Saturday, November 2, 2013

வீட்டிற்கு இரு மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம்...இது என்ன வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம் என நினைக்கலாம்.
காலில் சக்கரம் கட்டாத குறையாக மக்கள் ஓடி உழைக்கும் காலம் இது....

அருகில் உள்ள மனிதர்களிடம் பேசக்கூட,உடல் நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் எந்நேரமும் பிசியாக உள்ளனர்...

இவ்வளவு உழைத்தும் இவர்கள் அடகு வைப்பது தம் உடல் நலனைத்தான்...
இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லா வீடுகளிலும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு உள்ளது மலச்சிக்கலும்,மூல நோயும்,
குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினைகள் தான்.....

பதினைந்து வருடத்திற்கு முன்னதாக வீட்டுக்கு வீடு முருங்கை மரமும்,பப்பாளியும் இருந்தது...ஆண்,பெண் ஹார்மோன் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு கிடைத்தது....

ஆனால் இக்கால மருத்துவர்களால் , இவ்வியாதிகள் பணம் கொட்டும் தொழிலாக பார்க்கப்படுகிறது...2000 ஆண்டு வெறும் 90 கோடி புழங்கிய குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினை மருத்துவ உலகில் இப்போது 40 ஆயிரம் கோடி கொட்டும் தொழிலாக உள்ளது...

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே இதற்கு அருமையான தீர்வு இருக்க ரசாயன மருந்துகளில் மக்கள் மயங்கிக் கிடப்பதேன்....???!!!

முருங்கையிலும்,பப்பாளிப்பழத்திலும் சிறந்ததோர் தீர்வு இருக்க வேறென்ன வேண்டும்...???

முருங்கையும்,பப்பாளியும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய மரங்கள்...இவை வளர சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும்.சிலர் இவை இரண்டையும் மொட்டை மாடியில்  கூட வளர்க்கின்றனர்.ஆனால் காய்க்கும் திறன் குறையும்.

நகர்ப்புறங்களில் ஒரு சதுர அடி இடம் கிடைத்தாலும் அதிலும் சிமெண்டை கொட்டி பிளாட்டாக விற்றுவிடுகின்றனர்.பணம் நிறைய சம்பாதித்தும் உடல் ஆரோக்கியத்தை இழந்த வாழ்க்கையினால் என்ன பயன்...???

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்...???!!!

சீக்கிரமே பலன் தரும் அதிக இடம் தேவைப்படாத ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆக வேண்டிய இம்மரங்களினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் கொஞ்ச நஞ்சமல்ல

முருங்கையின் பலன்கள்:

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். 

குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது .
                                                      
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பப்பாளியின் பயன்கள்:-

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 40 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.

பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
                                                         

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. 

நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பெண்களுக்கு தீராத பிரச்னை என்றால் முடி கொட்டும் பிரச்னை தான். தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.


  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவன் எந் நோயையும் அதற்குரிய 
நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
புகாரி-5678

இவ்வளவு பயன் தரும் எளிதில் கிடைக்க கூடிய இம்மரங்கள் நம் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போமா...???!!!

Sunday, October 27, 2013

தண்ணீர் சிக்கனம்

சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் அத்தியாவசியச்சொத்து தண்ணீரும்,காற்றுமே...

சாப்பாடு இல்லாமல் 3 நாட்கள் வரை வாழும் மனிதன் காற்று இல்லாமல் 5 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.
சுத்தமான காற்றும்,தண்ணீரும் வேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏரி அல்லது குளம் அல்லது அட்லீஸ்ட் சுயநலத்திற்காகவாவது நம் வீட்டிற்கு மட்டும் சேமிப்போம்.

நமக்கு பிறகு நம் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அமைத்து,தண்ணீரை சிக்கனமாக சேமிக்க பழகிக்கொள்வோம்...

மணிக்கணக்கில் பாத்ரூமிலும்,டாய்லட்டிலும் நேரத்தையும்,தண்ணீரையும் வீணடிக்காமல் சேமிப்போம்

http://www.youtube.com/watch?v=IZNTnxhoU1k
http://www.youtube.com/watch?v=9Odg7Twlq1I
http://www.youtube.com/watch?v=u0ghut49oog

இது பருவ மழை நேரம்...இந்நேரத்தில் புத்திசாலித்தனமாய் ஒரு மரமாவது நட்டு மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் அறிவாளியாக இருக்க முயற்சி செய்வோம்.





இல்லையென்றால் இதே நிலைதான் நமக்கும்

Friday, October 25, 2013

சீட்லெஸ் பழங்கள் ???

                                                ஹை பிரிட் சப்போட்டோ


                                                   சீட்லெஸ் திராட்சை


                                 
   
                                                   சீட்லெஸ் நாவல்பழம்


                                                   
                                               
                                                    சீட்லெஸ் மாதுளை
                                                   
                                               
                                                     

                                                     சீட்லெஸ் பப்பாளி

                                                       

மிகக்குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் காண துடிக்கும் பேராசை விவசாயிகளின்  ஊனமுற்ற குறைமாத குழந்தைகள்
போன்றவை தான் இவை ...

ஹைபிரிட் தக்காளீ,ஹைபிரிட் வெங்காயம்,ஹைபிரிட் எலுமிச்சை என எங்கெங்கு காணினும் ஹைபிரிட்டும்,சீட்லெஸ்ஸும் தான் ...

                                                     
விதையில்லா பழங்கள் விளைவிக்கும் முயற்சி பசுமைப்புரட்சிக்கு
பிறகு ஏற்பட்டது...மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

நாவல்பழம்,இலந்தைப்பழம்,ஈச்சம்பழம் எல்லாம் விரும்பி சாப்பிட்ட மக்கள் ஆப்பிள்,ஆரஞ்சு  மட்டுமே உயர்ந்த பழ வகைகள் என தற்போது கருதுகிறார்கள்.

முன்னாடி ஸ்கூல் அருகில் இம்மாதிரியான பழங்கள் விற்கும்.....
இப்ப ஸ்கூல் அருகில் உள்ள கடைகளில் சரம் சரமாக கண்ட கழிய எண்ணெய்களில் இருந்து பொறிக்கப்பட்ட சிப்ஸுகள் தான் கலர் கலரான பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது...

விதைகளையும்,கொட்டைகளையும் நாம் சிறு வயதில் அறியாமல் பழங்களோடு விழுங்கும்போதும்,பறவைகளின் கழிவுகளின் மூலமும் விதை பரவலாக்கம் நடைபெற்றது.

ஆனால்,விதையே இல்லாத பழங்களின் மூலம் விதை பரவலாக்கலை தடுக்கும் திட்டம் திட்டமிட்டு பரப்பபட்டது...இயற்கை மற்றும் நாட்டு வைத்தியம் எல்லாம் மூடத்தனம் என்ற பெயரில் இயற்கையாக நம் ஊரிலேயே கிடைக்கும் பழங்களை,தானியங்களை சாப்பிடுவது பத்தாம்பசலித்தனமாக காட்டப்பட்டு...நமக்கும் சற்றுப்பொருந்தி வராத குளிர்பிரதேச பழங்கள்,தானியங்கள் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என ஆங்கில மருத்துவர்களால் பாடம் கற்பிக்கப்பட்டது.

சீட்லெஸ் பழங்களை உண்ணும் நாம் எதை வைத்து மரத்தை நடுவோம்???
நம் சந்ததிகளுக்கு வெற்று பூமியை விட்டுச்செல்லப்போகிறோமா..???
புறக்கணிப்போம்....சீட்லெஸ் பழங்களை....!!!
ஆதரிப்போம் இயற்கை விவசாயத்தை...!!!

உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;
குர் ஆன் 2:195

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்;

குர் ஆன் 6:95

Monday, October 14, 2013

தியாகத்திருநாள்......என்ன படிப்பினை பெற்றோம்....???

குர்பானி கொடுத்து இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு 
கூறும் நன்னாள்...

எத்தனையோ தியாகத்திருநாளை நாம் கடந்தாலும்,தினமும் இப்ராஹீம் நபியின் அருளும்,பரக்கத் வேண்டி பிரார்த்தனை செய்தும் இன்னும் நம்மிடம் அற்ப குணங்களான பிடிவாதமும்,முன் கோபமும் நம்மை பிடித்துக்கொண்டு விடாமலே இருக்கிறது.
                                             

இப்ராஹீம் நபியிடமும்,அவருடைய மனைவியிடமும்,அவருடைய பிள்ளையிடமும் எவ்வளவு அழகிய முன்மாதிரி உள்ளது.....

பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் எப்படி ஒரு முன்மாதிரிக்குடும்பத்தை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்......!!! சுபுஹானல்லாஹ்...

நம்மில் எத்தனை பேர் முன்மாதிரி முஸ்லிம் குடும்பமான இப்ராஹீம் அலை அவர்களின் குடும்பத்தைப்பற்றி நம் இல்லங்களில் பேசியிருப்போம்...விவரித்திருப்போம்...

தந்தையின் தியாகம் எப்படிப்பட்டது....

தாயாரின் தியாகம் எப்படிப்பட்டது...

பிள்ளையின் பொறுமையும்,தியாகமும் எப்படிப்பட்டது......

நம் வீடுகளிலே அதிகம் பேசப்பட வேண்டிய அழகிய முன்மாதிரிகள்...

ஒரு இஸ்லாமியக்குடும்பம் செய்த தியாகம் இந்நன்னாளில் நினைவு கூறப்பட்டு நம்மிடையே அத்தியாகச்செயல் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.....

நம்முடைய தவறுகள்,பிழைகள் களையப்பட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்ள உறுதிமொழி எடுக்க வேண்டும்

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.9:114

ஒவ்வொரு இல்லத்தின் அங்கத்தினரும் பொறுமையையும்,இரக்க குணத்தையும் இந்நன்னாளில் அதிகமாக வளர்த்துக்கொள்வோம்...

திடல் தொழுகையில் குடும்பத்தோடு பங்கேற்று பெருநாள் உரையை கேட்டு 
நம்மிடையே இரக்க குணமும்,பொறுமையும் அதிகமாக இறைவனிடம் துஆ செய்வோம்...

பெண்கள் பெருநாள் அன்று காலை சமையலை எளிமையாக செய்துவிட்டு பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள ஆர்வமாக செல்லுங்கள்...வீட்டிலோ,பெண்கள் சேர்ந்து தொழுவதை தவிர்த்துவிட்டு திடலில் தொழுது நபிவழியை உயிர்ப்பிக்கவும்...

தயவு செய்து அடுப்பங்கரையில் குடி இருக்காமல் பெருநாள் உரையை கேட்டு பயனடையவும்....
________________________________________________________________________________
திடல் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்...

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும்

 “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

Saturday, October 12, 2013

சிந்திப்போரின் சிந்தனைக்கு....!!!

நீ மனிதனை இகழ்ந்து வாழாதே...!!!
    இறைவனைப் புகழ்ந்து வாழ்...!!!

நீ வல்லவனாக வாழ்வதை விட...
    நல்லவனாக வாழ்...!!!

நீ குடித்து வாழாதே...!!!
    குடும்பத்தை மகிழ்வித்து வாழ்..!!!

நீ திருடுபவனாக வாழாதே..!!!
    திருத்துபவனாக வாழ்...!!!

நீ பிறர் பொருளை எடுத்து வாழாதே...!!!
    பிறருக்கு பொருளை கொடுத்து வாழ்...!!!

நீ பிறர் உன்னிடம் திருடுவதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரிடம் திருடாதே...!!!

நீ பிறர் உன்னை அடிப்பதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை அடிக்காதே...!!!

நீ பிறரை கொல்லாதே...!!!
    பிறரால் கொல்லப்படுவாய்...!!!

நீ பிறர் உன்னை கொலை செய்வதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை கொலை செய்யாதே...!!!

நீ உன் மனைவி,மகள்,சகோதரி கற்பை இழந்துவிடுவதைவிரும்ப மாட்டாய்..!!!
     பிறர் மனைவி,மகள்,சகோதரியின் கற்பை இழக்கச் செய்து விடாதே...!!!


                                      

இறைவன் கூறுகின்றான்....

நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக்கொலை செய்கிறாரோ,அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் அவர் கொலை செய்தவர் போன்றவராவார்.மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
குர் ஆன் 5;32

எவனொருவன் , ஒரு நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். இறைவன் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும்  தயாரித்திருக்கிறான்.குர் ஆன் 4:93

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.குர் ஆன் 3:185

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா??? குர் ஆன் 47:24

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...


நீங்கள் மண்ணில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள்.
விண்ணில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
நூல்:அபூதாவூத்

தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவர் அவருக்கு வாழ்வு அளித்தவர் போலாவார்.
நூல்:இப்னுமாஜா

ஒருவர் தமக்கு எது கிடைக்க வேண்டும் என விரும்புவாரோ அதையே அவர் மக்களுக்கு விரும்பட்டும்.
நூல்:முஸ்லிம்.

தொகுப்பு:A.அமீர்

Sunday, September 29, 2013

முஸ்லிம் பெண்ணே...!!! ஒரு நிமிடம்...!!!

முஸ்லிம் பெண்ணே...!!! 
உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!!
பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே...!!!

அசிங்கமான,அருவருப்பான பேச்சுகள்,கேலி,கிண்டல்,புறம்,அவதூறு 
ஆகியவற்றில் இருந்து உனது நாவைப்பாதுகாத்துக்கொள்....!!!

குறைவாக பேசு....!!!
வெட்கமும்,குறைவாக பேசுவது ஈமானின் அம்சமாகும்.
கெட்ட வார்த்தையும்,அதிகமாக பேசுவதும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
(ஆதாரம்-திர்மிதி-1950)

அந்நிய ஆண்களிடம் பேசும்போது குழைந்து குழைந்து பேசாதே...!!!
எவனது உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் கெட்ட எண்ணம் கொள்வான்.

கல்வியை தேடுவதில் ஆர்வமாக இரு.
மதரசா,பள்ளிவாசல் போன்ற இடங்களில் 
அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு 
நல்ல விசயங்களின் மூலம் ஈமானைப்பலப்படுத்து...!!!

       

நீ அறியாமைக்காலத்துப் பெண் போல 
தேவையின்றி வெளியில் செல்லாதே...!!

உன் தலைமுந்தானையை தாழ்த்திக்கொள்....
வெளியில் செல்லும்போது அலங்காரத்தை
மறைக்க பர்தா அணிந்து கொள்..!!!
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாக்களை அணியாதே...!!!
வெளியில் செல்லும்போது வாசனைத்திரவியங்களை பூசாதே...!!!

கணவனுக்காக மட்டுமே அலங்கரித்துக்கொள்...!!!
கணவனுக்கு முழுமையான முறையில் கட்டுப்படு...!!!
சிறந்த மனைவி கணவன் தன்னை பார்க்கும்போது மகிழ்வூட்டுவாள்...!!!

கணவனுடைய சொத்துக்களையும் உடைமைகளையும்,
குடும்பத்தாரையும் பேணிப்பாதுகாத்துக்கொள்...!!!

கணவனுடைய விருப்பமில்லாமல் 
எந்த ஆணையும் வீட்டிற்குள் அனுமதிக்காதே...!!!

இரத்தபந்த உறவுகளை இணைத்துக்கொள்.
அவர்கள் வெறுத்த போதிலும் சரியே...!!!

அண்டை வீட்டினரிடம் நல்ல முறையில் நடந்துகொள்.!!!

கணவருடைய தாய்,தந்தையரிடம் மரியாதையாகவும்,
பணிவாகவும் நடந்துகொள்....!!!
                             

உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடு.
அதுவே மிகச்சிறந்த செல்வமாகும்.

உன் குடும்பத்தாரை ஒவ்வொரு நாளும் தொழ ஏவு....!!!
நரக நெருப்பை விட்டு காப்பாற்று....!!!

தினமும் குர் ஆனை தமிழாக்கத்துடன் படி..!!!

உன்னுடைய ஒவ்வொரு மணித்துளிகளை,
நேரங்களை சரியான முறையில் பயன்படுத்து...!!!
வீணும்,வெட்டியுமாக நேரத்தை கழிக்காதே...!!!

நீ படித்த இந்த உபதேசங்களை செயல்படுத்து...!!!
பிறருக்கும் சொல்...!!!

Thursday, September 12, 2013

மகிழ்ச்சியாய் வாழ....

1,இன்றைய நாளுக்காகவே வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீ வாழ்க்கையை மேற்கொள்.
இல்லையெனில்,உனது எண்ணங்கள் சிதறும்;குழப்பம் ஏற்படும்;கவலையும் துக்கமும் அதிகரிக்கும்.
அதாவது,நீ காலைப்பொழுதை அடைந்தால் மாலைப்பொழுதை எதிர்பார்க்காதேமாலைப்பொழுதை அடைந்தால் காலைப்பொழுதை எதிர்பார்க்காதே!
2,நேற்றை முற்றிலும் மறந்துவிடு.முடிந்து போனதைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பது ஒரு வகைப்பைத்தியக்காரத்தனம்
3,வருங்காலத்தைப்பற்றிய கவலையில் மூழ்காதே;வருங்காலம் என்பது மறைவானது.அது வரும் வரைஅதைப்பற்றி சிந்திக்காதே
4,எதிரிகளின்,பொறாமைக்காரர்களின் விமர்சனங்களைக்கண்டு தளர்ந்து விடாதே;தைரியமாக இரு.விமர்சனங்கள் உனது மதிப்பை மேலும் உயர்த்தும்.
5,இறைநம்பிக்கையும்,நற்செயலும் உனது வாழ்வில் உண்மையான,சிறந்த மகிழ்ச்சியை உருவாக்கும்.
6,நிம்மதி,மன அமைதி,ஆறுதல் இவை உன் வாழ்க்கையில் மலர வேண்டுமென்றால் இறைவனைத்துதி.
7,அனைத்தும் இறைவனது முடிவின்படியே நடக்கின்றது என்பதை அடியார்கள் உணர வேண்டும்.
8,எவரிடமும் நன்றியை எதிர்பார்க்காதே.
9,கடுமையான இன்னல்களைத்தாங்கிக்கொள்ள உன்னை நீ தயார்படுத்து
10,நடந்தவையெல்லாம் உனது நன்மைக்கே என நம்பு
11,நன்மையானதையே இறைவன் இறைநம்பிக்கையாளர்கள் மீது விதிக்கிறான்.
12,இறைவனது அருட்கொடைகளைச் சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்து.
13,பலரை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய் என்பதைப்புரிந்து கொள்.
14,விரைவில் விடியல் வரும்
15,சோதனைகள் வரும்போது இறைவனைத்தொடர்புகொள்.
16,சோதனைகள் உன்னைச் செதுக்கும்.உன் இதயத்தை வலுப்படுத்தும்
17,துன்பத்திற்குப்பின் இன்பம் உண்டு.
18,அற்பக்காரியங்கள் உன்னை அழித்து விட வேண்டாம்
19,உன் இறைவன் மிகவும் மன்னிப்பவன்
20,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே!!!
21,ரொட்டி,தண்ணீர்,நிழல் இவை மூன்றும்தான் வாழ்க்கை.இவற்றை விட அதிகமானப்பொருட்களைத்தேடுவதில் உனது வாழ்க்கையைத் தொலைத்து விடாதே
22,உங்களது வாழ்வாதாரம் வானத்தில் உள்ளது,உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதும் வானத்தில்தான் உள்ளது. அல் குர் ஆன்51:22
23,நடந்துவிடுமோ என நீ அஞ்சக்கூடியவற்றில் பெரும்பாலானவை நடைபெறாது.
24,சோதனைக்கு ஆளானவர்களிடம் உனக்கு முன்மாதிரி உள்ளது.
25,இறைவன் ஒரு சமுதாயத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான்.
26,துயரங்கள் ஏற்படும்போது பெருமானார் கற்றுத்தந்தப் பிரார்த்தனைகளை ஓது.
27,நல்ல பயன்மிக்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இரு.சும்மா இருக்காதே.
28,வதந்திகளை விட்டுவிடு.அவற்றை நம்பாதே.
29,உனது பகை உணர்வும்,பழி வாங்கும் எண்ணமும் உனது எதிரியை விட உன் நலனைத்தான் அதிகம் பாதிக்கும்.
30,துன்பங்கள் உனது பாவங்களைப்போக்கும்.
இந்த அடிப்படைக்கூறுகளை உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீ கடைப்பிடித்தால்....
மகிழ்ச்சியுடன் வாழ்வாய்
மனநிம்மதியுடன் வாழ்வாய்
நற்செய்தியுடன் வாழ்வாய்
நம்பிக்கையுடன் வாழ்வாய்.
-டாக்டர்.ஆயில் அலகர்னீ