Sunday, September 29, 2013

முஸ்லிம் பெண்ணே...!!! ஒரு நிமிடம்...!!!

முஸ்லிம் பெண்ணே...!!! 
உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!!
பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே...!!!

அசிங்கமான,அருவருப்பான பேச்சுகள்,கேலி,கிண்டல்,புறம்,அவதூறு 
ஆகியவற்றில் இருந்து உனது நாவைப்பாதுகாத்துக்கொள்....!!!

குறைவாக பேசு....!!!
வெட்கமும்,குறைவாக பேசுவது ஈமானின் அம்சமாகும்.
கெட்ட வார்த்தையும்,அதிகமாக பேசுவதும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
(ஆதாரம்-திர்மிதி-1950)

அந்நிய ஆண்களிடம் பேசும்போது குழைந்து குழைந்து பேசாதே...!!!
எவனது உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் கெட்ட எண்ணம் கொள்வான்.

கல்வியை தேடுவதில் ஆர்வமாக இரு.
மதரசா,பள்ளிவாசல் போன்ற இடங்களில் 
அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு 
நல்ல விசயங்களின் மூலம் ஈமானைப்பலப்படுத்து...!!!

       

நீ அறியாமைக்காலத்துப் பெண் போல 
தேவையின்றி வெளியில் செல்லாதே...!!

உன் தலைமுந்தானையை தாழ்த்திக்கொள்....
வெளியில் செல்லும்போது அலங்காரத்தை
மறைக்க பர்தா அணிந்து கொள்..!!!
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாக்களை அணியாதே...!!!
வெளியில் செல்லும்போது வாசனைத்திரவியங்களை பூசாதே...!!!

கணவனுக்காக மட்டுமே அலங்கரித்துக்கொள்...!!!
கணவனுக்கு முழுமையான முறையில் கட்டுப்படு...!!!
சிறந்த மனைவி கணவன் தன்னை பார்க்கும்போது மகிழ்வூட்டுவாள்...!!!

கணவனுடைய சொத்துக்களையும் உடைமைகளையும்,
குடும்பத்தாரையும் பேணிப்பாதுகாத்துக்கொள்...!!!

கணவனுடைய விருப்பமில்லாமல் 
எந்த ஆணையும் வீட்டிற்குள் அனுமதிக்காதே...!!!

இரத்தபந்த உறவுகளை இணைத்துக்கொள்.
அவர்கள் வெறுத்த போதிலும் சரியே...!!!

அண்டை வீட்டினரிடம் நல்ல முறையில் நடந்துகொள்.!!!

கணவருடைய தாய்,தந்தையரிடம் மரியாதையாகவும்,
பணிவாகவும் நடந்துகொள்....!!!
                             

உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடு.
அதுவே மிகச்சிறந்த செல்வமாகும்.

உன் குடும்பத்தாரை ஒவ்வொரு நாளும் தொழ ஏவு....!!!
நரக நெருப்பை விட்டு காப்பாற்று....!!!

தினமும் குர் ஆனை தமிழாக்கத்துடன் படி..!!!

உன்னுடைய ஒவ்வொரு மணித்துளிகளை,
நேரங்களை சரியான முறையில் பயன்படுத்து...!!!
வீணும்,வெட்டியுமாக நேரத்தை கழிக்காதே...!!!

நீ படித்த இந்த உபதேசங்களை செயல்படுத்து...!!!
பிறருக்கும் சொல்...!!!

Thursday, September 12, 2013

மகிழ்ச்சியாய் வாழ....

1,இன்றைய நாளுக்காகவே வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீ வாழ்க்கையை மேற்கொள்.
இல்லையெனில்,உனது எண்ணங்கள் சிதறும்;குழப்பம் ஏற்படும்;கவலையும் துக்கமும் அதிகரிக்கும்.
அதாவது,நீ காலைப்பொழுதை அடைந்தால் மாலைப்பொழுதை எதிர்பார்க்காதேமாலைப்பொழுதை அடைந்தால் காலைப்பொழுதை எதிர்பார்க்காதே!
2,நேற்றை முற்றிலும் மறந்துவிடு.முடிந்து போனதைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பது ஒரு வகைப்பைத்தியக்காரத்தனம்
3,வருங்காலத்தைப்பற்றிய கவலையில் மூழ்காதே;வருங்காலம் என்பது மறைவானது.அது வரும் வரைஅதைப்பற்றி சிந்திக்காதே
4,எதிரிகளின்,பொறாமைக்காரர்களின் விமர்சனங்களைக்கண்டு தளர்ந்து விடாதே;தைரியமாக இரு.விமர்சனங்கள் உனது மதிப்பை மேலும் உயர்த்தும்.
5,இறைநம்பிக்கையும்,நற்செயலும் உனது வாழ்வில் உண்மையான,சிறந்த மகிழ்ச்சியை உருவாக்கும்.
6,நிம்மதி,மன அமைதி,ஆறுதல் இவை உன் வாழ்க்கையில் மலர வேண்டுமென்றால் இறைவனைத்துதி.
7,அனைத்தும் இறைவனது முடிவின்படியே நடக்கின்றது என்பதை அடியார்கள் உணர வேண்டும்.
8,எவரிடமும் நன்றியை எதிர்பார்க்காதே.
9,கடுமையான இன்னல்களைத்தாங்கிக்கொள்ள உன்னை நீ தயார்படுத்து
10,நடந்தவையெல்லாம் உனது நன்மைக்கே என நம்பு
11,நன்மையானதையே இறைவன் இறைநம்பிக்கையாளர்கள் மீது விதிக்கிறான்.
12,இறைவனது அருட்கொடைகளைச் சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்து.
13,பலரை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய் என்பதைப்புரிந்து கொள்.
14,விரைவில் விடியல் வரும்
15,சோதனைகள் வரும்போது இறைவனைத்தொடர்புகொள்.
16,சோதனைகள் உன்னைச் செதுக்கும்.உன் இதயத்தை வலுப்படுத்தும்
17,துன்பத்திற்குப்பின் இன்பம் உண்டு.
18,அற்பக்காரியங்கள் உன்னை அழித்து விட வேண்டாம்
19,உன் இறைவன் மிகவும் மன்னிப்பவன்
20,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே!!!
21,ரொட்டி,தண்ணீர்,நிழல் இவை மூன்றும்தான் வாழ்க்கை.இவற்றை விட அதிகமானப்பொருட்களைத்தேடுவதில் உனது வாழ்க்கையைத் தொலைத்து விடாதே
22,உங்களது வாழ்வாதாரம் வானத்தில் உள்ளது,உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதும் வானத்தில்தான் உள்ளது. அல் குர் ஆன்51:22
23,நடந்துவிடுமோ என நீ அஞ்சக்கூடியவற்றில் பெரும்பாலானவை நடைபெறாது.
24,சோதனைக்கு ஆளானவர்களிடம் உனக்கு முன்மாதிரி உள்ளது.
25,இறைவன் ஒரு சமுதாயத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான்.
26,துயரங்கள் ஏற்படும்போது பெருமானார் கற்றுத்தந்தப் பிரார்த்தனைகளை ஓது.
27,நல்ல பயன்மிக்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இரு.சும்மா இருக்காதே.
28,வதந்திகளை விட்டுவிடு.அவற்றை நம்பாதே.
29,உனது பகை உணர்வும்,பழி வாங்கும் எண்ணமும் உனது எதிரியை விட உன் நலனைத்தான் அதிகம் பாதிக்கும்.
30,துன்பங்கள் உனது பாவங்களைப்போக்கும்.
இந்த அடிப்படைக்கூறுகளை உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீ கடைப்பிடித்தால்....
மகிழ்ச்சியுடன் வாழ்வாய்
மனநிம்மதியுடன் வாழ்வாய்
நற்செய்தியுடன் வாழ்வாய்
நம்பிக்கையுடன் வாழ்வாய்.
-டாக்டர்.ஆயில் அலகர்னீ