Sunday, November 24, 2013

பல்லில் இரத்தக்கசிவா....???

அந்தக்காலத்தில் 30,40 வயதைத் தாண்டியவர்கள் தான் ஊருக்கு ஒன்று இருக்கும் பல் கிளினிக்கிற்கு பல் சொத்தை என சொல்வார்கள்...
ஆனால்,இப்பொழுது ஐந்து வயது பிள்ளைகளுக்கு ஆறு பல் சொத்தை  என வொயிட் சிமெண்டால் அடைக்கிறார்கள்

பல் சொத்தை,பல் வலி,பல் கூச்சம்,பல்லில் இரத்தம் வடிதல் போன்றவை நூற்றுக்கு 80% பேருக்கு இருக்கும் பிரச்சினைகள் ஆகும்.

வீதிக்கு வீதி முளைத்துவிட்ட டெண்டல் கிளினிக்கில் கூட்டம் தான் அலைமோதுகிறது...

திடீர் திடீர் என புது புது பிராண்டுகளில் பற்பசைகள் அறிமுகமாகியும் பற்சொத்தைக்கும்,பல்லில் இரத்தல் வடிதலுக்கும் சரியான தீர்வு கிடைத்த பாடில்லை...

விதவித மான டிசைன்களில் வரும் பிரஷ்களும் எந்நோயையும் தீர்த்தபாடில்லை.

மக்களின் நாக்கு ருசியை அறிந்து கொண்ட வியாபாரிகள் இனிப்பு வகைகளில் பலவித கெமிக்கலை கொட்டி அதற்கு அடிமையாக்கிவிட்டனர்...
                                                   
வீதியெங்கும் ஐஸ்கிரீம் கடைகள்,எல்லாக்கடைகளிலும் உயர் ரக சாக்லேட்டுகள்,கண்ணைப்பறிக்கும் நாவில் நீர் ஊற வைக்கும் ஸ்வீட்,கேக் வகைகள்,கிரீம் பிஸ்கட்டுகள் என என கண்ணில் படும் இடமெல்லாம் ஆக்கிரமித்துள்ளது...

பிள்ளைகள் அடம்பிடிக்கும் என வாங்க்கிக்கொடுக்கும் நாம் நம் வாயில் ரெண்டை எடுத்துப்போட்டுக்கொள்வோம்...

சரியான மருத்துவம் என்பது வரும் முன் காப்பது ஆகும்...அதாவது எந்த ஒரு பொருளை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஆனால்,நம்மில் அதிகமானோர் அவ்வாறு செய்யாமல் பொடுபோக்காக இருந்துவிட்டு பின்னர் ஆங்கில மருத்துவமனையில் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு பல் பிடுங்க வரிசையில் காத்திருப்போம்....

வாயில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்கி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது..

இதற்கு அழகிய வழிகாட்டுகிறார்கள் அண்ணலார் நபிகள் நாயகம் ஸல்


இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, 'இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது' என்று கூறினார்கள்.
புகாரி 5609

சுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக்காகப்) புறப்பட்டேன். அவர்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் - இதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதே - இருந்தபோது அஸர் தொழுகையைத் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு மாவு மட்டுமே) கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பிறகு (அனைவரும் சேர்ந்து) தொழுதோம். 
புகாரி.2981

இன்னும் பல்லில் இரத்தம் வடிதலுக்கு இயற்கையான மருத்துவமுறை ஒன்று உள்ளது...அதனால் இயற்கை முறையிலேயே எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் பல் சுத்தம் செய்யப்படும்...

அதுதான் ஆயில் புல்லிங்...

வெறும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மூலம் வாய் கொப்பளிப்பதினால் வாய் சுத்தம்,பல்லில் இரத்தம் வடிதல்,ஜலதோசம்,மலச்சிக்கல்,தூக்கமின்மை போன்ற வியாதிகள் குணமடைகிறது என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது....

விருதுநகர்: ஆயில் புல்லிங் என்ற முறையின் மூலம் பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவத்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ஷரத் அசோகனுக்கு 'குழந்தைகள் பல்மருத்துவ ஆராய்ச்சி விருது' மற்றும் 'ஆரோக்கிய மேன்மை விருது'கள் வழங்கப்பட்டன.
இந்த லிங்க்கில் படிக்கலாம்
http://tamil.oneindia.in/news/2012/06/06/business-dr-sharat-asokan-honoured-155168.html
கெமிக்கல் கொட்டப்பட்ட பற்பசையை விட பழமையான முறையில் தயாரிக்கப்படும் பல்பொடிகளும்,பற்பசைகளும் மிகச்சிறந்தது.

பற்பொடி..

அந்த காலத்தில் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி, உப்பு, சாம்பல் போன்ற பக்க விளைவு இல்லாத இயற்கையான பொருட்களை உபோயோகித்து பல் தேய்த்து வந்தார்கள்.... இதனால் பல் சொத்தை, வலி, சிறிய வயதிலே பற்களை இழத்தல், வாய்துர்நாற்றம், போன்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இயற்கையான பற்களுடன்....

ஆனால் இப்போது நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்களில் நிகோடின் அதிக அளவில் உள்ளது என்று வெளிட்டு நம்மை பீதியடைய வைத்தார்கள்....

இதிலிருந்து விடுபட ரொம்பவும் எளிமையான வழி ஒன்று உள்ளது ...முயற்சி செய்து பாருங்கள்...
வேப்பிலை – நாலு பிடி
கல் உப்பு - ஒரு பிடி

இரண்டையும் மண்சட்டியில் இட்டு வறுத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால்..... வேப்பிலையும், கல் உப்பும் பல்லுக்கு வரும் பல நோய்களைத் தடுக்கும்....இருக்கும் வியாதிகளையும் போக்கும் .....

Wednesday, November 13, 2013

கருப்பு தக்காளி,கலர் கேரட்???

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கனகாம்பரம்,ஒரு கிலோ எடை உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொய்யா,இயல்பான தோற்றத்தைக்காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்க்கும் சவுக்கு மரங்களை தமிழக விவசாயி கண்டுபிடித்துள்ளார் என தூக்கி வைத்துக்கொண்டாடும் ஊடகங்களுக்கு அறிவே இல்லையா....???

இயற்கைக்கு மாற்றாக மலட்டு பிராய்லர் கோழிகள்,மலட்டு பிராய்லர் முட்டைகள் தீமையானவை என கூவுகிறார்கள்...பிடி கத்தரிக்காயை வசைமாறி பொழிகிறார்கள்...ஆனால்,தமிழக விவசாயிக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததை பெருமையாக குறிப்பிடுகிறார்கள்...!!!

மரபணு மாற்றுவதை விட்டு விட்டு மரபுவழி வாழ்க்கையை வாழ்வோம்.
பேராசையின் தொடக்கமே அடுத்தவனை அழித்து தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பதேயாகும்.

இதோ அடுத்து வரவுள்ள  கருப்பு தக்காளி,கலர்புல் கேரட்...

                             
                                                               

Saturday, November 9, 2013

எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 2

யார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ,அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்.இது இன்று எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.என்றாலும் இது வணிகத்துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என விடாமுயற்சியோடு போராடுபவர்கள் வெற்றிக்கனியை பறிப்பது மிக எளிது...

அப்படி இளம்வயதில் ஏற்றுமதி உலகில் நுழைந்த கவுதம் தன் வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார்

சந்தித்தோம்...சாதித்தோம்....

என் பெயர் கவுதம்.வயது23.கல்லூரியில் படித்து முடித்தபின் சொந்த ஊரான திருச்சியில் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்ற என்கிற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.

பாலைவனத்தில் தண்ணீர் தேடுபவனுக்கு சுனை நீர் கிடைத்தது போல புதிய தலைமுறை பத்திரிக்கையை கடையில் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வாங்கிப்படித்தேன்.

வாரா வாரம் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையில் எவரும் செய்யலாம் ஏற்றுமதி என்கிற தொடர் வெளிவரப்போகின்றது என்ற அறிவிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.

ஏற்றுமதி பற்றி யோசித்துக்கொண்டிருந்த எனக்கு,நீயும் ஏற்றுமதியாளனாக மாற முடியும் எனக்கூறுவது போல் அமைந்திருந்தது அந்த அறிவிப்பு.

தொடர் ஆரம்பித்தது முதல் முடியும்வரை எனக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே வந்தது.அதிலிருந்த வழிகாட்டுதலின்படி வெறும் 250ரூபாய் செலவிலேயே எனது ஏற்றுமதி நிறுவனத்திற்கான அரசின் அனுமதியைப்பெற்றுவிட்டேன்.இந்த அனுமதியைப்பெற்றுத்தர சில ஏற்றுமதி ஆலோசகர்கள் பத்தாயிரம் ருபாய் வரை கேட்கிறார்கள்.

நான் மட்டும் அல்ல.எனது நண்பன் அசோக்கும் இப்போது ஏற்றுமதியாளராக விரும்பி என்னோடு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.இருவரும் நேரில் சென்று அவர்களை சந்தித்தோம்.

அவரது வழிகாட்டுதலின்படி முதல் ஏற்றுமதி ஆர்டர் துபாய் நாட்டிலிருந்து எங்களுக்கு கிடைத்தது.அவர் கொடுத்த குறுந்தகட்டில் இருந்துதான் அந்த இறக்குமதியாளரின் முகவரி எங்களுக்கு கிடைத்தது.இப்போது வாரந்தோறும் திருச்சியில் இருந்து காய்கறிகளை துபாய்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

எங்களது ஆர்வத்தையும்,வேகத்தையும் பார்த்த துபாய் நாட்டுக்காரர் இப்போது ஆர்டரை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகப்படுத்தி நிறைய காய்கறிகளை தொடர்ந்து எங்களிடம் வாங்கி வருகிறார்.

அரிதாசன் அவர்களிடம் அடிக்கடி எங்கெங்கு BYER SELLER BEET  நடக்கின்றன போன்ற விவரங்களை அவ்வப்போது கேட்டுத்தெரிந்துகொள்வோம்.சமீபத்தில் சென்னையில் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் நடத்திய வர்த்தக கண்காட்சி நடைபெறுவதாகக் கூறியதைக்கேட்டு அங்கு சென்றோம்.
                                                                 

அவர் கூறியபடியே அன்றைய நாள் முழுவதும் கண்காட்சி உள்ளேயே இருந்தோம்.எங்களைப்பற்றி எல்லாரிடமும் அறிமுகம் செய்து கொண்டோம்.எங்கள் ஆர்வத்தையும்,நாங்கள் பேசிய விவரங்களையும் கேட்ட தாய்லாந்து நாட்டு இறக்குமதியாளர் ஒருவர்,இப்போது மாதம் 2000கிலோ ஏலக்காய் அனுப்பச் சொல்லி ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
ரொம்பவும் மகிழ்வாய் இருக்கிறோம்.

                                                                                              அன்புடன்
                                                                                 கவுதம்  மற்றும் அசோக்
                                                                                ரெயின் டிராப் இண்டர்நேசனல்,
                                                                                  திருச்சி.செல்:9688338881
எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 1
http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_25.html

தொடர்புக்கு;
ஏற்றுமதி வழிகாட்டியாளர்
வீ.அரிதாசன்
94441 46807

Friday, November 8, 2013

சிக்கன் எமன்....???

சிறுநீரகங்களில்,கல்லீரலில் கேன்சர்

ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு

கொழுப்பு நிறைந்த ஈரல் நோய்,ஹார்மோன் பிரச்சினைகள்

 ஈசியாக வரவேண்டுமா...???


மரபுவழி மருத்துவ முறைகளால் நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை ஊருக்கு உரைக்கும் நமது பயணத்தில், எண்ணற்றோர் இணைந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி. இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் அவர்களும் இப்பயணத்திற்கு தமது ஆதரவை நல்கியுள்ளார்.

குறிப்பாக, ‘இனிப்பு’ ஆவணப்படத்தில் அவர் மிக முக்கியமான பங்கேற்பு ஒன்றினைச் செய்ய உள்ளார். அது என்ன என்பது படம் முடியும் வரைக்கும் கமுக்கமாகவே இருக்கட்டும்.
                                                                 

கடந்த 2001 ஆம் ஆண்டு நான் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ’பிராய்லர் சிக்கன்’ கறியை உண்பதனால் விளையும் தீங்குகளைப் பற்றி எழுதினேன். ‘சிக்கன் எமன்’ எனும் தலைப்பில் அக்கட்டுரை குமுதம் இதழின் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இக்கட்டுரைக்கு எதிராக, கோழிப் பண்ணை உரிமையாளர்கள், அலோபதி கால்நடை மற்றும் மனித மருத்துவர்கள் பொங்கி எழுந்தனர். கோழிப்பண்ணை அமைப்பினர், அலோபதி மருத்துவர்களின் புகைப்படங்களுடன் ‘சிக்கன் உண்ண உகந்தது. இதில் புரதம் உள்ளது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தனர். சன் தொலைக்காட்சி இதுகுறித்து ‘சிறப்பு நிகழ்ச்சி’ ஒளிபரப்பியது.

என்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டறிந்த எதிர்ப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தனர்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சம் எங்கள் குழுவினருக்கு இருந்தது. ஒரே வாரத்தில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் கோழிப் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனது கட்டுரையை ஆதரித்துப் பேசும் வல்லுனர்களை உடனடியாகத் தேடி அவர்களது உதவியைப் பெற்றாக வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு காட்டிய திரு.சைதை துரைசாமி (தற்போதைய மேதகு சென்னை மேயர்), இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் ஆகிய இருவரும் அந்தக் கட்டுரைக்குத் துணை நிற்கச் சம்மதித்தனர். இவர்கள் இருவரும் தங்கள் கட்டுரைகளை விரிவாக எழுதிக் கொடுத்தனர்.


’சிக்கன் எமன்’ கட்டுரையின் எதிர்வினை மட்டுமே நான்கு பக்கங்களில் வெளியானது. இதனால், சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவியலாத நிலை எதிரிகளுக்கு ஏற்பட்டது.

பிராய்லர் சிக்கன் உண்பது தீங்கானது எனும் உண்மை இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதை முதன் முதலில் ஒரு பெரும் ஊடகம் கூறியபோது, ‘அறிவியலுக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது’ என்றெல்லாம் அதை எதிர்த்தவர்கள்தான் அலோபதிக்காரர்கள். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பதில் கூட நியாயம் இருகிறது. அவர்களது தொழிலுக்கு ஆபத்து எனும் எண்ணத்தில் அவர்கள் எதிர்த்தார்கள்.
ஆனால், மக்கள் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அலோபதிக்காரர்கள் பிராய்லர் சிக்கன் விளம்பரங்களில் தங்கள் முகங்களைக் காட்டி பரப்புரை செய்தனர்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு பிராய்லர் மீது எச்சரிக்கை மனநிலை வந்துள்ளது. நாட்டுக் கோழி வளர்ப்பு பெருகத் துவங்கிவிட்டது. தமிழக கால்நடைத்துறை நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு கணிசமான மானியத் தொகையை வழங்கி வருகிறது.


சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோய்க்கும் அலோபதி தீர்வாகாது என்று மக்கள் புரிந்துகொள்ளும் நிலையும் வ்ரைவில் உருவாக வேண்டும் என்பதே நம் விருப்பம். அந்த விருப்பத்தின் பயணத்தில் நம்மாழ்வார் அவர்கள் நெடுங்காலமாக இருக்கிறார்.
உண்மையில் அவரது பயணத்தில் நான் இணைந்துள்ளேன்; நாம் இணைந்துள்ளோம்.

நம்மாழ்வார் ஐயாவுக்கும் அவரது அடியொற்றி வாழ்வியலை வகுத்துக்கொண்டுள்ள இயற்கைச் சமூகத்தினருக்கும் நன்றி!
ம.செந்தமிழன்

இது பற்றிய மேலதிக அதிர்ச்சி தகவல் இதோ...இங்கே

http://www.aanmigakkadal.com/2013/03/blog-post_5267.html

http://suvanampoga.blogspot.in/2013/03/blog-post_912.html#.UnhwY3CBnXA

http://www.amarkkalam.net/t7875-65


KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

KFCல் உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார். புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையேஉபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!! அந்தவகைக் கோழிகளின் சில படங்கள் கீழே…            

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!! நல்லா யோசிங்க.. KFCல் உண்ணும் முன்.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.

http://www.youtube.com/watch?v=99VeH0-R9Ro&feature=player_embedded

எனவே
பிராயிலர் கோழி சாப்பிடுவதை  நிறுத்தி கொள்ளுங்கள்...

Wednesday, November 6, 2013

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

பொள்ளாச்சியில் திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு ‍ 3 இளைஞர்கள் கைது

ஆசிட் விற்பனையை அரசாங்கம் தடை செய்தாலும் ஆசிட் வீச வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதை எப்படியும் பெறத்தான் செய்வான்.

திருட்டு ஒரு குற்ற செயல் என்று அறிவித்து விட்டதால் திருட்டு குறைந்து விடுவதில்லை என்பது போல..



தடை செய்யப்பட்ட எந்த பொருளும், எளிதிலோ அல்லது (பண பலம் கொண்டு) சற்றே சிரமமப்பட்டோ பெறப்படும் வகையில் தான் நமது நாட்டு சட்டங்களின் ஓட்டைகள் அமைந்துள்ளன.

ஒரு பெண்ணை சீரழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒருவனுக்கு ஒரு வேளை ஆசிட் கிடைக்கவில்லை என்றால் துப்பாக்கி கிடைக்கும், அதுவும் கிடைக்கவில்லை என்றால் கத்தி, அரிவாள் கிடைக்கும்.

அதே சமயம், இவ்வாறு ஒரு பெண்ணின் உயிரை பறித்தால் உன் தலை இருக்காது என்று சட்டம் இயற்றினால், அவனது கையில் ஆசிடை இலவசமாக கொடுத்தால் கூட அதை பயன்படுத்த மாட்டான்.

இது தான் வேறுபாடு ! இது தான் மனித இயல்பு !!

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

Thanks:Nashid Ahmed

Tuesday, November 5, 2013

ஆஸ்திரேலியன் ஆரஞ்சு...... ஆபத்து வந்துருச்சு

கிர்ணிப்பழம் சைஸில் இருந்தது அந்தக் கொய்யாப்பழம். 'இவ்ளோ பெரிசா?’ என வாய் பிளந்தபோது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ஹைபிரிட் கொய்யா!'' என்றார் பழக் கடைக்காரர். 
                                                         
பக்கத்தில், அப்படியே நம் ஊர் கொய்யா சைஸில், கொட்டை இல்லாத கலிஃபோர்னியன் திராட்சை; செக்கச்செவேல் என காபூல் மாதுளை, விதை இல்லாத பெரிய இலந்தை, 'லேத்’தில் அடித்துச் செய்ததுபோல் வார்த்தெடுத்த பளபள பெங்களூரு கேவன்டிஷ் வாழைப்பழம். 
                                                         
விவரம் அறியாப் பழக்கடைக்காரர், ''எல்லாமே நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!'' என்றார். 'இனிப்பு மட்டும்தான் பழத்தின் சுவையா?’ என்ற யோசனையுடன் கொஞ்சம் நகர்ந்தபோது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் ஆஸ்திரேலியன் ஆரஞ்சு கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. 
                                                                 
வழக்கமாக, கொஞ்சம் தொளதொளவென்ற தோலுடன், உரிக்க ரொம்பத் தோதாக இருக்குமே... அந்த கமலா ஆரஞ்சைக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடிவது இல்லை. ஆனால், கமலா ஆரஞ்சு பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லாம் 'கமலா’வுக்கோ, 'கமலாவின் பாட்டி’க்கோ தூரத்து உறவுகூடக் கிடையாது.                  

இப்படி எல்லாமே பெரிது பெரிதாக, கண்களை ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி செய்யப்படும் இவை எந்த அளவுக்கு உடலுக்கும் உழவுக்கும் நல்லது? 'இனிப்புச் சுவைக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத் துப் பிள்ளைங்களைக் கெடுக்காதீங்க... பழம் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப பழங்கள் மேலயும் பழி சொல்றீங்க!’ என்று பதற வேண்டாம். பழங்களைப் பரிந்துரைப்பதன் காரணமே, அதில் நிறைந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் கூட்டு இனிப்பு சேர்த்து சுவைபட அவை வழங்கும் அற்புதமான மருத்துவத் திறனுக்காகத்தான். 

ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு இனங்கள் எத்தனை சத்து நிரம்பியவை? அதிக இனிப்பும், பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே இவற்றில் கிடைக்கும். ஒட்டு ரகங்களின் கூடுதல் இனிப்பைப் பார்த்தால், 'கொஞ்சம் வைட்டமின் தெளித்த மைசூர்பாகு தேவலையோ?’ எனத் தோன்றுகிறது. கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்னைக்கும் உகந்தது என்பதால், மாதுளைக்கு எப்போதும் கனி வகையில் தனி இடம் உண்டு. 

ஆனால், தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையின் இனிப்பு, நம் ஊர் நாட்டு மாதுளையை ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிக்கும் சர்க்கரை வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? மெள்ள உள்வாங்கும் இனிப்புடன், இரும்புச் சத்தையும், நார்ச் சத்தை யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின் சுவையும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுளை, விலை குறைவாக, ஓரமாக இருப்பது வேதனை. 

மதுரை, தேனிப் பக்கம் கொடி கட்டிப் பறக்கும் கொட்டை உள்ள பன்னீர்த் திராட்சையின் உள்ளே இருக்கும் விதைகூட ஆரோக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'மஸ்கட் திராட்சை’ என விவசாயிகளால் அழைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்சையின் கொட்டையில் உள்ள எண்ணெய், இதய நோய்க்கு மருந்து. 'ரிஸ்வெரட்ரால்’ எனும் சத்து நிறைந்திருக்கும் இந்த கிரேப் சீட் ஆயிலுக்கு இப்போது கிரேக்க உலகிலும் வளர்ந்த நாடுகளிலும் ஏக கிராக்கி. ஆனால் நாமோ, 'இதென்ன துவர்க்கிறது’ எனத் திராட்சையைத் தின்றுவிட்டு, கொட்டையைத் துப்புகிறோம். 

புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபோர்னியன் இனிப்பு திராட்சையை நமக்குக் கூடுதல் விலையில் தந்துவிட்டு, திராட்சை விதை எண்ணெயைக் கேப்சூல் குப்பியில் அடைத்து, மருத்துவரை வைத்து மிரட்டிச் சாப்பிடவைக் கிறார்கள். ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பெரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக, பெரிதாக நமக்குள் புகும் சுவைகள், இத்தனை நாள் இருந்துவந்த பழங்களின் பொத்தாம்பொதுவான பயனையும் காலி செய்துவிடுமோ என்று அஞ்சவைக்கிறது. 

உணவின் சத்து விஷயம் இப்படி என்றால், ஹைபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் உரமும், பூச்சிக்கொல்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும்,விலைமதிப்பில்லாத மனித உடலை மாசுபடுத்தும் கேடு இன்னொரு பக்க வேதனை. 

'இத்தனை கோடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப் பக்கம் பறித்து வருவதைவைத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பேசுங்க பாஸ்!’ என இணையத்தில் இதைப் படிக்கும் யாரேனும் திட்டி எழுதக்கூடும். போதாக்குறைக்கு, போன வாரம் நமது பிரதம மந்திரி வேறு, 'விவசாயத்தில் தொழில்நுட்பம் ரொம்ப அவசியம். மேம்போக்காக எதிர்க்க வேண்டாம். விவாதிக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிஉள்ளார். 

நாங்களும் தொழில்நுட்பத்தை மேம்போக்காக எதிர்க்கவில்லை. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள் நோக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல் உன் அனுபவத்தைவிட மேலானது’ என்ற மமதை இன்றி விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விடை மட்டும் தான் சூழலுக்கு இசைவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம் தரும். நாட்டின் இறையாண்மைக்குப் பலம் தரும்; வாருங்கள் விவாதிப்போம்! .

சீக்கிரமே சம்பாத்தித்து சீக்கிரம் அனுபவித்து சீக்கிரமே சாகும் திட்டத்தை செயல்படுத்தும் கார்பரேட்  பணமுதலைகளின் குறுக்கு புத்தி இது.

நன்றி-மருத்துவர் சிவராமன்.

மேலும் அதிக விவரங்களுக்கு...

http://valaiyukam.blogspot.in/2011/04/bt.html


Monday, November 4, 2013

மரபணு மஞ்சள் வாழைப்பழம் -அதிர்ச்சி தகவல்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு  வாழைப்பழமாவது  சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு  மாற்று பெரிய  மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே  வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ்,  தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,  புட் பாய்சன்... என்று கடுமையாக  அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது  இந்த மரபணு மாற்று  மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

 இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.  இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். 
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். 

பூச்சிக் கொல்லிகளை  அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை  என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன்  இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக  விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை. 
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ்  வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
 
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின் டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர். 

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில்  இந்த  பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை   பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது. 

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய  கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. 

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த  பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. 

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே  விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.  ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும். 
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது
 
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது:
 

பெங்களூர் வாழைப்பழம் என்று  விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி.  ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி.  ரக  கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது. இவ்வகை பி.டி.  ரக மரபணு மாற்று  வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்
         
புறக்கணிப்போம் ...புறக்கணிப்போம்...
மரபணு மாற்றுப்பயிர்களை புறக்கணிப்போம்