறைநம்பிக்கையாளர்கள் மீது விதிக்கிறான்.
12,இறைவனது அருட்கொடைகளைச் சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்து.
13,பலரை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய் என்பதைப்புரிந்து கொள்.
14,விரைவில் விடியல் வரும்
15,சோதனைகள் வரும்போது இறைவனைத்தொடர்புகொள்.
16,சோதனைகள் உன்னைச் செதுக்கும்.உன் இதயத்தை வலுப்படுத்தும்
17,துன்பத்திற்குப்பின் இன்பம் உண்டு.
18,அற்பக்காரியங்கள் உன்னை அழித்து விட வேண்டாம்
19,உன் இறைவன் மிகவும் மன்னிப்பவன்
20,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே!!!
21,ரொட்டி,தண்ணீர்,நிழல் இவை மூன்றும்தான் வாழ்க்கை.இவற்றை விட அதிகமானப்பொருட்களைத்தேடுவதில் உனது வாழ்க்கையைத் தொலைத்து விடாதே
22,உங்களது வாழ்வாதாரம் வானத்தில் உள்ளது,உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதும் வானத்தில்தான் உள்ளது. அல் குர் ஆன்51:22
23,நடந்துவிடுமோ என நீ அஞ்சக்கூடியவற்றில் பெரும்பாலானவை நடைபெறாது.
24,சோதனைக்கு ஆளானவர்களிடம் உனக்கு முன்மாதிரி உள்ளது.
25,இறைவன் ஒரு சமுதாயத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான்.
26,துயரங்கள் ஏற்படும்போது பெருமானார் கற்றுத்தந்தப் பிரார்த்தனைகளை ஓது.
27,நல்ல பயன்மிக்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இரு.சும்மா இருக்காதே.
28,வதந்திகளை விட்டுவிடு.அவற்றை நம்பாதே.
29,உனது பகை உணர்வும்,பழி வாங்கும் எண்ணமும் உனது எதிரியை விட உன் நலனைத்தான் அதிகம் பாதிக்கும்.
30,துன்பங்கள் உனது பாவங்களைப்போக்கும்.
இந்த அடிப்படைக்கூறுகளை உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீ கடைப்பிடித்தால்....
மகிழ்ச்சியுடன் வாழ்வாய்
மனநிம்மதியுடன் வாழ்வாய்
நற்செய்தியுடன் வாழ்வாய்
நம்பிக்கையுடன் வாழ்வாய்.
-டாக்டர்.ஆயில் அலகர்னீ

Sunday, August 25, 2013

செயல் வீரர்கள்!

ஏற்றுக்கொண்ட பதவியில் எதிர்வருகிற எத்தனையோ சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு, போற்றப்படும் விதத்தில் செயல்பட்டு வருவது சாதாரண விஷயமல்ல. ஆனால் அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார், மதுரை மாவட்டம் திரளி ஊராட்சி மன்றத் தலைவி சந்திரா.
                   
அப்படி என்ன செய்துவிட்டார் சந்திரா?
கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையும் சாராமல், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரிகளை 100 சதவிகிதம் அரசுக்குச் செலுத்தும் முன்மாதிரி கிராமமாக மாற்றினார்.
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருந்த 50 ஏக்கர் அரசு நிலத்தை துணிச்சலாக மீட்டு, மக்களுக்கும் பஞ்சாயத்துக்கும் வருவாய் வரும்படியாக செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அரசின், ‘பெண்கள் சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, மதுரை மாவட்டத்திலேயே சிறந்த சுகாதாரக் கிராமம் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

இவை மட்டுமல்ல, சந்திராவின் சாதனைப் பட்டியல் இன்னமும் நீள்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ளது திரளி ஊராட்சி. அங்கு நேரில் சென்றபோது,

‘இந்த அலுவலகம் மக்களுக்காக 24 மணிநேரமும் செயல்படும்’ என்று பஞ்சாயத்து சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியப்பட்ட நம்மை புன்னகையோடு வரவேற்ற சந்திரா, தனது வெற்றிப்பயணத்தை விவரிக்கிறார்:

அச்சம்பட்டி, பச்சக்கோப்பன்பட்டி, காட்ராம்பட்டி, சுந்தரராஜபுரம் புதூர், திரளி இந்த 5 கிராமங்களையும் உள்ளடக்கிய, எங்க திரளி பஞ்சயாத்துல 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்க குடியிருக்கோம். நான் 10 -ஆவது வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க வீட்டுக்காரர் பிச்சை, முன்னாள் ராணுவ வீரர். அவரு நாட்டுக்காக உழைச்சவர்ங்கறதால சமூகப் பிரச்சினைகள் மீதான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் எனக்குள் உண்டாக்கியது. படிக்காத முதியோர்களுக்கும் படிக்கற பிள்ளைகளுக்கும் இலவசமா தினமும் நைட்ல டியூஷன் சொல்லித் தந்தேன். இதுமட்டுமில்லாம உதவித்தொகை, ஜாதிச் சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ் வாங்கித் தர்றதுன்னு யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம எழுதித் தந்து அரசு அலுவலகங்கள் வரைக்கும் கூடவே போய் வாங்கித் தருவேன்.

இப்படி நான் உதவி செஞ்சதைப் பார்த்த கிராமவாசிங்க என்னை வந்து சந்திச்சு, ‘அடிப்படை வசதி கூட இல்லாம ஊர் சீரழிஞ்சு கிடக்குது. இதுக்கு முன்னாடியிருந்த ஊராட்சி மன்றத் தலைவருங்க எங்களுக்குன்னு எந்த நல்லதும் செய்யல. நீங்க தலைவரா வந்தா, இந்தப் பஞ்சாயத்துக்கே விடிவு காலம் பிறக்கும். வர்ற 2011-ஆம் ஆண்டு ஊராட்சிமன்றத் தேர்தல்ல போட்டியிடுங்க, நாங்க உறுதுணையா இருக்கோம்’னு என் கையப் பிடிச்சு கேட்டாங்க. அவங்க அன்புக்கு முன்னாடி என்னால மறுப்பு சொல்ல முடியாததால ஒத்துக்கிட்டேன். 1949-ஆம் ஆண்டுல இருந்து எங்க ஊர்ல பஞ்சாயத்துத் தேர்தல் நடந்திட்டிருக்கு. இதுவரைக்கும் ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தவங்கல்லாம் கட்சி சார்ந்தே போட்டியிட்டிருக்காங்க. கட்சி சார்பாக போட்டியிட எனக்கு விருப்பமில்லை. சுயேச்சையா நின்னு வெற்றி பெறணும்னு முடிவெடுத்து, நம்பிக்கையோட வேட்புமனு தாக்கல் செஞ்சேன். கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றேன். ஜெயிச்சதுக்கப்புறம் பல கட்சிக்காரங்க என்னை, அவங்க கட்சியில சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவரா செயல்படச் சொன்னாங்க. எதையும் காதுல வாங்காம இருந்தேன்.

ஊராட்சிமன்றத் தலைவரானதும் நான் செஞ்ச முதல் வேலை இத்தனை வருஷமா மூடியே கிடந்த, எங்க பஞ்சாயத்து அலுவலகத்தைத் திறந்து, ‘இந்த அலுவலகம் உங்களுக்காக 24 மணிநேரமும் செயல்படும்’னு சுவர் முழுக்க எழுதி, என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கும், பல நலத் திட்டங்கள் வழங்கிவரும் அரசிற்கும் உண்மையா உழைக்கணும்னு உறுதியோட செயல்பட ஆரம்பிச்சேன். எங்க ஊரு கிராமப் பகுதிங்கறதால சரியான வேலைவாய்ப்பு கிடையாது. மக்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரணும்னு தீவிரமா யோசிச்சேன். அந்தச் சமயத்துலதான் ஊர்க்காரங்க சிலர், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சிருக்கறதா தகவல் வந்தது. பஞ்சாயத்தோட மேப் எடுத்துப் பார்த்தப்போ, 50 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிச்சிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனோம்.

புறம்போக்கு நிலத்துல வீடு கட்டி, விவசாயமும் செய்ததோட, ஒருத்தரு ஒரு ஏரியையே விவசாய நிலமா மாத்தி வச்சிருந்தாரு. இவர்களிடமிருந்து அரசு நிலத்தைக் கைப்பற்றி, கிராமத்துக்கு உபயோகமா பயன்படுத்த தீர்மானம் போட்டோம். நிலத்தை மீட்க, திருமங்கலம் பிடிஓ அலுவலகத்திடமும் அனுமதி வாங்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு மாசத்துக்குள்ள நிலத்தை ஒப்படைக்க டைம் கொடுத்தேன். இந்த நடவடிக்கையால மதுரையில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்துச்சு. எதுக்கும் பின் வாங்காம உறுதியா இருந்தேன்.

சொன்னபடியே குறிப்பிட்ட தேதியில அரசு அதிகாரிகள் மற்றும் 20 போலீஸ்காரர்கள் துணையுடன் புறம்போக்கில் கட்டியிருந்த வீடுகளை பொக்லைன் மூலம் அகற்றி, விவசாயம் செய்திருந்த 50 ஏக்கர் நிலத்தை மீட்டு, பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவந்தேன். அதில் 4 ஏக்கர்ல மழை நீரை சேமிக்க குளமும், 2 ஏக்கர்ல ஊராட்சிக்கு வருவாய் வர பண்ணைக்குட்டையும் மீன்குட்டையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன்.அதுமட்டுமில்லாம, எங்க பஞ்சாயத்தைச் சேர்ந்த காட்ராம்பட்டி கிராமத்துக்குப் போக 7 கிலோமீட்டர் சுத்தித்தான் போகணும். இவ்ளோ தொலைவைக் குறைக்க, நான் மீட்ட நிலத்துலயிருந்து ஒண்ணரை கிலோமீட்டருக்கு புதுசா சாலை அமைச்சுக் கொடுத்திருக்கேன்.

கிராம சபை மூலமா பிரச்சினைகளை நேரடியா விவாதிக்கறதோட, வருஷந்தோறும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையா கட்டணும்னு மக்களுக்கு விழிப்புணர்வையும் உண்டாக்கினேன். அதோட பலன்தான் கடந்த ரெண்டு வருஷமா மதுரை மாவட்டத்துல எங்க ஊரு 100 சதவிகித வரி செலுத்தும் கிராமம் என்று அதிகாரிகளோட பாராட்டுக்களைப் பெற்றிருக்கு. நான் செயல்படுத்திய பல திட்டங்கள் மூலமா பஞ்சாயத்துக்கு வருஷத்துக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் வருது. அந்தப் பணத்தைக்கொண்டு ஊரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேத்திக்கிட்டிருக்கேன்" என்று விரிவாகப் பேசி முடித்தார் சந்திரா.

பெண்கள் கழிவறைக்கான அரசின், ‘பெண்கள் சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டம் திரளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதற்காக அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், மாவட்டத்திலேயே சிறந்த சுகாதார வளாகம் திரளி என்று பாராட்டியிருக்கிறார். மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடமிருந்து 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் விருதையும் பெற்றிருக்கிறார் சந்திரா.

மக்களின் பார்வையில்...

ராமுத்தாய்:

இதுவரைக்கும் கிராம சபை கூட்டம்னா எங்களுக்கு என்னன்னே தெரியாது. சந்திராம்மா மாசம் தவறாம கிராம சபையில எல்லாரையும் ஒண்ணாக் கூட்டி, பஞ்சாயத்தின் ஒவ்வொரு திட்டத்தோட வரவுச் செலவுக் கணக்கை எங்ககிட்ட நேரடியா சொல்றது மட்டுமில்லாம, பஞ்சாயத்துக்கு எவ்ளோ நிதி வந்திருக்குன்னு எல்லோருக்கும் நோட்டீஸ் அடிச்சு, கைல கொடுத்துடுவாங்க. மேலும் ஊருக்கு என்னென்ன தேவைகள் இருக்குன்னு கருத்துக் கேட்டு குறைகளை உடனுக்குடனேயே நிவர்த்தியும் பண்ணிக் கொடுக்கறாங்க."
ஜெயந்தி:

திரளி கிராமப்புறம்ங்கறதால எல்லா வீடுகள்லயும் டாய்லெட் கிடையாது. கழிவறை இல்லாததால பெண்களும், இளவயசுப் பிள்ளைகளும் சொல்ல முடியாத பல கஷ்டங்களுக்கு ஆளாகி வந்தோம். சந்திராம்மா, நாங்க படுற கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிட்டு 8 லட்சம் ரூபாய் செலவுல பெண்கள் சுகாதாரத் திட்டக் கழிவறையும், குளியலறையும் கட்டி விட்டிருக்காங்க. மேலும் 3 மாசத்துக்கு ஒருமுறை உடல் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்துறாங்க."

பூ. சர்பனா